October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சை டபீர் குளம் !!!

தஞ்சை டபீர் குளம் !!!

0

தஞ்சை டபீர் குளம் !!!

நேற்று ஒரு படம் பகிரப்பட்டு இது ஒரு நீர்நிலை இது எங்கு உள்ளது இதன் பெயர் என்ன என்று கேட்டோம். அந்த நீர்நிலையில் விவரத்தை முழுமையாக பார்ப்போம்.

தஞ்சாவூர் மராத்திய மன்னர் பிரதாபசிம்மன் ஆட்சிக்காலத்தில் அரண்மனை நிர்வாக அலுவலராக விளங்கிய விசுவநாத பண்டிதர் என்பவர் நிருவாகத் திறமையால் அமைச்சராக பதவி உயர்வினைப் பெற்றார். அதன் பின்னர் அரசரின் அன்பான ஆதரவால் டபீர் பண்டிதர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டார். டபீர் என்பது பாரசீகச் சொல் ஆகும். இச்சொல்லிற்குச் செயலர் என்று பொருள் கூறுவர். இவரது இயற்பெயர் நாரோ பண்டிதர் என்பதாகும். இவரது பேரன்களாக நாரோ விசுவநாதத், நாநாஜி கங்காதர் ஆகிய இருவரும் வாழ்ந்துள்ளனர்.

இந்த டபீர் பண்டிதரின் பெயரால் அரண்மனையின் கிழக்கு வாயிலில் பெரிய கோட்டை அகழிக்கு வெளியே ஒரு குளத்திற்கு டபீர் குளம் பெயர் வைத்தனர். ஒரு வேலை இந்த பகுதி இந்த டபீர் பண்டிதருக்கு வழங்கிய இடமாக கூட இருக்கலாம். இந்த டபீர் குளத்திற்கு வடவாற்றில் இருந்து நீர் வந்து கொண்டு இருந்தது சில ஆண்டுகள் வரை நீர் நிரம்பு அழகாக காட்சியளிக்கும் இந்த குளம் சமீபகாலமாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியும், மாவட்ட நிர்வாகத்தின் சரியான கவனிப்பும் இல்லாததால் நீர் வழி பாதை அடைக்கப்பட்டு நீர் இன்றி உள்ளது. நீர்வழிப் பாதையையும், மணல் மூட்டையால் அடைக்கப்பட்டு உள்ள நீர் வழி பாதையையும் படத்தில் காணலாம்

 

10728637_10152598866549865_1720421109_n

இது பற்றி அருகில் வசிப்போரிடம் விசாரித்து பார்த்ததில் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை வடவாற்று நீர் வந்துகொண்டு இருந்ததாகவும், சென்ற ஆண்டு ஆழப்படுத்த JCP கொண்டு பணி நடந்தபொழுது, சக்கரம் மாட்டிக்கொண்டதாகவும், பின்னர் அந்த JCP யை மேலே தூக்க முயற்சித்த பொழுது பாதை அடைக்கப்பட்டதாகவும் பிறகு அந்த பணி கிடப்பில் போட பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும் அந்த குளத்தை தான் அந்த பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தாள் அந்த குளமே குப்பை மேடாகவோ குப்பை தொட்டி போலவோ மாற வாய்ப்பு இருக்கிறது

மாவட்ட( District Collector, Thanjavur ), மாநகர நிர்வாகமே ஒரு சிறிய புறக்கணிப்பு தான் பெரிய தவறுக்கு அடித்தளமாக அமைகிறது, நீர் வழி பாதை அங்கே நல்ல நிலையில் உள்ளது, ஆனால் அதிகமான மண் தேங்கி பாதை அடைபட்டு உள்ளது சில ஆயிரம் செலவு செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போதும் இந்த அடைப்பை சரி செய்ய. இதை இப்படியே விட்டால் ரியல் எஸ்டேட் எனும் அரக்கர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து இது பயன்பாடற்ற குளம் என்று என்னும் காலம் வரலாம் ஆகவே இன்றே இந்த குளத்தை ஆழப்படுத்தி, குப்பையை சுத்தப்படுத்தி, நீர் வழிப் பாதையை சீரமைத்து மழை நீரும், ஆற்று நீரும் வரும்படி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொகிறோம்.

குளத்தை காப்போம்!! நாளைய குலத்தை காப்போம் !!!

நன்றி

தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273