உமையம்மை வலப்பக்கம் உள்ள சோழர் கால “#மாதொருபாகன்” !!!!
மாதொருபாகன் என்ற தலைப்பை கேட்டவுடன் பல சர்ச்சைகளை கடந்து இப்பொழுது தான் இந்த பிரச்னை அமைதியாகியது மீண்டும் கிளப்புகிறானே என்று நீங்கள் எரிச்சலடைவது புரிகிறது. ஆனால் நான் அந்த புத்தகத்தை பற்றி சொல்லவரவில்லை படத்தில் காணும் இந்த மாதொருபாகனை பற்றி சொல்ல வந்தேன்.
மாதொருபாகன் என்பது சிவனை குறிப்பது தனது பாதியை உமயவளுக்கு வழங்கி நீ பாதி நான் பாதி என்று உணர்த்தும் ஆண் பாதி பெண் பாதி என்ற சிற்பம் தான் மாதொருபாகன் இதற்கு நாம் அதிகம் பயன்படுத்தும் அர்த்தநாரி என்ற சொல் வட மொழி சொல்லாக இருக்க கூடும் என்று நினைக்கிறன்.
பொதுவாக இந்த மாதொருபாகன் சிற்பத்தில் இடப்பக்கம் பெண் வடிவமும் வலப்பக்கம் ஆண் வடிவம் இருக்கும் அதாவது வலதுபக்கம் சிவம் இடதுபக்கம் உமையவள், ஆனால் நீங்கள் படத்தில் காணும் இந்த சிற்பத்தில் பொதுவாக நாம் காணும் மாதொருபாகன் வடிவத்தில் இருந்து மாறுபட்டு வலப்பக்கம் உமையவள் இடப்பக்கம் சிவனும் இருப்பது போல் அமைக்கப்பட்டு உள்ள சிற்பம்.
அந்த வடிவத்தில் என்ன பொலிவு என்ன ஒரு மெலிதான புன்னகை அப்பப்பா என்னவென்று சொல்வது நமது தமிழ் மன்னர்களின் ரசனைகளை. பொதுவாக நாம் காணும் சிற்பத்தில் இருந்து இது மாறுபட்டு இருப்பது நமக்கு உணர்த்துவது அன்றே நமது தமிழர்கள் எதையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல் எதையும் மாற்றி யோசிக்க நினைபவர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.
சமீபத்தில் நண்பர் லோகேஷ் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆடல்வல்லான் சிலை பொதுவாக இடது காலை தூக்கி நிற்பது போல் அல்லாமல் வலது காலை தூக்கி நிற்கிறது இது பாண்டிய மன்னனின் ஆசைப்படி நடந்தது என்று கோவில் தலவரலாறு உள்ளது இந்த தகாணும் வரலாற்றை படிக்கையில் புலிகேசியில் சொல்வது போல் ஆயிரம் வருடங்களுக்கு பின் வரும் மடையர்களுக்கு தெரியவா போது எதையாவது சொல்லி வைப்போம் என்பது போல் உள்ளது என்றும், சோழர்களிடம் இருக்கும் அடக்கம் பாண்டியர்களுக்கு இல்லை கடவுளையே தங்கள் விருப்பத்திற்காக மாற்றியவர்கள், சுயநல வாதிகள் , தற்பெருமை பேசுபவர்கள் அதனால் தான் இன்று நாம் சோழர்களை நினைவு கூறும் அளவு பாண்டியர்களை நினைவு கூறாமல் உள்ளோம் என்று பாண்டிய வரலாற்றை படிக்காமலே கூறினார்.
மேற்கூறிய அவரின் பதிவிற்கு நான் கூறிய பதில், ஆடல்வல்லான் இடது காலில் தூக்கி நிறுக்கும் வடிவத்தில் அணுவை பிளக்கும் அறிவியல் தந்திரத்தை ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவத்தில் வைத்த நமது தமிழர்கள், இந்த வலது கால் தூக்கி ஆடும் தாண்டவத்திலும் ஏதேனும் செய்தி வைத்து இருப்பார்கள், அந்த செய்தியை தேட முற்படு அவசரப்பட்டு தல வரலாற்றை நம்பி பாண்டியர்களை குறை கூறுவது தவறு, முதலில் பாண்டியர்களின் வரலாற்றை சரியாக படியென்றேன். சோழர்களின் வீழ்ச்சிக்கு பின் தஞ்சையில் உள்ளவர்களே சோழர்களை மறந்து ஒரு 500 வருடத்திற்கு மேல் இருந்தார்கள் பெரியகோவிலை கட்டியது ராஜராஜன் என்பதும் பலருக்கு தெரியாது அதை சொல்லவே ஜேர்மன் அறிஞர் ஹீல்ஸ் தேவைப்பட்டார். மேலும் கூறியது நாம் இன்று ராஜராஜனை கொண்டாவதுற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி தான். அந்த நாவல் மட்டும் இல்லை என்றால் இப்பொழுது நாம் இந்த அளவு ராஜராஜனையும் சோழர்களையும் கொண்டாடி இருப்போமா?? என்பதே சந்தேகம் என்றேன், பாண்டியர்களின் வரலாற்று புதினம் எழுத கல்கி போல் ஒரு எழுத்தாளர் கிடைக்காததால் தான் இந்த நிலை என்றேன் ஒரு வேலை கல்கி பாண்டிய வரலாறு எழுதி இருந்தால் அவர்களை கொண்டாடி இருப்பமோ என்னவோ யார் கண்டது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு மொழி பேசும் மூன்று பேரரசர்கள் தங்களுக்கு போரிட்டு மடிந்ததின் விழைவே இன்று அனைத்து வம்சமும் காணமல் போயிற்று. மேலும் நம்மை விட சிறிய பாரம்பரியம் இல்லாத இனமெலாம் ஒரு சிறிய பகுதியையாவது சுயமாக ஆளும் பொழுது உலகையாண்ட பேரரசுகளை ஈன்ற தமிழினம் இன்று ஒரு குறுநிலத்தை கூட சுயமாக ஆள முடியாத நிலைக்கு தள்ளபட்டுவுள்ளது . ஆகவே இனியும் வேண்டாம் இந்த பிரிவினை என்றேன்.
இந்த சிலை சோழர்காலத்தில் கருந்திட்டை குடி மகாதேவர் கோவிலில் அமைக்கபெற்றது, தற்பொழுது இந்த இடம் தஞ்சையில் கரந்தை/ கருதட்டாங்குடி என்றும் இந்த கோவில் கருணாசாமி கோவில் என்றும் அழைக்கபடுகிறது.இது போன்ற வடிவம் வேறெங்கும் உள்ளதா?? என்பதை தெரிந்தவர்கள் சொல்லவும். இந்த தளம் அப்பர் பெருமானால் பாடல் பெற்ற தளம். முதலாம் பராந்தகன் காலத்தில் அமைக்கப்பட்டு பின்னர் உத்தம சோழன் காலத்தில் சீரமைக்க பட்டதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள் . மேலும் இந்த கோவிலில் உத்தமசோழன், ராராஜசோழன், ராஜேந்திர சோழன் , குந்தவை,இரண்டாம் ராசராசன் உள்ளிட்டோரின் கல்வெட்டு உள்ளது. இந்த கோவில் கல்வெட்டு செய்திகளை சொல்லவேண்டும் என்றால் ஒரு ஒரு செய்தியையும் ஒரு தனி பதிவில் சொல்லவேண்டும். அந்த கல்வெட்டு செய்திகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்
கேட்டவுடன் படம் எடுத்து அனுப்பிய தம்பி சிவசங்கருக்கு நன்றி
நன்றி
தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு
#Ganeshanbu #Thanjavur #Chola #Maathorupaagan #Arthanaariswarar#Karanthai #Magathevar
உமையம்மை வலப்பக்கம் உள்ள சோழர் கால " #மாதொருபாகன்" !!!!மாதொருபாகன் என்ற தலைப்பை கேட்டவுடன் பல சர்ச்சைகளை கடந்து…
Posted by Thanjavur on Sunday, 15 February 2015