October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / யார் அந்த பூச்சாண்டி ..???

யார் அந்த பூச்சாண்டி ..???

0

பொதுவாக நம் வீட்டில் சிறு குழந்தைகள் குறும்பு செய்தாலோ அல்லது உணவு உன்ன மறுத்தாலோ நம் தாய்மார்கள் பூச்சாண்டி வராறான் வந்தா உன்ன புடிச்சிட்டு போய்டுவான் என்று பயம் காட்டுவார்கள். நம்மிடையே நீண்ட நெடுங்காலமாக ஒரு சந்தேகம் உள்ளது யார் அந்த பூச்சாண்டி ?? ஏன் அவன் பெயர்சொல்லி நாம் பயம்காட்டுகிறோம் என்று. இந்த விடையறியா கேள்விக்கு தொ பரமசிவம் அவர்கள் தன்னுடைய விடுபூக்கள் என்னும் நூலில் இதற்க்கான விடையை கூறியிருக்கிறார், இது மட்டும் அல்லாமல் நமிடையே இருக்கும் வேறு சில வசைச் சொற்களும் எப்படி வந்தது என்று விளக்கம் அளித்து உள்ளார் அவற்றை பற்றி காண்போம்.

 

10402936_884038048289495_8744219656546147923_n

தமிழகத்தில் பக்தி மார்கங்கள் என்பது சைவ,வைணவ மதங்களின் வளர்ச்சி மட்டுமன்று, அது பௌத்த சமண மதங்களுக்கு எதிரான கலகக் குரலும் தான். இந்த சைவ வைணவ மதங்களின் எழுச்சியாலும் அவர்களின் கலகக் குரலாலும் சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் வேரற்று போயின. இந்த இரு மதங்களின் மேல் இருந்த வெறுப்புணர்வின் எச்சங்கள் இன்றும் நம்மிடையே வசை சொற்களாக வழங்கி வருகின்றன. வயதில் மூத்தவர்களின் நிர்வாணம் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது. சமணத் துறவிகளின் மேல் இருந்த எதிர்ப்புணர்வில் தான் அம்மணம்,மயிராண்டி,மயிரப் புடுங்கு போன்ற வசைச் சொற்கள் உருவாகி இன்று வரை வழக்கில் உள்ளது. இதற்கெலாம் என்ன பொருளென்றால் சமணத் துறவிகள் எப்பொழுதும் நிர்வாணமாக இருப்பார்கள் இதன்பொருட்டே “அம்மணம்” என்ற வசை சொல்லும், உடம்பில் மயிரின்றி அவர்கள் திரிவதை கேலிசெய்யும் பொருட்டே “மயிராண்டி” என்றும், சமணத் துறவிகள் உடலில் உள்ள மயிரய் கத்தியால் மழிக்காமல் கையால் புடுங்கும் பழக்கமுடையவர்கள் இதை ஏளனம் செய்யும் பொருட்டே “மயிரைப் புடுங்கு” என்ற வசை சொல்லும் உருவாயிற்று. இதுவே இதுபோன்ற வசை சொற்கள் நம்மிடையே பிறக்க காரணம்.

மேலும் நம்மிடையே உள்ள மற்றுமொரு வசை சொல் “ஏழு வழி போகிறவன்”, இந்த சொல் உறுதியாக இல்லாதவனையும், ஒற்றை போக்கு இல்லாமல் இருப்பவரையும் வசை பாட பயன்படுகிறது. இந்த சொல் எப்படி வந்தது என்றால் சமண சிந்தாந்தத்தில் பேசப்படும் சப்த பங்கி என்னும் ஏழு நிலைகளை குறித்ததாகும், சமண மதம் தனியொரு இறைவனை ஏற்றுக் கொள்ளாததகும். உண்டு, இல்லை, சொல்ல முடியாது என்ற மூன்றையும் மாறி மாறிக் கூடி ஏழு நிலைகளை சமணத் தத்துவம் பேசும் இதைதான் சைவ சமயத்தார் வசை சொற்களாக சித்தரித்துவிட்டனர். இதே போல் சைவ நெறிக்குள்ளும் மறைந்து போன காளமுக, பாசுபத,மாவிரதிகள் பற்றிய சொற்களும் தொல் எச்சங்களும் இன்றும் உள்ளது. நெற்றியில் மட்டும் இன்றி உடம்பு முழுவதும் நீறு பூசிக்கொள்வது அவர்கள் வழக்கம். சிவபெருமானையே “மெய்யெல்லாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்” என்று அப்பர் பாடுகிறார்.

காளமுக,பாசுபத,மாவிரதிகள் முன்று பிரிவினரும் ஆண்டி கோலமுடையவர்கள் இதில் மாவிரதிகள் கபால மாலை அணிந்தவர்கள். சிவபெருமானின் நெற்றிக் கண் போல இவர்களும் தம் நெற்றியின் கண் வரைந்து கொண்டவர்கள், எனவே காட்சி ஊடகங்களின் வளர்சிக்கு முன்னர் குழந்தைகளை அச்சுறுத்த பூச்சாண்டி வருகிறான், மூனுகண்ணு பூச்சாண்டி வருகிறான் என்ற தொடர்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. மேற்கூறியவை மறைந்து போன மார்க்கங்களின் நினைவெச்சங்கள், அவற்றை பற்றிய எச்சங்கள் மலைகளிலும், குடவரை கோவில்களிலும், சிற்பங்கள் வாயிலாகவும் அறியமுடிகிறது. நம்மிடையே இது போல் எண்ணற்ற மறைந்து போன விடயங்களை பற்றி வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்து கூறினால் பண்டைய கால வாழ்க்கை முறையை அறிய ஏதுவாக இருக்கும் செய்வார்களா ?? மேற்கூறிய இந்த செய்தி தொ பரமசிவம் அவர்கள் எழுதிய விடுபூக்கள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது

நன்றி

கணேஷ் அன்பு

https://www.facebook.com/Thanjavur/photos/a.227236163969690.75656.227224950637478/884038048289495/?type=1


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273