February 23, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....

History

கீதைன்னாகூலி வேலைதான் !!

காந்திஜிக்கு கீதை என்றால் உயிர்.

தினமும் அதன் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விடுவார்

விபரமறிந்தவர்களே கீதையை படிக்க வேண்டுமானால் பகீரத பிரயத்தனம் செய்தாக வேண்டும். சாதாரணமானவர்கள் கேட்கவே வேண்டாம்….

ஆளை விடுங்க சாமி!’ என ஓடி விடுவார்கள். ஆனால், கற்றலின் கேட்டலே எளிது என்பதில் நம்பிக்கையுடைய ஒரு நண்பர், காந்திஜியைப் பார்க்க வந்தார்.

“”
ஜி! தாங்கள் கீதையில் பெரிய வல்லுநர். எனக்கும் அதன் சாரத்தைக் கற்றுத் தரவேண்டும்,” என்றார்.

காந்திஜி சிரித்துக் கொண்டார்.

“”சரி.. சரிஆஸ்ரமத்தில் சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வண்டி வண்டியாகச் செங்கல் வந்து இறங்குகிறது. வண்டிக்கு எத்தனை செங்கல் வந்து இறங்குகிறது என்று குறித்து என்னிடம் தினமும் கணக்கு கொடுங்கள்,” என்றார்.

வந்தவரும், வேலையை முடித்துக் கொடுத்தார். மறுநாளும் அதே வேலை…. இப்படியே சில நாட்கள் தொடர, வந்தவர் பொறுமை இழந்து விட்டார்.

“”ஜி! நான் தங்களிடம் கீதை கேட்க வந்தால், நீங்கள் என்னைக் கூலிக்காரனைப் போல வேலை செய்யச் சொல்கிறீர்களே! எப்போது கீதை கற்றுத் தரப் போகிறீர்கள்?” என்றார் விரக்தியுடன்.

“”அது தான் கற்றுத் தந்தாகி விட்டதேஎன்றார் காந்திஜி.

“”நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்ற நண்பருடன் உரையாடலைத் தொடர்ந்தார் காந்திஜி.

“”இத்தனை நாள் செய்த வேலைக்கு கூலி வாங்கினீர்களா?”

“”இல்லை

“”இந்த வேலையைச் செய்ததால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தா?
“”
அதுவும் இல்லை”.

பலன் கருதாமல், தன்னலமே இல்லாமல், பிறருக்காக பணி செய்வதென்பது தான் கீதையின் சாரம். இதைச் செய்தாலே கீதை படித்த மாதிரி தான்,” என்றார் காந்திஜி.

நண்பரின் மனம் நெகிழ்ந்தது.

2)

Moral

எளிமையாக எங்கும் வாழலாம் !!!

தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான்

விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது.

இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார்.

“”நாரதரே! பிரச்னை இப்படி..” என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,”என்றான் வருத்தத்துடன்.

“”அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!” எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.
அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார்.

“”முனிவரே! தலையில் என்ன பாய்?” என்றான் இந்திரன்.

“”அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

“”ஆகாஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,” என்று எண்ணியவன் மாளிகைக் கட்டுமானப்பணியை நிறுத்தி விட்டான்.

3)

fun

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், “”ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுஎன்றான்

கூடவே, “”என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!” 

“”இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடுஎன்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், “”என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?” 

கணவன் பொறுமையாகச் சொன்னான், “”இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?”

4)History

கார்ல் மார்க்ஸ் சொன்ன கதை !!!

ஒரு மருத்துவமனை. அங்கே ஒருவர் படுத்திருந்தார். பக்கத்தில் அவர் மகன் நின்று கொண்டிருந்தான். படுத்திருந்தவர், நோயின் கடுமையால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.

மருத்துவரும் தன்னால் ஆன முடிந்த அளவுக்கு ஏதேதோ செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அடுத்த ஊர்க்காரர் ஒருவர், அவரைப் பார்க்க வந்தார். மகனைத் தனியே அழைத்து, ‘‘தம்பி! உன் அப்பா எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும்அதை இப்போ கொடுத்தா எனக்கு மிகவும் உதவியா இருக்கும்!’’ என்றார்.

‘‘அப்படியா?’’ என்ற மகன் அவரை அழைத்துக் கொண்டு அப்பாவை நெருங்கினான்.

‘‘அப்பா…!’’ என்றான்.

அவர் மெள்ள கண் விழித்தார்.

‘‘அப்பா! இவருக்கு நீங்க ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருக்காமேசரிதானா?’’

அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, ‘‘ப்பேப்பேபாபா…’’ என்றார். பேச்சு வரவில்லை. வந்தவர் பார்த்தார்.

‘‘தம்பிபரவாயில்லை. பாவம்அவரால் பேசக்கூட முடியவில்லை. நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்.

‘‘தம்பிஅப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது…’’ என்று ஆரம்பித்தார்.

அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத் தொடங்கினார்:

‘‘ஆமாம்ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத் தேவைனு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!’’ என்றார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாக பேச முடிந்தது?

இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள். ஆண்டவனே சிபாரிசு பண்ணினாலும், அடுத்தவர்களுக்கு உதவத் தயங்குவார்கள்.

ஆனால், ஆண்டவனே ‘வேண்டாம்’ என்று சொன்னாலும் கூட, அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைப்பது?

இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரைகள்தானே!

கார்ல் மார்க்ஸ்

5) Moral

பீர்பால் என்ற கௌரவப் பட்டம் !!!

ஒரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள்

அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள்

அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.

பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது! அவை அங்கேயே தான் இருக்கும்!” என்றான் அந்த இளைஞன்.

அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது? கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்.”பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன்! ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்!”

இப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது!

அந்த நாட்களில் கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர் என்னமா உண்மையை உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம்! ஆமாம்! பாதை எப்படி டில்லிக்குப் போகும்?

நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும் உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்!

அப்புறம் என்ன! மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப் பிரியமான சேக்காளியாக பீர்பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார் என்பது தெரிந்தது தானே!!

6)

History

50,000 தோல்விகள் !!!

உலகிலேயே மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் உரிமை எடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒன்றல்ல, இரண்டல்ல, 1093 கண்டுபிடிப்புகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவை

ஒருமுறை தனது உதவியாளர்களுடன் 17,000 விதமான செடிகளை பரிசோதனை செய்து பார்த்தார்

எதிலிருந்து லேடக்ஸ் என்ற பொருளை பிரித்தெடுக்க முடியும் என்று அறிவதற்காக! 17000 தோல்விகள்! பின்னரே வெற்றி

அவரது தோல்விகளின் எண்ணிக்கையைக் கண்டு பிரமித்து போனார் அவரது உதவியாளர்.

சுமார் 50,000 தோல்விகள்!

பரிசோதனை செய்தவாறே இருந்தார் ஒரு ஸ்டோரேஜ் பாட்டரியை கண்டுபிடிப்பதற்காக! “முடிவுகளாக 50,000 முடிவுகள் எனக்கு தெரியும்.

எதெல்லாம் ஸ்டோரேஜ் பாட்டரி அமைக்க உதவாது என்று 50,000 முடிவுகளைக் கண்டு பிடித்துள்ளேன்என்றார் அவர்.

என்ன தீவிர முயற்சியும் நெஞ்சுரமும் இருந்தால் இப்படி சொல்லி இருப்பார். தோல்வி என்பதற்கு அவர் அகராதியில் அர்த்தமே வேறாக இருந்தது.

7) History

அன்றே சுழன்றது சாட்டை !!

ராஜராஜசோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு நிர்வாகத்திலும் சிறந்தவன்

இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள் இருந்தன. சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால், குளக்கரைகளைப் பாதுகாத்தல், தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். நிலவளம் குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம்

பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம் (எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரி, பிற வரிகளை வசூலிப்பது பஞ்சவார வாரியம்.

இந்த வாரியங்களின் நிர்வாகிகளாக கணக்காளர்கள் நியமிக்கப்பட்டனர். வாரியங்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது. சபையாளர்கள் கேட்கும்போது,

கணக்காளர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா? தினமும் ஒருநாழி நெல், வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (39.750 கிராம்) தங்கம் போனஸ், இரண்டு சீருடை.

கணக்கை வாசிக்கும்போது, “”என் மனதறிந்து இதில் எந்தத் தவறுமில்லை. யாருக்கும் எந்த சலுகையும் காட்டவில்லை,” என்று உறுதி சொல்ல வேண்டும். சும்மாவா! பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்.

கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38.425 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம் பட்டாலோ, கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம்பத்து கழஞ்சு (53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. அபாராதம் கட்டாவிட்டால் சிறை.

அந்தக் காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இது மாதிரி தண்டனை பத்தி பேசினாலே, மனித உரிமையை பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட மாட்டாங்களா என்ன!

8) fun

பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலியார்?”

சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால், அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி.

சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.

அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!”

9) fun

சிரிப்பும் சிந்தனையும்

கண்ணாடி அறையில் இருக்கும் கடவுளைச் சந்திப்பதற்கு ஒரு மருத்துவர்,பொறியாளர், தமிழ் ஆசிரியர் ஆகிய மூவர் சென்றனர். மருத்துவர் முறை வந்தது.

அவர் கடவுளின் கண்ண்ணாடி அறைக்குள் சென்று பேசி விட்டு அழுதபடியே வெளியே வந்தார்.

ஏன் அழுகிறீர்கள்,அப்படி கடவுள் என்னதான் சொன்ன்னார்” என்று விசாரித்தார்கள் மற்ற இருவரும்.

புற்றுநோய்க்கு க்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா..? என்று கடவுளிடம் கேட்டேன்.

கண்டுபிடித்து விடுவார்கள்,

ஆனால்,

அப்போது நான் இருக்கமாட்டேனாம் என்று சொன்னார்.

அடுத்து முறை பொறியாளர் முறை.

அவரும் கடவுளைப் பார்த்துவிட்டு அழுதபடியே வெளியே வந்தார்.

அப்போது தமிழ் ஆசிரியர் அவர் அழுவதற்குரிய காரணத்தைக் கேட்டார்கள்.

இத்தாலியிலுள்ள பிசா கோபுரம் விழுந்துவிடுமா,

அல்லது நிமிர்ந்து விடுமா” என்று கேட்டேன்.

நிமிர்த்தி விடுவார்கள்..

ஆனால்,

அப்போது நான் இருக்கமாட்டேன் என்று கடவுள் சொன்னதாக கவலையுடன் சொன்னார்.

கடைசியாகத் தமிழ் ஆசிரியர் முறை வந்தது.

அவரும் உள்ளே சென்றுவிட்டு அழுதபடியே வெளியே வந்தார்.

ஆனால்,

கண்ணாடி அறையில் கடவுளும் அழுதுகொண்டு இருந்தார்.

ஆசிரியரிடம் மற்றவர்கள் கேட்டார்கள்,

கடவுளே அழுகிறார்.

அப்படி என்னதான் கடவுளிடம் கேட்டீர்கள்?

அதற்குத் தமிழ் ஆசிரியுர்,

தமிழ் மக்கள் எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள்?”

என்று கேட்டேன்.

அவர்கள் ஒற்றுமையாகும்போது,

நீரும் இருக்கமாட்டீர்,

நானும் இருக்கமாட்டேன்”

என்று கடவுள் சொன்னார் என்றார்.

10) Moral

தோற்றுப்போன வன்முறை !!!

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது.

“”என்னுடைய பலத்தால் பெரிய மரங்களைச் சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன்,” என்றது காற்று.

சூரியன் தன் பங்கிற்கு, “”நான் இருந்தால் தான் உலகமே இருக்கும். மாலையில் நான் மறைந்ததும் மக்கள் இருளில் தடுமாறுவதைப் பார்த்தாயா! தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை,” என்று பெருமை பேசியது.

இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான்.

“”சூரிய வாயுக்களே! உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,” என்றான். இரண்டும் ஒப்புக்கொண்டன.

“” நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டி, அதோ போகிறானே ஒருவன், அவனது சட்டையை அவிழுங்கள், பார்க்கலாம்,” என்றான்.

காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனோ கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளைக் காத்து விட்டான்.

அடுத்து. சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. ஆனாலும், விசிறியால் தன்னைக் காத்துக் கொண்டான்.

புரிந்து கொண்டீர்களா! வன்முறை தோற்றுப்போகும் என்பதை!

11) History

வீரமான நடைபோடு !!!

மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன்.

“”அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா?” என்றான்.

நெப்போலியன் சிரித்தான்.

“”வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சி தரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன்,” என்றான்.

அப்போது, ஒரு வீரன் பணிவுடன்,””தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான்.

“”வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். வீரமாக நடை போட வைக்கும். எதிரிகளை எதிர்கொள்ளச் செய்யும். இன்பமான செய்திகளால் நமது திறமையை எடை போடும் விதத்தில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை,” என்றான்.

தங்கள் தலைவனின் விளக்கம் கேட்டு, வீரர்கள் அசந்து போனார்கள்!!

12) History

குபேரனாகும் சந்தர்ப்பம் !!!

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

ஆஹாஇப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்மகிழ்ந்தான்
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

13) Morala

திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யாதீர் !!

யாரிடமாவது உதவி கேட்கப் போகிறீர்களா! அவ்வாறு கேட்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யக்கூடாது. ஒரு முனிவர் பெரும்பாலும் பட்டினியே கிடப்பார். ரொம்ப பசித்தால், ஒன்றிரண்டு கனிகளைச் சாப்பிடுவார், ஏரிகளுக்குப் போய் தண்ணீர் குடிப்பார்! அவ்வளவு தான்!

ஒருநாள் அடர்ந்த காட்டுக்குள் வழிதெரியாமல் சென்று விட்டார். பசி, தாகம் தாங்க முடியவில்லை. ஒருநாள் முழுக்க கடந்து விட்டது, மறுநாள் காலை வரை பசி மயக்கத்தில் ஓரிடத்தில் விழுந்து கிடந்தார்.

காலையில், விறகு வெட்டும் தொழிலாளி அந்தப் பக்கமாக வந்தார். அவர் கொண்டைக் கடலையை சுவைத்துக் கொண்டிருந்தார். மயங்கிக் கிடந்த முனிவர், அவனை நோக்கி கையை நீட்டினார்.

“”பாவம்! இந்த சுவாமிக்கு பசி போலும்,” என்றெண்ணியவன் சில கடலைகளைக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டார். அவருக்கு விக்கல் வந்து விட்டது. அவன் தண்ணீர் குடுவையை நீட்டினான், அவர் வாங்க மறுத்து விட்டார்.

“”அப்பா! உயிர் போகிற நிலையில் ஒருவன் மற்றவனிடம் உதவி கேட்கலாம். இதை ஆபத் தர்மம்என்பர். என் உயிர் போய்விடும் என்ற நிலையில், அதைக் காக்க நீ தந்ததைப் பெற்றுக் கொண்டேன். இப்போது எனக்கு சக்தி வந்து விட்டது. நானே ஏரியில் போய் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அடிக்கடி உதவி கேட்டு, நண்பர்களையோ, உறவுகளையோ தொந்தரவு செய்யக்கூடாது. புரிகிறதா!

14) Moral

ஏன் இத்தனை கடவுள்!

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், “”ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார்.

“”ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?” பேச்சாளர் கேட்டார்.

“”உன் வயதென்னப்பா?”

“”ஏழு

“”உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா….?”

“”என் அம்மா; அக்கா; அது என் அப்பா…”

பேச்சாளர் சொன்னார்.

“”உனது கல்வி, உணவு, விளையாட்டுப் பொருள் என தேவையைப் பொறுத்து, அப்பாவிடமோ, அம்மாவிடமோ, அக்காவிடமோ கேட்கிறாய் இல்லையா….! அதே போல், எல்லோரும் அவரவருக்கு தேவையானதை அவரவருக்கு பிரியமான கடவுளிடம் கேட்கிறார்கள். இதனால் தான் பலதெய்வ வழிபாடு! புரிகிறதா!” என்றார்.

சிறுவன் புரிந்து கொண்டான். கேட்ட எல்லாருக்கும் சிறந்த உபதேசமானது.

15) roman

மனசுக்கு ஒரு தாழ்ப்பாள்!

வாலிபன் ஒருவனுக்கு தியானக்கலையில் பெரிய ஆளாக வரவேண்டுமென ஆசை. தியானத்தை துவங்கினான்.

எங்கிருந்தோ கொலுசு சத்தம் கேட்டது. இவனுக்கு அந்தக் கொலுசு அணிந்து வந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவை பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. “ஊஹூம்அப்படி பார்த்தால் தியானம் கலைந்து விடும்

காது கேட்பதால் தானே கொலுசு சத்தம் கேட்கிறது! காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் எங்கிருந்தோ மலரின் நறுமணம் வந்தது.
வாலிபன் நினைத்தான்.

இது அவளது கூந்தலில் சூடியுள்ள மல்லிகையின் மணமாகத்தான் இருக்க வேண்டும்இதை நுகர்ந்து கொண்டே இருந்தால் தியானம் கைகூடாதுஎன்று தனக்குள் சொல்லிக்கொண்டே, மூக்கை ஒரு துணியால் கட்டிக் கொண்டான். கண், காது, மூக்கு எல்லாவற்றுக்கும் தாழ்ப்பாள் போட்டாயிற்று. ஆனாலும், தியானம் நிலைக்க மறுத்தது. ஏன் தெரியுமா?

மனசு மட்டும் அவளைச் சுற்றியே வந்தது. “”அவள் எப்படி இருப்பாளோ? அழகா, அழகில்லையா, குணவதியா? குணமற்றவளா! ராஜகுமாரியா! ஏழையா?” என்று!

இந்த இளைஞனின் தியானம் போலத்தான் இன்று மனித மனங்கள் கற்பனைக் காற்றில் பறக்கின்றன. ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்ற பெயரில், வாழ்க்கையின் அஸ்திவாரமே பெயரும் வகையில், பலரும் நடந்து கொள்கின்றனர்.

பக்கத்து வீட்டைப் பார்த்து நாம் வாழ வேண்டுமென அவசியமில்லை. நம் மனசுக்கும் தாழ்ப்பாள் போட்டாகணும்! போடுவீங்களா?

16) Moral

டாக்டருக்கு படிச்சா போதுமா?

ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார்.

பக்தர் ஒருவர் அவரிடம், “”ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?,” என்று கேட்டார்.

! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,”.

நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,” என்றார் பக்தர்.

ராமகிருஷ்ணர் அவரிடம்“”நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”டாக்டர்என்றார் வந்தவர்.

“”அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,” என்றார் ராமகிருஷ்ணர்.

“”எப்படி முடியும்? படித்தால் தான் முடியும்,” என்றார் வந்தவர்.

“”படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் பக்திஎன்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள்,” என்றார் ராமகிருஷ்ணர்.

17) History

மாவீரன் நெப்போலியனின் கவனக் கூர்மையும்,
ஒரு சிறிய பயிற்சியும் !!!

மன்னர் நெப்போலியனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம்

ஒரு முறை நெப்போலியன் தன் அரண்மனையில் தடல் புடலான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் கலந்து கொண்ட நண்பர்களில் சிலர் மன்னருக்கு தெரியாமல் ஒரு ரகசிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

விழா தொடங்கியது. எல்லாரும் கொண்ட்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.

நெப்போலியன் கையில் ஒரு மது கிண்ணத்தை பிடித்தவாறு நின்றிருந்தார்.

அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயம் திடீரென்று ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது.

விழாவுக்கு வந்தவர்கள் ஒரு நிமிடம் அரண்டு போனார்கள். நெப்போலியனை பயமுறுத்தி பார்ப்பதற்காக நண்பர்கள் செய்த விளையாட்டு தான் அது.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டு நெப்போலியனை பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். நெப்போலியன் விரல் நுனியில் மது நிரம்பிய கிண்ணம் இருந்தது. ஒரு துளி கூட சிந்தவில்லை.

ஆனால் உண்மையில் வெடிச்சத்தம் கேட்ட போது நெப்போலியன் ரொம்பவே பயந்து போய் இருந்த இடத்தில் இருந்து ஒரு அடி குதித்திருந்தார்.

அப்படியும் மது சிந்தாமலிருந்தது தான் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதைப் பற்றி பின்னாளில் ஒரு முறை அவரை கேட்ட போது அவர் சொன்ன பதில்,

நான் எந்த வேலையை செய்தாலும் என் முழுக்கவனமும் அதில் மட்டும் தான் இருக்கும். எப்பொழுதும் ஒரு வேலையை செய்யும் போது என் மனம் இன்னொரு வேலையை பற்றி சிந்தித்து கொண்டிருக்காது. அதனால் தான் நான் அன்று பயந்த போதும் என் கை அசையவில்லை“.

இன்றைக்கு நம்மில் பலர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.

18) History

ஹிட்லர் !!!

ஜெர்மனியில் ஓர் ஓவியன் பகலெல்லாம் உழைத்து விட்டு இரவு வீட்டுக்கு வருவாராம்

இரவில் நெடுநேரம் வரையில் படிப்பாராம். ஐரோப்பாவின் வரைபடத்தைத் தன்முன்னே வைத்துக் கொண்டு, நீண்ட நேரம் அதில் கவனம் செலுத்துவாராம்

அதைக் கண்ட வாடகை வீட்டுக்காரப் பெண், பகலெல்லாம் உழைக்கின்றாய். இரவில் தூங்கினால் என்ன? என்னவோ ஐரோப்பாக் கண்டத்தையே உன் கீழ் கொண்டு வரப்போவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று ஏளனமாகப் பேசினாளாம்.

அதைக் கேட்ட அவரோ, ஆம்! மாற்றத்தான் போகின்றேன் என்று உறுதியாகச் சொன்னதோடு அல்லாமல் அப்படியே நிறைவேற்றி காட்டியவர் தான் ஜெர்மனியின் ஹிட்லர்

ஆக குறிக்கோளுடன் வாழ்தலே வெற்றியைத் தேடித்தரும்.

19) Moral

அரக்கனிடம் இரக்கம் !!!

அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான்.

ஒருமுறை, ஒரு அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன் அவர்களிடம், “”உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும்,” என்றான்.

அந்தணர் அவனிடம், “”என் மனைவி நோயாளி. அவளைத் தின்றால் அவளது நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்கு பாசம். இளையவன் மேல் என் மனைவிக்கு பாசம். அதனால், நடுவிலுள்ள மகனை எடுத்துக் கொள்,” என்றார்.

அரக்கனும் சம்மதித்தான்.

அந்த மகனை அவன் தன்னருகே இழுத்த போது, அவன் சிரித்தான், பிறகு அழுதான்.

“”ஏனப்பா! முதலில் சிரித்தாய், பிறகு அழுகிறாய்?
எதற்காக அப்படி செய்தாய்?” என்றான் அரக்கன்.

“”அரக்கனே! மனிதர்களை உண்பது ராட்சதர்களுக்கு இயல்பு. அதில் தவறில்லை. ஆனால், பெற்ற பிள்ளை என்றும் பாராமல், என்னை உனக்கு உணவாக்க முனைந்த இந்த பெற்றோரை எண்ணினேன். யார் ராட்சதர் என்று சந்தேகம் வந்துவிட்டது. அதனால் சிரித்தேன். இருப்பினும், பெற்றவர்களை பிரியப்போகிறோமே என்ற வேதனையால் அழுதேன்,” என்றான்.

இந்த விளக்கம் கேட்டு அரக்கனே இரங்கி விட்டான். அவனை விடுவித்தான்.

20) Morala

பழசை மறந்துடக்கூடாது !! 

விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர்.

காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, மனைவியை அழைத்து,””அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும்,” என்றான். அவளும் ஆமோதித்தாள்.

இதை பிள்ளைகள் கேட்டனர். தந்தையிடம் சென்றனர்.

“”அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்பட மாட்டோமா?” என்றனர்.

“”அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், ” என்றார் தந்தை.

“”அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்?” என்ற பிள்ளைகளிடம், “”அவரவர் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

உதாரணத்துக்கு எனக்கு வயதாகி விட்டால், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்என பதிலளித்தார்.

“”அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா!” என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது.

மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் பராமரித்து வந்தார்.

21) Morala

குருவை மிஞ்ச முடியுமா

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூட செய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனது எண்ணத்தைச் சொல்லி விட்டான்.

குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். “”இதில் என்ன இருக்கிறது?” என சீடனிடம் கேட்டார்.

அவன் தண்ணீர் இருக்கிறதுஎன பதில் சொன்னான்.

“”இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!” என்றார் அவனிடம்.
அவனும் அப்படியே செய்தான். “”இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!” என குரு கேட்க, “”ஒன்றுமில்லை,” என்றான்.

குரு சிரித்தார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடமே காரணம் கேட்டான்.

குரு அவனிடம், “”பஞ்சபூதங்கள் என்ன?’ என்று கேட்டார்.

அவன் “”நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,” என வரிசையாக சொல்லி முடித்தான்.

“”மகனே! பஞ்சபூதத்தில் ஒன்றான தண்ணீர் இந்த பாத்திரத்திற்குள் இருந்தபோது, அதை நீ சரியாகச் சொன்னாய். ஆனால், அது இல்லாத பாத்திரத்திற்குள் தற்போது காற்று இருக்கிறது.இது கூட உனக்கு தெரியவில்லையே?” என்றார்.

குருவின் பார்வைக்கும், தனது பார்வைக்கும் வித்தியாசமிருப்பதை சீடன் உணர்ந்தான். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதைப் புரிந்து கொண்டு, பணிவுடன் நடக்க ஆரம்பித்தான்.

22) History

ஹென்றி ஃபோர்ட் !!!

அமெரிக்க கோடீஸ்வரராக இருந்த ஹென்றி ஃபோர்டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார்

சார், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி?” என்று கேட்டார் இளைஞர்.

முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம்!” என்றார் ஹென்றி ஃபோர்ட்.

என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை. ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று கவலையாக இருக்கிறேன்.”

என்னிடம் இல்லாத மதிப்புமிக்க ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறது. அதன் மூலம் எதையும் சாதிக்கலாம்!”

அப்படி எதுவும் என்னிடம் இல்லையே?”

இளமை என்ற ஒப்பற்ற விஷயம் இருக்கிறதே! நான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை விட உன்னால் பல மடங்கு இளமையை வைத்து சம்பாதிக்க இயலும். அந்த இளமையை எனக்குக் கொடுக்கிறாயா? என் சொத்தை எழுதித் தருகிறேன்” என்று கேட்டார் ஹென்றி ஃபோர்ட்.

இளைஞர் நம்பிக்கையுடன் கிளம்பினார் !!

23) Morala

கர்ணனின் கொடை !!!. 

சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ணனிடம் யாசகத்திற்குப் போனார் ஒரு அந்தணர். பக்கத்தில் இருந்த தங்கக்காசுகளை இடது கையில் எடுத்து அவரிடம் கொடுத்தானாம் கர்ணன். ‘‘இது அவமரியாதையில்லையோ? இடது கையில் யாசகம் தரலாமா?’’ என்கிறார், அந்தணர்

பணிவோடு கர்ணன் சொல்கிறான்: ‘‘கொடுக்க வேண்டும் என்று தோன்றியவுடன் கொடுத்துவிடவேண்டும். சாப்பிட்டு கை கழுவிப் பின் வலது கையால் கொடுக்கலாம் என்பதற்குள் சில சமயம் மனம் மாறிவிடும். அதனால்தான் உடனே இடக்கையில் கொடுத்தேன்.’’

சத்திய வாக்கு இது. ஏழைக் குழந்தைகளின் படிப்பு என்று டொனேஷன் கொடுக்க நினைத்தால் நினைத்த அதே வினாடி பணத்தைக் கொடுத்து விட வேண்டும். ‘வீட்டுக்குப் போயிட்டு, செக்கைப் போட்டு, மனைவி கிட்டயும் கலந்து பேசிட்டு….’ என்று தள்ளிப் போட்டால் முதலில் ஆயிரம் ரூபாய் என்று நினைத்த மனசு, ‘நானே எல்லாத்தையும் கொடுத்து முடியுமா? இருநூறு போதும்’ என்று மாறிவிடும்.

சில வீடுகளில் அனாதை ஆசிரமத்திற்குக் கொடுத்து அனுப்ப பழைய துணிகளை சேகரித்து மூட்டை கட்டி வைப்பார்கள். சேகரித்த உடனே கொடுக்கவில்லை என்றால் மூட்டைத் துணி மறுபரிசீலனை செய்யப்பட்டு விடும். ‘இது நல்லாத்தானே இருக்கு. ஒரு தையல் பிரிச்சு விட்டுட்டா நல்லா கல்லு மாதிரி உழைக்கும்’ என்ற இத்யாதி சமாதானங்களோடு மூட்டையில் பாதி திரும்பவும் அலமாரிக்குப் போய்விடும்.

24) Morala

மகிழ்ச்சி எங்கே

ஒரு வயதான மூதாட்டி ஒரு தெரு விளக்கினடியில் எதையோ தேடிக் கொண்டிருந் தாள். இதைப்பார்த்து வழிப்போக்கனும் தேட ஆரம்பித்தான். இவனைப் பார்த்து இன்னொருவனும் இந்தத் தேடுதல் வேட்டையில் சேர்ந்து கொண்டான். இப்படியாக ஒரு பெரிய கூட்டமே அங்கு திரண்டு விட்டது. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன், இந்தப் பெருங்கூட்டம் எதையோ தேடுவதைக் கண்டான். ‘எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று ஒருவனிடம் கேட்டான்.

அவன் இன்னொருவனைச் சுட்டிக் காட்டினான். “எனக்கு ஒன்றும் தெரியாது. அவன் தேடிக் கொண்டிருந்தான், நானும் அவனுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தேன்” என்றான். அவனைக் கேட்ட போது அவன் வேறு ஒருவனைக் காட்ட கடைசியில் அவர்கள் அந்த மூதாட்டிதான் தேடலை ஆரம்பித்தாள் என்ற முடிவுக்கு வந்தனர். அந்தக் கிழவியைக் கேட்ட போது “கீழே விழுந்த ஒரு நாணயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள். எங்கே விழுந்தது? என்று கேட்டதற்கு “என் குடிசையில் போட்டுவிட்டேன்” என்றாள்.

ஆனால் அதை இங்கே இந்த தெரு விளக்கின் கீழே ஏன் தேடுகிறாய்? என்றதற்கு ‘எனது குடிசையில் விளக்கு இல்லை, அதனால் இங்கே தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று பதிலளித்தாள். அந்தக் கிழவி!

இப்படித்தான் நாமும் சந்தோஷத்தை நமக்குள் தேடாமல் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

25) Morala

இறைவன் நம்மை சோதிப்பது ஏன் ????

அந்த குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே… அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்க்கிறான்.

நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்கிறார்.

மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்.”

இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்கிறார்.

தெரியவில்லை”

ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.”

மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.

இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.

மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”

அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!”

இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்று யோசித்து பாருங்கள்!”

கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால் தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.

அடுத்த முறை ஒரு மிகப் பெரிய சோதனையை சந்தித்தாலோ அல்லது வாழ்க்கையில் இடறிவிழுந்தாலோ அல்லது எவரேனும் உங்களை சீண்டினாலோ உங்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும்? உங்களிடம் இருந்து என்ன வார்த்தைகள் வெளியே வரும்?

தேனின் பொறுமையும் கனிவுமா?

அல்லது சாக்கடை நீரின் கோபமும், அருவறுப்புமா?

26) History

சுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன

அவனது கோட்டையையும் கைப்பற்றின. அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள்

வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம்.

எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி.

பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள். சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான்.

உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர்.

சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள். தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை.

மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர். 1) கெட்டவர்கள் மற்றும் 2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள். எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது. நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம் !!!

27) Morala

சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம் !!!

என்சைக்ளோபீடியாவின் புதிய பதிப்பு ஒன்று சுவாமியின் மடத்தில் இருந்தது. மொத்தம் இருபத்தைந்து பெரிய தொகுதிகள் கொண்டது அந்த நூல். அவர் அதைப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய மன ஒருமைப்பாடு அபாரமானது. வெகு விரைவிலேயே அவர் பத்து தொகுதிகளை முடித்துவிட்டு, பதினொன்றாவதை ஆரம்பித்திருந்தார்

அப்போது அங்கு வந்த ஒரு சீடர் அந்த நூல் வரிசையைக் கண்டு, ‘ஒருவன் வாழ்நாள் முழுவதும் படித்தாலும் இத்தனை நூல்களையும் முடிக்க முடியாது’ என்று கூறினார்.

அது எப்படி? நான் ஏற்கனவே பத்து தொகுதிகளை முடித்துவிட்டேனே! என்ன கேள்வி வேண்டுமானாலும் அதிலிருந்து கேள்’ என்றார் சுவாமி.

சீடர் ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் மிகக் கடினமான கேள்விகளைக் கேட்க சுவாமி அவற்றிற்குச் சரியாக விடையளித்தார். சிலவற்றில் அவர் நூலில் கொடுக்கப்பட்ட அதே சொற்களைக் கூறினார்.

இது மனிதத் திறமைக்கு அப்பாற்பட்ட செயல்’ என்றார் சீடர்.

இது மன ஒருமைப்பாட்டின் பலன். தூய வாழ்க்கை வாழும் ஒருவர் இத்தகைய மன ஒருமைப்பாட்டைப் பெற முடியும்’ என்றார் சுவாமி விவேகானந்தர்.

28) History

தன்னம்பிக்கை !!!

போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார்.

ஒருநாள் அந்த நபரைப் பார்த்த ஒரு பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று.

அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.

அப்படித் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார்.

அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட மாவீரன் நெப்போலியன் தான் !!

29) Morala

அரசியல் வியாபாரி !!!!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், “அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களேன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல “$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துக்கலாம்ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க.

இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ் !!!

30) Morala

உண்மையில் இதுதான் வாழ்க்கை..! 

தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. “ஒழிந்து போ..!” என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. “ஒழிந்து போ..!” என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.

அப்பா இருக்கும் தைரியத்தில்.. “எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!” என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.

பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். “என்னை கவனி..!”
என்றார் அப்பா. “உன்னை மிகவும் விரும்புகிறேன்..!” என்று கத்தினார்.. “உன்னை மிகவும் விரும்புகிறேன்..!” என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.

இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!” என்றார்.

நல்லவர்களாக காட்டி கொள்ளும் பலர் உள்ளே ஒன்று வைத்து.., வெளியே வேறுவிதமாக நடந்து கொள்ளும் ஏமாற்று காரர்களாகவே விளங்குகிறார்கள். அவர்களின் மனதில் தந்திரங்களும் கள்ளத்தனங்களும்.. சதா விஷங்களாக ஊற்றொடுக்கின்றன. அந்த விஷங்களே அவர்களை நசுக்கி கொன்று போடும்.

31) Morala

ஹிஸ்டரி ரொம்ப முக்கியம் அமைச்சரே !!!!

ஒரு ஊருல ஒரு லூசு மன்னன் இருந்தானாம். நாட்டுல மக்கள் தொகையை குறைக்கணும் அதனால 50 வயசுக்கு மேல வீட்டுல யாரு இருந்தாலும் போட்டு தள்ளுங்க இல்லைனா அரசாங்கம் போட்டு தள்ளிரும் அப்படின்னு அறிக்கைவிட்டு அதை கடுமையாக கடைபிடிச்சிருக்கான்.

எல்லாரும் 50 வயசுக்கு மேல இருந்தவங்களை வேற வழி தெரியாம அவுங்களே கொன்னுட்டாங்க. ஒரு பொடி பையன் அவுங்க தாத்தாவை மறைச்சு வச்சு வளர்த்திருக்கான்.

ஒரு நாள் லூசு அரசன் ஒரு கனவு கண்டு இருக்கான். ஒரு யானை தொரத்துற மாதிரி.அமைச்சரவையை கூட்டி இப்படி கனவு கண்டேன் விளக்கம் சொல்லுங்கன்னு கேட்டு இருக்கான். அங்க இருந்த மங்குனி அமைச்சர் அப்புறம் மத்த எல்லாருக்கும் அர்த்தம் தெரியல.

கனவுக்கு விளக்கும் சொன்னா 10 கோட்டா நெல்லு இலவசம் அப்படின்னு தண்டோரா போட்டு இருக்காங்க.

இந்த தண்டோரா சத்தத்த கேட்ட தாத்தா. இது கூட தெரியாமையா இருக்காங்க அப்படின்னு சொல்லி பேரன்கிட்ட அதுக்கு அர்த்தம் சொல்லி இருக்கார்.

பேரன் நேரா மன்னார்கிட்ட போய். எனக்கு அர்த்தம் தெரியும் சொல்லட்டுமான்னு கேட்டு இருக்கான்.நீ சின்ன பைய உனக்கு என்ன தெரிய போகுது அப்படின்னு சொல்லி இருக்கார்.

இருந்தாலும் விடா பிடியா பையன் உன்னை எதிரி எவனோ நெருங்குரான்னு அர்த்தம். கூடவே இருக்கான் குழிபறிக்க. தப்பிச்சுக்கோ ஜாக்கிரதைன்னு சொல்லிட்டான்.

போடா போடா டேய் அப்படின்னு மன்னர் அனுப்பி ஒரு வாரத்துல எங்கிருந்தோ படை எடுத்து வந்திட்டான். அந்த நாட்டு தளபதியோட உறவு காரன்.

ஒரு வழியா மன்னர் ஜெயிச்சிட்டார். கூப்புடுங்கடா அந்த பொடி பயலைன்னு அனுப்பி வச்சி இருக்கார்.

அவன் வீடு ஊரை தாண்டி இருக்கு. அவன் வீட்டுக்கு போனா அவனோட இடத்துல மட்டும் விவசாயம் நடந்திருக்கு. எங்க பார்த்தாலும் பச்சை பசேல் என்று

அடங்கொயாள என்னடா ரகசியம் அப்படின்னு புடிச்சு அடிச்சு கேட்டு இருக்கார். உண்மையை ஒத்துகிட்டான். தட்டாம்பூச்சி பறந்தா மழை வரும் அப்படின்னு அர்த்தம் என்று எங்க தாத்தா சொல்லி இருக்கார்.

அதனால அந்த நேரத்துல மழை வருவதை பொறுத்து நான் விவசாயம் செய்வேன்.

அப்புறம் தாத்தா தான் சொன்னார் கனவின் பலனைன்னு சொல்லி இருக்கான்.

கொண்டுவா உங்க தாத்தாவை என்று சொல்லி ஐயா வயசானவங்களை மதிக்க மறுந்துட்டேன் நான் ஒரு மட சாம்பிராணி தப்பா எடுத்துகலைன்னா நீங்கதான் என்னை வழி நடத்தனும் வாங்க அமைச்சரவைக்குன்னுசொல்லி அவரை ஆஸ்தான மந்திரி ஆக்கி நல்ல படியா ஆட்சி செஞ்சி இருக்கான்.

இதுக்கு தான் ஹிஸ்டரி படிக்கனும்ன்னு சொல்லுறது, வீட்ல வயசானவங்க சொலுற அனுபவத்தை கேட்டு வளமாய் வாழுங்கள் !!!!

32) Morala

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது.

பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்

குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.

இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன.

அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

33) fun

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு….

ஏங்க எங்கங்க இருக்கீங்க?”

உனக்கு நேரம் காலமே தெரியாது பகல்ல நான் எங்கே இருப்பேன் ஆபிஸ்லதான் ரொம்ப வேலையாஇருக்கேன் இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்

அதுக்கில்லைங்க…”

அதான் சொல்றேன்ல

குழந்தைங்க …”

என்ன குழந்தைங்களுக்கு என்ன?”

ஒண்ணுமில்ல உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க நான் என்ன பதில் சொல்லட்டும்?”

# செத்தாண்டா சேகரு !! 

34) fun

காப்பாற்ற கடவுள் வருவார்?

ஒருவர் எதெற்கெடுத்தாலும் கடவுள் பார்த்துக்குவார்னு சொல்லிகொண்டே இருப்பான்.

ஒருநாள் அவர் வாழ்ந்த ஊரில் அடைமழை, வெள்ளம் வந்துவிட்டது. ஊரார் எல்லாம் வெளியேறி கொண்டிருந்தார்கள், ஊரார் வெளியேறும் போது அவரையும் அழைத்தார்கள், ஆனால் அவனோ, இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொல்லி அங்கேயே இருந்தானாம்.

வெள்ளம் பெருகிவிட்டது.பிறகு ஒரு சிறு மரக்கட்டையில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.

அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு வானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு கொடுத்தார்கள் இதுலாவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து, என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.

இறுதியில் வெள்ளம் அதிகமாகி அதனுடன் அடித்து சென்று அவன் இறந்துவிட்டான்.

மேலே இறைவனிடம் சேர்ந்தார். அவன் இறைவனை பார்த்து கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.

அதற்கு கடவுள் சொன்னாராம்,

அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வெவ்வேறு வழிமுறையில் வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.

இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வழியில் தான் உதவுவார். வாய்ப்புகள் இப்படி தான் வரும், கடவும் வருவார்ன்னு உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் அகபோவதில்ல, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்

 

35) Morala

தேவதைகள் வாழும் வீடு !!!

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு !!

36) Morala

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. 

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

37) mroa

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணாநாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பி.கு.

மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிநீடூழிவாழ வாழ்த்துக்கள்.

38) Morala

மதிப்பு , மரியாதை !!!

ஒரு நிறுவனத்தில் முப்பது வயதை ஒட்டிய அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது.அப்போது வகுப்பு எடுத்தவர் சொன்னார்,”உங்களுக்கு சிலர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கும். ஆனால் இதை நீங்கள் சரியான முறையில் வெளிப்படுத்தாமல் உங்கள் உறவு இறுக்கமாக இருக்கக் காரணமாகி விடுகிறீர்கள்.இதை நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டு அதன் பலனை அடுத்த மாத வகுப்பில் சொல்லலாம்,”அடுத்த வகுப்பில் யாருக்காவது இது சம்பந்தமான அனுபவம் ஏதாவது ஏற்பட்டதா என்று விசாரித்தார்.

அப்போது ஒருவர் சொன்னார்,”நீங்கள் இந்த விஷயத்தை சென்ற வகுப்பில் சொன்னபோது எனக்கு முட்டாள்தனமாகப் பட்டது.உங்கள் மீது எரிச்சல் கூட ஏற்பட்டது.ஆனாலும் நான் அதை முயற்சி செய்து பார்க்க விரும்பினேன்.எனக்கு என் தந்தையின் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு.ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் நான் அவரைப் பார்ப்பதும் இல்லை பார்த்தால் பேசுவதும் இல்லை.இப்போது அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பை தெரியப்படுத்த விரும்பினேன்.

அன்றே அவருக்கு தொலைபேசி மூலம் அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னேன்.அவர் கோபத்துடன் எதற்கு வருகிறாய் என்று கேட்டார்.நானும்,’உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் அலுவல் முடிந்ததும் மாலை ஆறு மணிக்கு வருகிறேன்,’என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டேன்.

மாலை ஆறு மணிக்கு மனம் திக் திக் என்று அடிக்க என் தந்தை இருந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன்.என் தந்தையே வந்து கதவைத் திறந்தார்.அவர் முகம் இறுக்கமாக இருந்தது.நான் வந்ததை விரும்பாததுபோல அவருடைய தோற்றம் இருந்தது.

அப்போது நான் சற்றும் அவர் எதிர்பாராத வண்ணம்,’அப்பா,நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.உங்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.இதை சொல்லத்தான் வந்தேன்’ என்றேன்.உடனே அங்கு ஒரு அதிசயம் நடந்தது.என் தந்தையின் முக இறுக்கம் படிப்படியாய்க் குறைந்து முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

உடனே அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,’நானும் உன்னை மிக நேசிக்கிறேன்.ஆனால் அதை சொல்லத்தான் எனக்கு இதுவரை தெரியவில்லை,’என்றவர் என்னை நீண்ட நேரம் விடாமல் அணைத்தபடியே இருந்தார்.இக்காட்சியை என் தாய் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் இரண்டு நாட்களில் என் தந்தை மாரடைப்பால் காலமாகி விட்டார்.நான் மட்டும் அன்று அவரைப் பார்க்காமல் இருந்திருந்தால் வாழ் நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் இருந்திருப்பேன். உங்களுக்கு என் நன்றி,”என்றார்.

39) fun

டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்கதான் எனக்கு உதவணும்

என்ன மாதிரியான கனவுகள் ?”

தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு

தினமுமா?”

ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க.”

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,

நான்கு மணி நேரத்துக்கொருமு ­றை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து ­ முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்

சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்

ஏன் நாளையிலேர்ந்து? ­ இன்னிக்கு என்னாச்சு?”

அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி பைனல்ஸ்இருக்கு” !!!

40) fun

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:

எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’

41) History

ஆபிரஹாம் லிங்கன் !

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி இரகசியம் .

42) Morala

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு உன் அன்புக் கணவன்

நீதி: நாம் அறியாமற் செய்யும் சிறுதவறுகள் கூட அடுத்தவரைப் பாரதூரமாகப் பாதிக்கலாம்

– Marry Thomas

43) Morala

உழைப்பால் உயர்ந்தவருக்கு ஓய்வு இல்லை!

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!” என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ”விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காகஇப்போது

எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?” என்று கேட்டார்.

பெரும் விபத்து நேருமே!”- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ”வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, ‘உயரத்தைத் தொட்டு விட்டோமே…’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!” என்று விளக்கம் அளித்தார்.

44) History

ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார். அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.
சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, “80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காதுஎன்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.
கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார்.
இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை.

45) clasic

யானையின் எடையை எப்படி அறிவது?”

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது?” என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ”நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடைஎன்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

வெ. இறையன்பு

50)

ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

கணினி ஆணா… பெண்ணா..?”

மாணவிகள் சொன்ன காரணங்கள்

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்… எந்த நேரத்துல மயங்கும்னு சொல்லவே முடியாது..
5)
நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

அதனால் கணினி ஆண் தான் என்றார்கள்

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2)
எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3)
நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4)
பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்களில் அதுகளேதான் பிரச்சினையே..
5)
அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தாs இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!

Contact Us

For Immediate quires Please contact here...