சென்ற மாதம் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டார் அன்று இருந்த சில வேலை பளுவில் பிறகு சொல்கிறேன் என்று கூறினேன் பிறகு அவரும் அதை மறந்து போனார் நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு செய்தியை படிக்கும் பொழுது அவர் கேட்ட அந்த வார்த்தை அங்கு படிக்க நேர்ந்த பொழுது அவர் கேட்ட அந்த ஞாபகம் வந்தது, இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நண்பர்க்கு அவர் என்ன கேட்டோம் என்றே மறந்து போயிற்று. சரி விடயத்திற்கு வருவோம் அவர் கேட்ட சந்தேகம் தஞ்சையில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலும் “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர்” என்று குறிப்பிட்டு உள்ளதே அதன் பொருள் என்ன இது தான் அந்த நண்பர் கேட்ட கேள்வி. உதாரணமாக தஞ்சாவூர் கோவிலை கட்டியது ராஜராஜன் தான் என்று ஜேர்மன் அறிஞர் ஹீல்ஷ் 1886 ஆம் ஆண்டு கூறினாலும் 1892 ஆம் ஆண்டு வெங்கையா என்பவரால் வெளியிடப்பட்ட தென் இந்திய கல்வெட்டுக்கள் என்னுள் நூலில் இடம்பெற்றுள்ள
“பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுபிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்”
என்ற பெரிய கோவில் கல்வெட்டே ராஜராஜன் தான் பெரியகோவிலை கட்டினான் என்று சற்றும் ஐயமின்றி உறுதி செய்தது.
இப்பொழுது நாம் பார்க்க போவது இந்த கல்வெட்டிலும் இன்னும் பிற கல்விட்டிலும் உள்ள பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்பதன் பொருள் என்ன என்பதைத்தான் பார்க்கப்போகிறோம்
சோழ மன்னர்களில் திலகமென திகழ்ந்து ஒப்பற்ற ஆட்சி புரிந்து, உலகே வியக்கும் வண்ணம் ஈடு இல்னையில்லா கலைக் கோவிலாம் தஞ்சை பெரிய கோவில் என்னும் ராஜராஜீஸ்வரத்தை எழுப்பியவன், என்றும் தமிழர்கள் நெஞ்சில் பேரரசராக இன்றும் ஆட்சி புரிபவன் நம் பாசத்திற்குரிய மாமன்னன் அருண்மொழி தேவன் என்ற ராஜராஜ சோழன்( கி பி 985-1014)
ராஜராஜ சோழன் காலத்தில் தான் சோழ மண்டலம் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த வளநாடுகள், நாடு அல்லது கூற்றங்கலாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டுப் பகுதியிலும்(கூற்றதிலும்) பல்வேறு ஊர் சபைகள் இருந்தன. வளநாடு என்ற அமைப்பு மாவட்டத்திற்கு , நாடு அல்லது கூற்றம் என்பது வட்டம் (தாலுக்கா) என்னும் தற்போதைய நாட்டுப் பிரிவுகளுக்கு ஒப்பானவையாகும். இது போன்ற வளநாடுகளுக்கு சோழமன்னர்கள் தங்களின் விருதுப் பெயர்களையே இட்டனர். எடுத்துக்காட்டாக ராசராசனின் விருதுப் பெயர்களான கேரளாந்தகன், பாண்டிய குலாசனி, சத்ரிய சிகாமணி, அருமொழித் தேவன் முதலான பெயர்கள் வளநாட்டுக்கு சூட்டப்பெற்றன.
“பாண்டிய குலாசனி வளநாடு”
அது என்ன பாண்டிய குலாசனி என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம், பாண்டிய குலாசனி என்பது ராஜராஜ சோழனின் விருதுப் பெயர்களில் ஒன்றாகும். பாண்டிய குல அசனி என்பதே பாண்டிய குலாசனியாகும். அசனி என்பது சமஸ்கிரத வார்த்தை இதற்கு இடி என்று பொருள். அதாவது பாண்டிய குலத்திற்கு இடி போன்றவன் என்பதே பாண்டிய குலாசனி என்ற சொல்லின் பொருளாகும். ராசராசன் தன வீரத்தாலும், அபரிமிதமான போர் திறமையாலும், தோல் வலிமையாலும், நேர்த்தியான போர் படையாலும், கூர்மையான திட்டங்களாலும் பாண்டியர்களுகுப் பேரிடியாக திகழ்ந்தான். ராசராசனின் முதல் வெற்றி பாண்டியர்களுடன் மோதிய பொழுது கிடைத்ததே, எனவே அவன் விரும்பி சூடிய விருதுப் பெயராலே ஒரு வளநாட்டையும் அழைத்து மகிழ்ந்தான். அவ்வாறு பெயர் பெயர் பெற்ற பாண்டிய குலசானி வளநாட்டில் தான் தஞ்சாவூர் என்ற தலைநகரம் திகழ்ந்தது. பாண்டிய குலாசனி வளநாட்டில் இருந்த கூற்றம்/நாடுகளை எவை எவை என்று பாப்போம்
1.ஆர்க்காட்டுக் கூற்றம் 2. கீழ் செங்கிளி நாடு 3. மேற்செங்கிளி நாடு 4. வடசிறுவாயில் நாடு
5. சுண்டய் மூலை நாடு 6. ஏரியூர் நாடு 7. எயில் நாடு 8. இடையாற்று நாடு
9. வடகவீர நாடு 10. கீழ் குடி நாடு 11. கிளியூர் நாடு 12.அகக்கிளியூர் நாடு
13. புறக்கிளியூர் நாடு 14. மீய்பொழில் நாடு 15. பனங்காட்டு நாடு 16. பெருவாயில் நாடு
17.பூதலூர் நாடு 18.பனங்கிய நாடு 19. புன்றில் கூற்றம் 20 தஞ்சாவூர் கூற்றம்
21 விள நாடு
என்ற 21 உட்பிரிவுகள் இருந்தது. இவ்வாறு திகழ்ந்த பாண்டிய குலாசனி தஞ்சாவூர் கூற்றத்தில் பல ஊர்கள் இருந்தன. அவை கண்ணங்குடி(கண்ணந்தங்குடி). கருந்திட்டான்குடி. குருகாடி(குருவாடி), நத்த மங்கலம், நெற்குப்பை. பெண்ணாகடம், ராஜசுந்தர சதுர்வேதி மங்களம் (கள்ளப்பெரம்பூர்), தஞ்சாவூர் போன்ற ஊர்கள் இருந்தன.
நான் வரலாற்று ஆசிரியன் அல்ல வரலாறு வாசிப்பவன் மட்டுமே இந்த தகவல்கள் அனைத்தும் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தஞ்சாவூர் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நன்றி
கணேஷ் அன்பு
good
Gud info..
எனக்கும் அதே சந்தேகம் வெகுநாட்களாய் இருந்து. இதே தகவல்களை வேறு ஒரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.. ஆனால் இவ்வளவு விளக்கமாக இல்லை.. ஐயம் தீர்ந்தது நன்றி அருமையான பதிவு..
Valuable new info, Thanks GA !!
gr8 sir
good information
Gr8 sir
அருமையான விளக்கம் தோழரே…… நன்றி
Thamizhan enndru Thalai nimira cheiyum Thagavalgal , Nirvaga ammaipirkkana ilakkanam Raja raja Chozhan Arasu muraigal , mikkaa nandri sir
” எடுபிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” ithattku porul ?