January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / கிராமத்து திருவிழா (வில்லேஜ் திருவிழா அனுபவம்)

கிராமத்து திருவிழா (வில்லேஜ் திருவிழா அனுபவம்)

12

எல்லாருக்கும் வணக்கமுங்க… !!!!!

ஏற்கனவே எங்க ஊருல கொண்டடுர தமிழ் புத்தாண்டு பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தேன்

அத படிக்க இந்த லிங்க சொடுக்குங்க http://www.mythanjavur.com/2014/04/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2/ .

இப்ப அடுதத ஒரு முக்கியமான நிகழ்ச்சி, என்ன னு யோசிக்குறீங்களா? அது எங்க ஊரு திருவுழாதாங்க…

இத நான் முழுசா அப்படியே எழுதனுனா ஒரு புக்கே போடுர அளவுக்கு எழுதலாம். ஆனா அத படிக்குறதுக்கு உங்களுக்கு பொறுமையும் நேரமும் வேணும். எவ்வளவு சுருக்கி எழுத முடியுமோ அவளவு சுருக்கி எழுதி இருகேனுங்க…

இந்த பொண்ணு திருவிழா பத்தி எப்ப பேச போதுனு யோசிக்குறீங்களா? இதோ வந்துடேங்க..

எங்க ஊரு:

நம்ம நெஞ்ச கொள்ள கொண்ட தஞ்சாவூரின் தெக்கு பக்கம் இருக்க புஞ்சையும் நன்செயும் கொஞ்சி விளையாடுற ஒரு பசுமையான( இப்ப பாதிக்கு மேல பிளாட் போட்டாச்சு, அத பத்தி பேசுனா அரசியல் னு சொல்லிருவாங்க… அதுனால அப்படியே நம்ம டாபிக்குக் போய்ருவோம்) ஊரு தாங்க எங்க ஊரு. விவசாயம் தான் வருமானத்த கொடுக்குது.

 

தஞ்சை பெரியகோவில் P.C Mohammed Javeed

தஞ்சை பெரியகோவில்
P.C Mohammed Javeed

கோயில்:

கோயில் இல்லாத ஊருல குடி இருக்காதீங்கனு அந்த காலத்துலே பெருசுங்க சொல்லி வச்சு இருகங்காங்க. அந்த அட்வைச கேட்டு எல்லா ஊருலையும் கோயில் கட்டி வச்சாங்க. அப்படி எங்க ஊருலயும் எல்ல தெய்வத்த இல்லாம ரெண்டு கோயில் இருக்கு. முழு முத கடவுள் அப்பன் விநாயனுக்கு ஒரு கோயிலும், அம்மன் முத்து மாரியாக குடிகொண்ட இன்னொரு கோவிலும் இருக்கு.

10401341_1491847504381810_6879459233558274761_n

ஊரோட மைய பகுதியில இருந்து விவசாயம் செழிக்கவும், தான் மக்க சந்தோசமா இருக்கவும் அருள்பாலிக்குறாங்க. இப்புடி ஊர செழிக்க வைக்குற ஆத்தாவுக்கு மக்க செலுத்துற நன்றி கடன் தான் இந்த திருவிழா..

 திருவிழா:

10406572_1491847234381837_9020170785568807560_n

பத்து வருசம் கழிச்சு எங்க ஊரு திருவிழா.திருவிழானதும் ஒரு நா ரெண்டு நா னு நெனைக்காதீங்க, முழுசா 21 நாள் நடக்குது. ஒவ்வொரு நாள் நடக்குற நிகழ்ச்சிலையும் ஒரு அர்த்தம் இருக்கும். பூ போடுறதுல ஆரம்பிச்சு மஞ்ச தண்ணி விளையாட்டு னு முடியும் ஒவ்வொரு நிகழ்ச்சிலையும் ஒரு சுவாரசியம் இருக்கும். அத அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட ஆழமும் அர்த்தமும் புரியும்.

 

பூ போடுறது:

Jasmine_Flower

திருவிழாவ மங்களகரமா துவக்கி வைக்குரதே இந்த நிகழ்ச்சி தான். ஒவ்வொரு வீட்டுலையும் ஒரு கொட்டான் (கொட்டன் – சின்ன கூடை) நிறய மல்லிக பூ எடுத்துக்கிட்டு புள்ளையார் கோயில் போய் அங்க வச்சி பூச பண்ண அப்பறம் அப்புடியே ஊர்வலமா அந்த பூவ எடுத்துக்கிட்டு அம்மன் கோவிலுக்கு போய் அந்த பூவ ஆத்தாலுக்கு போட்டு சந்தோசமா திருவிழாவ தொடங்குறாங்க. வீட்டுல ஒருத்தவங்க மாலை போட்டுகிறாங்க.

1907355_1491847337715160_6139635239782672363_n

 

காப்பு கட்டுறது:

பூ போட்ட எட்டாம் நாலு காப்பு கட்டுவாங்க. ஊரு கரை காரங்களுக்கு     ( நல்லது கெட்டத முடிவு பண்ற 5 பேரு) கையில அம்மன வேண்டிகிட்டு காசு கட்டுன மஞ்ச துணி கட்டுவாங்க. இத திருவிழா முடியுர வர அவுக்க கூடாது, காப்பு கட்டுன அப்பறம் சுத்த பத்தமா இருக்கனும். கறி, மீனு, கவுச்ச சாப்ட கூடாது. நெல்லு அவிக்க கூடாது, எண்ணெய் ஆட்ட கூடாது. முக்கியமா காப்பு கட்டுன அப்பறம் ஊரு மக்க எங்க வெளில போனலும் ராவுக்குள்ள வீட்டுக்கு வந்தறனும், வெளில தங்க கூடாது. இன்னும் நெறைய சம்பிரதாயம் இருக்கு.இது மாதுரி இன்னும் நெறைய இருக்கு. இத எல்லாம் ஒழுங்கா கடைபுடிக்கனும். இல்லனா தெய்வ குத்தமாகிரும். அதோட விளைவும் பயங்கறமா இருக்கும்(தெய்வ நம்பிக்கை இருக்கவங்க நம்புவாங்கனு நெனைக்குரேன்).

 அம்மன் வீதி உலா:

காப்பு கட்டுன எட்டாம் நாலு அம்மன் வீதி உலா நடக்கும். காலைலேர்ந்தே சொந்த பந்தமெல்லாம் வர ஆரம்பிச்சுருவாங்க. ஊரு காரவங்களாம் அன்னைக்கு விரதம். சாப்ட மாட்டாங்க. சூரியன் மறையுரதுக்கு முன்னாடி கருவாட்டு ( உப்பில் பத படுத்திய மீன்) கொழம்பு வச்சு விரதத்த முடிப்பாங்க. கோயில புல்லா சீரியல் லைட்டு கட்டி, ஆன்டனால பாட்டு போட்டு ஊரே திருவிழா கலை கட்ட ஆரம்பிச்சுரும்.

10462954_1491847357715158_6693708390598282691_n

அம்மன ஜோடிக்க ஆரம்பிசுருவாங்க, பெரிய தேர்ல அம்மன அலங்கரிச்சு வீதி உலாக்கு தயார் பண்ணுவாங்க. கரெக்ட்டா 10 மணிக்கு கரகாட்டம் ஆரம்ம்பிக்கும். ரெண்டு மணி நேரம் தொடச்சியா இந்த ஆட்டம் நடக்கும். பன்னெண்டு மணிக்கு வானவேடிக்கை தொடங்கும்.ஒரு மணி நேரம் பட்டாசு சத்தம் காத பொழக்கும்.

10462821_1491847271048500_856578074350122766_n

10404892_1491847284381832_3737304374193625667_n

10406572_1491847234381837_9020170785568807560_n

அப்படியே வீதி உலா ஆரம்பிக்கும், ஒவ்வொரு வீடு வீடா போகும். தேர் போறதுக்கு முன்னாடி கரகம் சொமந்து ஊர் பூசாரி போவாரு. எல்லா வீட்டுக்கு முன்னாடியும் கலர் கோலம் போட்டு, குத்து விளக்கு ஏத்தி வச்சு, பித்தள குடத்துல வேப்பலை சொருகி தண்ணி வச்சு இருபாங்க. தேர் வந்ததும், சக்கரதுல அந்த தண்ணி ஊத்தி, மாவிளக்கு போட்டு தேங்காய் உடைச்சு வழிபாடு நடக்கும். ஊர் மக்க யாரும் தூங்க மாட்டாங்க.

கிடா வெட்டு:

மறு நா காலைல பொங்க வச்சு, கோயிலுக்கு முன்னாடி ஆட்டு கிடாவ பலி கொடுப்பாங்க. அப்பறம் சமைக்க ஆரம்ம்பிச்சு, ஒரு மணிக்கெல்லாம் விருந்து தட புடலா நடக்கும். வீட்டுக்கு வந்தவங்க மனம் கோணாம அவங்களுக்கு சாப்பாடு போட்டு, அரிசி மாவிளக்கோட தேங்கா மூடி குடுத்து வழி அனுபுவாங்க. ஊர் இளைஞர் மன்றம் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தும் ( இது ஒரு ஆடம்பரம் தான், ஆனால் பத்து வருடத்துக்கு ஒரு முறை னு ஊர் பெரியவங்க, இதுல தலயிடுறது இல்ல).

goat-sacrifice

மஞ்சதண்ணி விளயாட்டு:

_2014-06-17_09-38-31

இதாங்க திருவிழாவோட கடைசி நிகழ்ச்சி. கரைகாரவங்க காப்பு அவுத்துட்டு தெருவுல ஒரு ஊர்வலமா, பெரியவங்க சின்ன பசங்க,இளவட்டம் எல்லாரும் வருவாங்க. எல்லா வீட்டு முன்னாடியும் பெரிய குவளைல மஞ்ச தண்ணி வச்சு இருபாங்க. அந்த தண்ணிய முற காரவங்க(மாமன், மச்சான் இது போன்றவர்கள்) மேல ஊத்தி விளயாடுவாங்க. இப்பலாம் முன்னாடி மாதுரி அவ்வளோ விமர்சையா நடக்குறது இல்ல. (நாகரீகம் என்ற போர்வைக்குள் இவை எல்லாம் அநாகரிகமாக மாறி விட்டது). ஒரு வழியா திருவிழா முடிஞ்சி ஊரு பழய நிலைக்கு வர குறஞ்சது ரெண்டு நாள் ஆகும்.

கால போக்குல இதல்லாம் மறஞ்சி போகும்ன்ற பயம் இருந்தாலும். இந்த திருவிழா வ மகிழ்ச்சிய கொண்டாடுனோம். அடுத்த திருவிழாவுக்கு இன்னும் பத்து வருசம் காத்து இருக்கனும். பத்து வருசம் முடிஞ்சு ஒரு திருவிழா நடந்தாலும் இந்த அளவுக்கு விமர்சையா நடக்கும் என்பதும் சந்தேகம் தான் ( ஏனெனில் கடந்த திருவிழாவை விட தொழில்நுட்ப்பம் வளர்ந்து இருந்தது ஆனால் ஏதோ ஒரு குறை இருந்தது). விவசாயம் மறையும் தருணத்தில் இது போன்ற திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் மறைந்து போகும். பொழுதுபோக்குக்காக கோயில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அடுத்த தலைமுறைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிடைக்காமல் போகும் என்ற வருத்தங்களுடன்

—  ஜெயா 

 

Showing 12 comments

 • Ganesh Anbu
  Reply

  மிகவும் அருமையான ஒரு கட்டுரை ஜெயா,வழக்கம் போல உன்னுடைய எளிய அழகிய கதை சொல்லும் விதமும் நடையும் அருமை இது போன்ற விழாக்கள் தான் நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறை சாற்றும் விடயங்கள் இதை நாம் போற்றி பாத்துக்க வேண்டும், தொடர்ந்து எழுதுங்கள் கவிதாயினி ஜெயா அவர்களே

 • Lokesh Arun
  Reply

  விவசாயம் மறையும் தருணத்தில் இது போன்ற திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் மறைந்து போகும். //

  வலியை கொடுக்கும் வார்த்தைகள் 🙁

 • Anbu Arasu
  Reply

  கிடா வெட்டு…semma 🙂

 • Suresh Kumar
  Reply

  இது போல் பல திருவிழாக்கள் இன்று மறைந்த நிலைமையில் இப்படி ஒரு பதிவு கண்டிப்பாக தேவை ஜெயா….நாளை தொழில் நுட்ப வளர்ச்சியால், விவசாயம் குறைந்து இப்படி ஒரு திருவிழா இல்லாமல் கூட போகலாம்….அன்று மின்கருவிகளும், தொழில் நுட்பங்களும் மகிழ்ச்சியை தர இயலாது என்று மனிதன் உணர்ந்து சந்தோசத்திற்கு ஏங்கும் போது இந்த திருவிழா இருக்காது ஆனால் ஏங்க வைக்க இந்த பதிவு தான் இருக்கும்…

  எளிமையான தமிழ்… படிக்கும் போதே நான் புகைப்படம் எடுக்க தவிர விட்ட விடயம் என்று தோன்றுகிறது…

 • Jaya Lakshmi
  Reply

  எழுதும் போதே உணர முடிந்தது. ஆனால் இது தான் நிதர்சனமான உண்மை. 🙁

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி கணேஷ் 🙂

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி சுரேஸ்.. உங்களுடைய படங்கள் இருந்திருந்தால் என் வேலை பாதி குறைந்திருக்கும். பாதி கதையை அவையே சொல்லி விடும் 🙂

 • Jaya Lakshmi
  Reply

  எங்க வீட்டுல மட்டும் ரெண்டு அன்பு அரசு 🙂

 • Anbu Arasu
  Reply

  Jaya Lakshmi மாட்டை விரட்டினால் ஜல்லி கட்டு, ஆட்டை விரட்டினால் தலப்பாக்கட்டு 🙂

 • Jaya Lakshmi
  Reply

  Anbu Arasu ரெண்டு ப்ளஸ் சிக்கன் அன்ட் எக் … சாயங்காலம் எல்லாம் காலி.. சொந்தகாரவங்க நெறைய பேரு வந்து இருந்தாங்க.. 🙂

 • Senthil Ashokkumar
  Reply

  இது வரை இது போன்றதொரு கிராமத்து திருவிழாவிற்கு செல்லும் வாய்ப்பே கிடைத்ததில்லை.. 🙁 உன் எழுத்தில் அந்த குறை நீங்கியது போன்றதொரு உணர்வு வருகிறது… கூடவே ஏக்கமும் வருகிறது..

  வழமைப்போல் தெளிந்த நடை..
  வழமைக்கு மாறாக வட்டார வழக்கில் சொற்கள்..

  ஏனோ தெரியவில்லை… இக்கட்டுரையைப் படிக்கும் போது 'கரகாட்டக்காரன்' திரைப்படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. அதுவே உன் எழுத்திற்கு வெற்றி… making the reader relate ur words with their experience..

  மஞ்சள் தண்ணீர் ஊற்றும் வைபவம் பற்றி படிக்கும் போது, மண்வாசனையும் தர்மதுரையும் நினைவுக்கு வருது… ஆமா நீ யார் மேல மஞ்சள் தண்ணீர் ஊத்துனன்னு சொல்லவே இல்லையே…. 😉

 • Arti Thirumavalavan
  Reply

  இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்க ஊருல இப்படி ஒரு திருவிழா நடந்தது .. காலேஜ் படிக்கிறபோ கிடைத்த ரெண்டு நாள் லீவுல அம்மன் வீதி உலா மற்றும் கெடா வெட்டு மட்டும் தான் பார்த்தேன்… இத்தனை சம்பிரதாயங்கள் இருக்குனு இந்த பதிவை படிச்சி தான் தெரிஞ்சுகிட்டேன்… எழுத்து நடை பிரமாதம்… வாழ்த்துக்கள் சகோ …

Contact Us

For Immediate quires Please contact here...