July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / 208 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தின் வரலாறு !!!

208 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தின் வரலாறு !!!

0

208 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தின் வரலாறு !!!

பல்வேறு காலகட்டங்களில் பல இன மன்னர்கள் ஆண்டு நீதி தவறா அரசாட்சி புரிந்த தஞ்சையில் தற்பொழுது இயங்கும் நீதி மன்றம் தோன்றிய வரலாற்றை பார்போம்

தஞ்சையில் ஜில்லா நீதி மன்றம் 1806 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, 1807 ஆம் ஆண்டு திரு . சார்லஸ் உட் கோக் (Mr.Charles wood cock) என்பவர் ஜில்லா நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரே தஞ்சை ஜில்லா நீதிமன்றத்தின் முதல் ஜில்லா நீதியரசர் ஆவார். நீதி துறை பணிகள் அதிகமாகவே தஞ்சாவூர் ஜில்லா நீதி மன்றம் , தஞ்சாவூர் மேற்கு மற்றும் கிழக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் ஜில்லா கிழக்கு நீதி மன்றம் தரங்கம்பாடியின் அமைந்தது. தஞ்சையில் இருந்த ஜில்லா நீதி மன்றம் தஞ்சாவூர் மேற்கு ஜில்லா நீதி மன்றம் என்று ஆனது.

தற்போது உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடம் 1870 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1873 ஆம் ஆண்டு ஜில்லா நீதிமன்றம் மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

district court

2007 ஆம் ஆண்டு 200 ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட நீதி மன்றத்தின் கீழ் 31 கிளை நீதிமன்றங்களும், 596 பணியாளர்களும் உள்ளார்கள். தற்பொழுது திரு முகமது அலி என்பவர் மாவட்ட நீதியரசராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார், இவர் தஞ்சாவூர் மாவட்ட நீதி மன்றத்தின் 145 ஆவது நீதியரசர் ஆவார்.வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை நீதிமன்றத்துக்கு தற்பொழுது 208 வயது ஆகிறது.

தகவல் உதவி : http://ecourts.gov.in/tn/thanjavur

நன்றி

தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு

 

https://www.facebook.com/Thanjavur/photos/a.227236163969690.75656.227224950637478/1071048566255108/?type=1&permPage=1


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273