In General

என்னுடைய இந்த ஆண்டு விடுமுறையில் நான் தஞ்சை வந்து பல நல்ல விடயங்கள் பார்த்தேன், செய்தேன் என்றே சொல்ல வேண்டும் அதில் ஒரு முக்கியமான விடயம் சசி தரன்னுடனான தொலைபேசி உரையாடல். தஞ்சை மைந்தனான நானே தஞ்சையில் பார்க்க தவறிய போற்ற தவறிய ஒரு விடயத்தை பற்றி பொட்டில் அறைந்தார் போல் சொன்னார். அவர் சொல்லும் வரை தஞ்சை அருகே இப்படி ஒரு அழகான மதி மயக்கும் இடம் இருக்கிறது என்பதை அறியாதவனாய் இருந்தேன், அவர் சொன்ன இடம் புள்ளமங்கை என்று அழைக்கப்படும் பசுபதி கோவில் பிரம்மபுரிஸ்வரர் கோவில் தான்.

புரதான சின்னகளின் மேல் பற்று உள்ளவர்களும், சிறபங்களை ரசிக்கும் அனைவரும் பார்க்க தவறக் கூடாத பார்க்க துடிக்கும் இடம் அது. நீங்கள் அங்கு சென்றால் உயிருள்ள சிற்பங்களை பார்த்து மெய் மறந்து போவீர்கள் அவசியம் போய் வாருங்கள் என்றார், அவசியம் போகிறேன் என்று சொன்ன பொழுதே மனக்கண்ணில் உயிருள்ள சிற்பங்கள் வாழும் அந்த கோவில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நெஞ்சில் ஓடியது. நெஞ்ச ஓட்டங்களை இரு தினங்கள் அடக்கி ஞாயிற்று கிழமை அவசியம் பார்த்தே தீருவது என்று காலை 10.30 மணி அளவில் நானும் தம்பி சிவா சங்கரும் புறப்பட்டோம்.

தஞ்சையின் காதலி காவிரியின் விரகதாபம் வீறுகொண்டு எழுந்து வெறி கொண்டு தஞ்சை எனும் அவளின் கணவனுடன் கூடியதின் விளைவாக அணைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்து பசுமை என்ற தஞ்சை காவிரியின் மைந்தன் எங்கும் பரவிகிடந்தான். அந்த கொள்ளை அழகை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே சென்று கொண்டு இருந்தோம்.
பச்சை பட்டுடுத்திய வயல்களின் மத்தியில், மதிய வெயிலிலும் நீரோட்டத்தால் சில்லென தொட்டு சிலிர்பூட்டிய காற்றோடு தொடர்ந்தது எங்கள் பயணம். தஞ்சை கொடிமரத்து மூலையில் உள்ள எங்கள் இல்லத்தில் இருந்து கரந்தை, பள்ளியக்ராகாரம், நெடார், மானாங்கோரையை கடந்து பசுபதி கோவிலை அடைந்தோம்.

அங்கே பிரமபுரிஸ்வறார் கோவில் என்று சொன்ன பொழுது அவர்களுக்கு புரியவில்லை, ஒரு பழைமையான கோவில் உள்ளதே அது தான் என்று கூறினோம் . இங்கே இரண்டு பழைய கோவில் உள்ளது ஒன்று பசுபதீஸ்வரர் மற்றொன்று புள்ளமங்கை என்றார். ஒரே குழப்பம் அப்பொழுது சசியை அழைக்க முற்பட்டேன் தொடர்பில் புடிக்க இயலவில்லை. பிறகு lவிவரம் தெரிந்த ஒருவர் பிரமபுரிஸ்வரர் என்றால் புள்ளமங்கை கோவில் தான் என்று வழிகாட்டினார். மிகவுல் குறுகலான சாலை, பசுமையான புல்வெளிக்கு மத்தியில் இன்றைய நவநாகரீக ரியல் எஸ்டேட் அரக்கனின் புதிய வீட்டுமனைகளும் இருந்தன. ஒரு வழியாக கோவிலை அடைந்தோம், ஆனால் மிஞ்சியதோ ஏமாற்றம் தான்.

கோவில் பூட்டி இருந்தது அப்பொழுது சசி அலைபேசியில் அழைத்தார் அவரிடம் கோவில் பூட்டி உள்ளது என்றேன் பிறகு அருகில் தான் பூசாரியின் இல்லம் அவரை அழையுங்கள் என்றார். ஆனால் அவர் வெளியே சென்று விட்டார் மாலை 5 மணிக்கு தான் திறப்பார்கள் என்றார்கள். ஏமாற்றத்தோடு திரும்பி மீண்டும் 4.30 கு கிளம்பி சென்றோம். இம்முறை எங்களுக்கு ஏமாற்றம் இல்லை ஒரு வித ஏகாந்த மாற்றம் தான்…..!!!

நாங்கள் அங்கே சென்றதை பார்த்தவுடன் ஒரு பாட்டி வந்து வாங்க தம்பி நீங்கள் தான் காலையில் வந்ததா என்று கேட்டு திருந்துவிட்டார். ஒரு வித எதிர்பார்ப்பிலும், சோழர் வழித்தடத்தில் நாமும் பாதம் பதிக்க போகிறோம் என்ற உணர்ச்சி பெருக்கிலும் உள்ளே நுழைந்தோம், வாயில் கடந்து சிவன் நந்தியை பார்த்த பொழுது பெரிய ஆச்சர்யம் இல்லை பிறகு வெளியில் வந்து கோபுரத்தை பார்த்தோம் .. பார்த்தோம் பார்த்தோம் …. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் அப்பப்பா என்ன அழகு பார்த்தோம் …வியந்தோம் !!!!! கோவிலில் அமைப்பு கிட்டத்தட்ட மகாபலிபுரம் கோவிலின் அமைப்பை போல் இருந்தது பார்பதற்கு

பிறகு ஒரு ஒரு சிற்பமாக பார்த்து ரசிக்க தொடங்கினோம். அப்பப்ப எத்தனை துள்ளிய வேலைபாடுங்கள், எவ்வளவு அழகாய் உணர்வை வெளிபடுத்தும் அழகிய சிற்பங்கள்.முருகனின் பிறப்பை வெளிபடுத்தும் விதமாக குட்டி குட்டி சிற்பங்கள், உயிரோடு இருகிறதா என்று எண்ணத்தூண்டும் யாழி, கொட்டாங்குச்சியில் வயலின் போல் இசைக்கும் ஒரு இசை கருவியில்(மன்னிக்கவும் அதன் பெயர் தெரியவில்லை) ஏகாந்தமாய் இசை இசைத்து மெய்மறந்து நிறுக்கும் அந்த நிலையில் இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் இசை என்னும் இன்பகடலில் மூழ்கிவிட்டேன் என்று சொல்வார்களே அப்படி ஒரு நிலையில் முக பாவனை கொண்ட ஒரு சிற்பம் அப்பா என்னசொல்ல அதை பற்றி புல்லரிகிறது பார்த்தவுடனே உண்மையில் ஒருவர் என் முன் அத்தனை ஏகாந்த இசையில் மூழ்கி இருபது போலவே உணர்தேன்…

 

ஏகாந்த இசையை ரசித்து திரும்பிய எனக்கு திடீர் என்று பெரிய அதிர்ச்சி என் முன்னே ஒரு பெண் அரை நிர்வாண கோலத்தில் நடமாடுவது போல் ஒரு மாயை (திடீர் என்று ஜிவ்வுன்னு ஆச்சி ) நன்றாக கண்ணை கசக்கி பின் தெளிவாக பார்த்தால் தான் தெரிகிறது அது ஒரு சிற்பம். அடே அப்பா உண்மையாவே அரைநிர்வாண கோலத்தில் ஒரு பெண் நடனமாடுவது போல் எத்தனை உயிருள்ள சிற்பம்.

அந்த பெண் சிற்பத்திற்கு சற்று மேலே பார்த்தல் திமிர் பிடித்த கட்டிளம்காளை போல் வசீகரமான முகபாவனை கொண்ட அற்புதமான இளைஞனின் சிற்பம்.

பின் புறம் அத்தனை வசீகரத்துடன் சிறு குறுநகையுடன் ஒரு அழகிய காண்போரை மயக்கும் ஒரு அற்புதமான பிரம்மா சிலை., அந்த சிலையை பார்த்தால் உலகையே மறந்து கண்கொட்டாமல் பார்ப்பீர்கள் அப்படி ஒரு சிலை,

உண்மையில் அந்த போர்வீரன், பிரம்மா உள்ளிட்ட சில சிலையை தரவேற்றம் செய்யும் பொழுது முகபுத்தகமே இவர்கள் உண்மை மனிதர்கள் என்று குழம்பி click a face to tag என்று காட்டியது, பெருமை கொள்வோம் இன்றைய புதிய தொழில்நுட்பம் கூட கண்டறிய முடியாமல் திணறும் அற்புத படைப்புக்களை படைத்தவர்கள் நம் தமிழர்கள் என்று….!!

 

பிறகு கோவிலின் மேல் ஏறி சிற்பங்களை ரசித்தேன் அதில் வெகுவாய் கவர்ந்தது, கண் முன் உண்மையில் இப்படி தான் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் உயிருள்ள உருவம் போல் நிற்கும் அழகிய அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஒரே கல்லில் செதுக்கபட்ட சிவனும் பசுவும் இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் பசு சிவனில் காலை நக்குகிறது அது அதனை தத்ரூபம் எப்பபா காண கண்கோடி வேண்டும் முதலாம் பராந்தகனின் இந்த அற்புத படைப்பை கண்டு மகிழ, ஒரு ஒரு தமிழரும் கலை ஆர்வலரும் அவசியம் பார்க்கவேண்டிய அற்புதமான கோவில் அவசியம் போய் பார்த்து வாருங்கள், தஞ்சை கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 9 கி மி தூரத்தில் பசுபதிகோவில் என்னும் ஊரில் உள்ளது இந்த கோவில்…. புள்ளமங்கை கோவில் செல்லும் வழி கேட்டால் பசுபதி கோவிலில் அனைவரும் சொல்வார்கள்

என்றும் தஞ்சைக்கான பணியில்
“தஞ்சை மைந்தன்” கணேஷ் அன்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt