In General

மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று- இந்த நாளில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு துரோக வரலாறு !!! மருது சகோதரர்கள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான மன்னர்கள். அனைத்து சாதி, மத மக்களையும் அரவணைத்து ஆட்சி புரிந்தவர்கள். தமிழ் சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் இஸ்லாமிய மசூதி, கிருத்துவ தேவாலயங்கள் கட்ட பல்வேறு உதவிகள் புரிந்தவர்கள். அனைவரையும் அரவணைத்து ஆட்சி புரிந்து சமுதாய நல்லிணக்கத்தை பேணிய மன்னர்கள் என்றே சொல்லலாம். மேலும் இவர்கள் வெள்ளையர்களின் காலனி ஆதிக்கத்தை வலுவாக எதிர்த்த பாளையக்காரர்களில் முக்கியமானவர்கள். வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் என்றால் அது மிகை அல்ல. இவர்களை அழிக்க ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதரவாளர்கள் பலரிடம் உதவி கேட்டனர். இதில் தஞ்சையை ஆண்ட மராட்டியர்களும் ஒருவர். மராட்டியர்கள் செய்த உதவி பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது அதில் உள்ள வாசகங்களை பார்ப்போம். “ஆங்கிலேய அரசாங்கத்திற்கு தெற்கு பிரதேசத்தில் இருந்த மருதை என்னும் பாளையக்காரரை அடக்க வேண்டி இருந்தது. அதற்காக மகாராசா(இரண்டாம் சரபோஜி ) தம் சைன்யத்தில் இருந்து 50 இந்து வீரர்களையும் 20 முகமதிய வீரர்களையும் மேலும் சிலரையும் சிவண்ணா என்பவருடன் அனுப்பியதோடு, சைன்யத்தின் செலவுக்காக தாமே கையில் இருந்த பணத்தை கொடுத்து ரெசிடென்ட் பிளாக்பர்ன் துறையோடு 1801 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி அனுப்பி வைத்தார்”, (இந்த 1801 ஆம் ஆண்டிலேயே மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்டது நினைவு கூறத்தக்கதாகும். ) மேற் கூறிய கல்வெட்டு உள்ள இடம் வேறு எங்கும் அல்ல உலகிற்கே தமிழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் பெரிய கோவிலில் மராட்டியர்கள் கட்டிய விநாயகர் கோவிலில் போன்ஸ்லே சரித்திரம் என்ற கல்வெட்டில் தான் உள்ளது. ராசராசன் மெய்கீர்த்தி , கட்டிடக்கலை கோவில் மதிக்கபெற்ற பண்பும் மக்களாட்சி தத்துவம் போன்ற பல்வேறு கூறுகளை ஆங்கிலேயர்களின் தயவில் வாழ்ந்த சரபோஜியின் கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது தமிழர்களின் மிக சரிந்த நிலையைத்தான் காண முடிகிறது என்று தஞ்சாவூர் நூலில் குடவாயில் பாலசுபிரமணியன் ஐயா அவர்கள் வேதனையோடு கூறுகிறார். உண்மை தான் தமிழர்கள் கட்டிய கோவில் வளாகத்திலே ஒரு தமிழ் மன்னரை ஒழிக்க ஆங்கிலேயருக்கு உதவி செய்தோம் என்று ஒரு பிற மொழி மன்னர் ஒருவரின் கல்வெட்டை கண்டால் எந்த தமிழருக்கு தான் ரத்தக் கண்ணீர் வராது. அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தமிழ் மொழியும் தமிழ் இனமும் விழித்துக் கொள்ளும் நாள் எந்நாளோ ??? —— தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு ‪#‎GaneshAnbu‬

மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று- இந்த நாளில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு துரோக வரலாறு !!!மருது …

Posted by Thanjavur on Saturday, 24 October 2015

Comments
  • Ganesh Anbu
    Reply

    மீள் பதிவு !!!

Leave a Reply to Ganesh Anbu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt