In General, Photography

பெரிய கோவிலின் மூன்றாம் தளம் எப்படி இருக்கும் என்று அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்களுக்காக.

முதல் தளம் செல்ல தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும். அந்த ஈசனின் அருளும் என் ராச ராசனின் அருளினாலும் மூன்றாம் தளம் செல்ல ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது.

முதல் தலத்தில் இருந்து கம்பி ஏணி வழியாக இரண்டாம் தளம் சென்றோம் அங்கிருந்து பரம்பொருளான ஈசனை இரண்டாம் தலத்தில் இருந்து மனதில் தரிசித்து விட்டு ஒரு சிறு துவாரம் போல் இருந்த வழியாக மூன்றாம் தளம் செல்ல வேண்டும்.
மனித தடம் மிக மிக அரிது என்பது அங்கிருந்த புறாக்களின் எச்சம் உணர்த்தியது. வௌவால்களின் புகலிடமாக இருந்த தளத்தில் குனிந்து வளைந்து தான் செல்ல முடியும்.

அந்த உச்சி வெயிலிலும் கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. பலமுறை முதல் தளம் சென்று இருந்தாலும் மூன்றாம் தளம் என் வாழ்வில் முதல் முறை. இழைத்து இழைத்து செதுக்க பட்ட சிலைகள் கற்பனைகளுக்கும் எட்டாத சிலைகள் பெரியகோவிலின் எந்த திசையிலும் காண கிடைக்காத சிலைகள். தன்னிச்சையாக அந்த சிற்பங்களை அணைக்க துடித்த என் கரங்கள். யார் மனக்கண்களில் இந்த சிற்பங்களின் மாதிரிகள் தோன்றின. அதனை எப்படி பிரமாண்டமாக அதே சமயம் நேர்த்தியாக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டன என்று வியப்பினால் கண்கள் விரிந்தன.

சீராக அடுக்கி வைக்கப்பட்ட படிகள். பல துவாரங்களை கொண்ட சன்னல்கள் அங்கு காற்றோத்தை உறுதி செய்து கொண்டிருந்தன. வடக்கில் இருக்கும் கைலாயத்தை தான் எழுப்பிய பெருவுடையார் ஆலயத்தில் தென் கைலாயத்தை எழுப்பி இருந்த ராஜ ராஜனின் சிவபக்தி ஒப்பிலாதது. அந்த தென் கைலாய காட்சியை மிக அருகில் பார்ப்பது பிரமிப்பானது. பொன் வேய்ந்த ஈசனின் தென் கைலாய காட்சியை எத்தனை நாள் எம் சோழ மன்னன் சூரிய உதயத்தில் தரிசித்திருப்பார்.

பொன் வேய்ந்த அந்த கைலாய காட்சியை சூரிய உதயத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களை பிரதிபலித்து கொண்டிருக்க எத்தனை நாள் என் சோழ தேசத்து குடியானவன் கண்கள் விரிய கண்ணீர் பெருக்கெடுக்க தரிசித்து இருப்பான்.

குழைத்து குழைத்து எழுப்பப்பட்ட சுவர்கள். இவை ராச ராசனின் காலத்தினுடையதா இல்லை அதற்க்கு பின் வந்த மன்னர்களின் கை வண்ணமோ. எது எப்படி இருப்பினும் மயிர் கால்கள் ஓய்வில்லாமல் சிலுர்த்துக்கொண்டே இருந்த அந்த மூன்றாம் தல இருப்பிடம் என்றுமே பிரமாண்டம்.

இந்த இடத்திற்கு சென்று வந்து பல வருடங்கள் கரைந்துவிட்டது. இன்று தான் இதனை பற்றி தீட்டும் எண்ணம் என் சிந்தையில் உருவானதோ என் சிவனே என் சிவனே என் பரம்பொருளே.

நன்றி : லோகேஷ் அருண்

Picture Courtesy: Kalidas Murugaiya & Vijaykaran

Showing 22 comments
 • Jaya
  Reply

  Wow lokesh🤗🤗 . உண்மையிலே அந்த ஈசன் அருளாலும், ராஜராஜரின் அருளாலுமே இது சாத்தியம் 🙂

  • Lokesh Arun
   Reply

   நன்றி ஜெயா. 🙂

 • Suresh
  Reply

  Well narrated.. Fantastic one…

 • Vijaykaran
  Reply

  அருமை

  • Lokesh Arun
   Reply

   நன்றி Vijaykaran 🙂

 • Kannan
  Reply

  அரிதான விடயத்தை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள் லோகேஷ்…வாழ்த்துக்கள் அடுத்தமுறை காணச்சென்றால் எனக்கும் அழைப்புவிடுங்கள் அண்ணன் விஜய்கர்ணன் மூலமாக…நன்றி வாழ்த்துக்கள் NOT Team

  • Vijaykaran B
   Reply

   thanks kannan

  • Lokesh Arun
   Reply

   நன்றி கண்ணன் 🙂

 • பிரசன்னா
  Reply

  அருமை

 • பிரசன்னா
  Reply

  அருமை ஐயா

  • Lokesh Arun
   Reply

   நன்றி 🙂

 • Raja
  Reply

  அருமையான…

  • Lokesh Arun
   Reply

   நன்றி

 • arimagi prabhu
  Reply

  potraththakka idaththil bramikkaththakka velaippadu, bramikkaththakka velaippaadarugil oru amaidhiyana yaththirai, arumayaga irukkiradhu.

  • Lokesh Arun
   Reply

   நன்றி பிரபு

 • தியாகராஜன்
  Reply

  அந்த ஈசன் அருளால் எனக்கும் ஒருமுறை அந்த வாய்ப்பு கிட்டியது என் கல்லுரி பருவத்தில். ஆனால் அப்பொழுது புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

  • Lokesh Arun
   Reply

   அருமை . நம் சிவாயம்

 • dhineshkumar
  Reply

  எனக்கும் கோவில் மேலே போய் பார்க்க வேண்டும் என்று ஆசை.எப்படி செல்வது யாரிடம் கேட்பது என்று கூறவும். என் மின் அஞ்சல் மூலமாக.

  • Vijaykaran B
   Reply

   please send email to admin@mythanjavur.com

  • Lokesh Arun
   Reply

   நீங்கள் தொல்பொருள் துறையின் அனுமதி பெற வேண்டும் . யாரவது தஞ்சையில் உயர் அதிகாரிகள் இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் மேலே செல்லலாம்

 • Priya
  Reply

  Udaiyar naavalil kuripitulla 108 karanangalin sirpangal. 108 um photo eduthingla.

  • Lokesh Arun
   Reply

   108 முடிய வில்லை. பாதியிலேயே வேலை நிறுத்தப்பட்டன. ஆனால் அந்த சிற்பங்கள் செய்ய அணைத்து கற்களும் பொருத்தப்பட்டு உள்ளனவே.

   மேலே உள்ள புகைப்படங்களில் நீங்கள் சில கரணங்களை பார்க்கலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt