July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / கார்நாக் கற்கள் – மர்மலோகம் PART 3

கார்நாக் கற்கள் – மர்மலோகம் PART 3

5

ஒரே இடத்தில் நாம் எவ்வளவு நேரம் நிற்க முடியும்? சிலரால் சில நிமிடங்களும், சிலரால் சில மணி நேரங்களும் முடியும். ஆனால் ஒரே இடத்தில் சுமார் 6500 ஆண்டுகளாக சில கற்கள் நிற்கிறது.. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 3000 கற்கள்.. அவற்றிற்கு அந்த ஊரின் பெயரையே வைத்துவிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.. ஆம் அவை “கார்நாக் கற்கள்” (Carnac Stones) என்றே அழைக்கப்படுகிறது..

யார் இந்த கற்களை வைத்தது?? எதற்காக வைத்தார்கள்?? இந்த நிலையாய் நிற்கும் கற்கள் எதை குறிக்கிறது??
பார்ப்போம்…

Menhirs_carnac

Image

பிரித்தானி (Brittany) எனப்படும் பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமம் “கார்னாக்” (Carnac). இங்கு இரண்டு மைல் (3கிமி) தூரத்திற்கு சுமார் 3000 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளாக அவை அங்கே இருந்தபோதிலும் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களால் அதன் வரலாறையும் அதன் அர்த்தங்களையும் இன்னும் கண்டுபிடிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை.

Image2

‘மென்ஹிர்’ (Menhir) எனப்படும் உயர்ந்த ஒற்றைக் கற்கள், ‘டோல்மென்’ (Dolmen) எனப்படும் பல கற்களள் ஒன்றாக சேர்ந்த குவியல் என இரண்டு வகையிலும் செய்யப்பட்டதாக இந்த “கார்நாக் கற்கள்” இருக்கிறது. கார்நாக் கற்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் வடிவம் மூன்று வகையாக பிரிக்கலாம் – ‘மேநேக்’ அமைப்ப்பு (Ménec alignments); ‘கேர்மாரியோ’ அமைப்பு (Kermario alignment) மற்றும் ‘கேர்லிஸ்கன்’ அமைப்பு (Kerlescan alignments).

‘மேநேக்’ அமைப்பு (Ménec alignments)
11 வரிசைகளாக 1165 மென்ஹிர் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதியில் உயரமான கற்களும் (பெரியது 13 அடி) பின்னர் கிழக்கு நோக்கி நகரும் வரிசையில் கற்களின் உயரம் படிப்படியாக குறைந்தும் கடைசியில் 2 அடி கற்கள் வரை இருக்கிறது. மேற்கு கடைசியில் 71 கற்கள் கொண்ட ஒரு அமைப்பும் (கிழே படத்தில் இருப்பது போன்று) கிழக்கு கடைசியில் அதே போன்ற அமைப்பும் இருப்பதாக சொல்கிறார்கள்.

Menec

கெர்மாரியோ அமைப்பு
அங்கிருந்து இன்னும் சிறிது கிழக்கே சென்றால், 10 வரிசைகளில் மொத்தம் 1029 கற்கள் சுமார் 4300 அடி நீளத்திற்கு நிற்கின்றன. மேலிருந்து பார்த்தால் அது ஒரு விசிறி போன்ற அமைப்பில் இருக்கிறது. கிழக்கு மூலையில் வட்ட வடிவில் சிறிய சிறிய கற்கள் நிற்கிறது. அருகில் இருக்கும் படத்தை பாருங்கள்.. இதற்கு “கெர்மாரியோ அமைப்பு” என்று பெயர்.
Kermario
கெரிஸ்கான் அமைப்பு
இங்கிருந்து இன்னும் சற்று கிழக்கே சென்றால்… சுமார் 2600 அடி நீளத்திற்கு 13 வரிசைகளில் 555 கற்கள் நிற்கின்றன.. இவற்றின் உயரம் 2 அடி முதல் 13 அடி வரை வேறுபடுகிறது. கிழக்கே சிறிய கற்களும் மேற்கே உயரமான கற்களும் இருக்கின்றன. உரமான கற்கள் இருக்கும் மேற்கு பகுதியில் 39 கற்கள் வட்ட வடிவில் நிற்கின்றன.  அருகில் இருக்கும் படத்தை பாருங்கள்.. இதற்கு “கெரிஸ்கான் அமைப்பு” என்று பெயர்.
Kerlescan
மேலும் ’டுமிலி’ (Tumuli) என்றழைக்கப்படும் சிறு குன்றுகள் சில இருக்கின்றன.. இந்த ‘டுமிலி’ எனப்படும் குன்றுகள் கல்லறைகளுக்கு மேலே எழுப்பப்படும் செயற்கைக் குன்றுகள்… மற்றும் ‘டொல்மன்’ (Dolmen) எனப்படும் கல்லறைக் கற்குவியல்களும் நிறைய இருக்கின்றன. அருகில் இருக்கும் படங்களைப் பாருங்கள்…
Tumulus_carnac
dolmen
இந்த கற்களை யார் வைத்திருப்பார்கள்?? எதற்கு வைத்திருப்பார்கள்?? இந்த வரிசை முறைக்கு என்ன அர்த்தம்??
மர்மம் நீடிக்கிறது……
தேடல் தொடரும்..
முந்தைய பகுதிகள்:
###படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.

Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273