January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / ராணிஸ் டவர் – தஞ்சையின் மற்றுமொரு நினைவுச் சின்னம்

ராணிஸ் டவர் – தஞ்சையின் மற்றுமொரு நினைவுச் சின்னம்

13

தஞ்சை ஒரு பழமையான நகரம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் ஒரு ஒப்பற்ற நகரம். இந்த தஞ்சை நகரில் ராஜராஜன் அமைத்த பெருயுடையார் கோவில்,நாயக்கர்கள் கட்டிய அரண்மனை என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் கட்ட பெற்ற பல்வேறு புராதான சின்னங்கள் உள்ளது.அந்த வகையில் தஞ்சைக்கு  பெருமை சேர்க்கும் மற்றுமொரு  சின்னம் தான் ராணிஸ் டவர் என்று அழைக்கபெற்ற   மணிகூண்டு.

 

Ranees  Tower  Photo Courtesy : Bakaran

Ranees Tower
Photo Courtesy : Bakaran

தஞ்சை ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தபொழுது, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதி இடத்தில  அமைகபெற்றதே இந்த மணிகூண்டு. தஞ்சையில் இந்த மணிகூண்டு 1883 ஆம் ஆண்டு அமைகபெற்றது,  விக்டோரியா மாகராணி முடி சூடியதை  நினைவு கூறும்விதமாக அமைகபெற்றதால் இதற்கு ராணீஸ் டவர் என்று பெயர் சூட்டினர்என்றும், இதை கட்டியது சரபோஜி மன்னர் என்றும் முதல் உலகபோரின் நினைவு சின்னம் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளது ஆனால் இவை அனைத்தும் தவறான செய்திகள்.மகாராணி முடிசூடியது 1877இல் இது கட்டப்பட்டது 1883 இல் ஆகவே இது மகாராணி முடிசூடியத்தின் நினைவாக கட்டப்பட்டது என்ற காரணம் சரியாக இருக்க வைப்பு இல்லை, இரண்டாவதாக கூறப்படும் காரணம் சரபோஜி மன்னர் இதை கட்டினார் என்பது ஆனால் Tanjore District Gazetteer   புத்தகத்தில் இதை கட்டியது ஆங்கிலேயர்கள் என்பது தெளிவாக உள்ளது அகவே இந்த காரணமும் இருக்க வாய்ப்பு இல்லை. மூன்றாவதாக சொல்லப்படும்  காரணம் இது முதலாம் உலகபோரின் நினைவாக கட்டப்பட்டது என்பதை அப்படி ஒரு வதந்தி வரக் காரணம் இதில் உள்ள முதலாம் உலகப்போரில் பங்குகொண்டவர்களை பற்றிய கல் ஆனால் இந்த முதலாம் உலகப்போர் கல் வைக்கப்பட்டது இந்த கல் 1919ஆம் வருடத்திற்கு பின்னர் வைக்கப்பட்டது, ஆனால் இந்த கட்டிடத்திலே தெளிவாக இது கட்டப்பட்டது 1883 என்று குறிப்பிட்டு உள்ளார்கள், மேலும் Tanjore District Gazetteer உள்ளது அகாவே முதல் உலகப்போரில் பங்குகொண்டவர்கள் நினைவு சின்னம் என்பதும்  தவறான காரணம்.

Tanjore District Gazetter புத்தகத்தில் உள்ள செய்தி என்னவென்றால் மணிக்கூண்டு 1883ல் கட்டப்பட்டது.  அதை கட்டியது தஞ்சாவூர் நகராட்சி என்றும் குறிபிட்டு உள்ளனர்  . நகராட்சி கணக்குப்படி செலவு ரூ19000. அதில் ரூ 12000 த்தை மராத்திய ராணி கொடுத்தார் என்று ஆங்கிலேயன் பெருமையாகக் கூறுகிறான். எதன் ஞாபகார்த்தமாகவும் அதைக் கட்டியதாக அவன் கூறவில்லை. ராணி தோட்டம், ராணி பூங்கா, ராணி டவர் இவற்றில் காணப்படும் ராணி. விக்டோரியா மகாராணியன்று அது மராத்திய ராணியைக் குறிக்கும். ராஜராஜ சோழன் சிலையிலிருந்து மணிக்கூண்டுவரை , மணிக்கூண்டிலிருந்து புதாறுவரை மராத்திய ராணியின் தோட்டம். கலெக்டர் தாமஸுக்கு மருத்துவசாலையும் மருத்துவக் கல்லூரியும் கட்டவும், இஸ்லாமிய சகோதர்ர்களுக்கு தர்கா கட்டவும் ( சரபோஜி ) நகராட்சிக்கு மணிக்கூண்டு கட்டவும் ராணி இனாமாக நிலத்தைக் கொடுத்தார்.

விக்டோரியா மகாராணி முடி சூடி 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நினைவு கூறும் விதமாக இந்த ராணிஸ் டவரின் அருகிலே வைரவிழா நினைவு அலங்கார வழைவு 1937 ஆம் ஆண்டு அமைகபெற்றது . ஆனால் 1995 ஆம் ஆண்டு தஞ்சையில் உலகதமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது சாலை விரிவாக்கதிற்காக இந்த சிறப்புமிக்க அலங்கார வளைவு அகற்றப்பட்டது.நல்ல வேலையாக இந்த மணிகூண்டு தப்பியது.

 

விக்டோரியா மகாராணி முடி சூடியதின் வைரவிழ நினைவாக வைகபெற்ற அலங்கார வாயில்  நன்றி கவுதமன் பசு

விக்டோரியா மகாராணி முடி சூடியதின் வைரவிழ நினைவாக வைக்கப்பெற்ற அலங்கார வாயில் (1965) . இந்த வளைவு 1995 ஆம் ஆண்டு உலகதமிழ் மாநாட்டின் பொழுது இடிக்கப்பட்டது. படம் உதவி கவுதமன் பசு

இந்த மணிக்கூண்டின் படம் 1/1/1940(தோராயமான தேதி) இல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் புகைப்படக்கலைஞர் எடுத்தது

மணிக்கூண்டின் இந்த படம் 1/1/1940(தோராயமான தேதி) இல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் புகைப்படக்கலைஞர் எடுத்தது

இந்த மணிகூண்டு 130 அடி உயரம் கொண்டது.இந்த கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கல்லின்  மேல் சிமெண்ட் பூச்சு இல்லாமல் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கபெற்ற ஒரு கட்டிடம்.சுமார் 20 அடி வரை இந்த கட்டிடம் சதுர வடிவில் வடிவமைக்க பட்டு உள்ளது இதில் 4 புறமும் வாயில்கள்   உண்டு. இதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு ஆறுகோண வடிவிலும்,அதன் மேல் 40 அடி சதுர வட்விலும் இருக்கும், அதன் மேல் உள்ள கோபுரம் தஞ்சை பெரியகோவில் விமானத்தில் உள்ள கோபுரம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த கட்டிடத்தில் கிட்டத்தட்ட 100 படிகளுக்கு மேல் உள்ளது.

 

Photo courtesy : Baskaran

Photo courtesy : Baskaran

கட்டிடத்தில் அழகிய மரவேளைபாடுங்களும்,பளிங்கு கற்களுக்கு மத்தியில் ஒரு கடிகாரமும் உள்ளது.இந்த கடிகாரம் லண்டனில் இருந்து வர வழைகபட்டது.இந்த கடிகாரத்தின் மணியோசை கிட்டதட்ட அன்றைய காலத்தில் மூன்று மையில் தூரத்திற்கு கேட்டதாக கூறுகின்றனர். இதில் இருந்து வரும் மணியோசையை சில நேரம் கேட்டு மகிழும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்து உள்ளது.ஆனால் இன்றோ முறையான பராமரிப்பு இல்லாமல் இந்த கடிகாரம் இயங்காமல் இருகின்றது.

கடிகாரம்  நன்றி : மாலைமலர்

கடிகாரம்
நன்றி : மாலைமலர்

 

மேலும் இந்த கட்டிடத்தில் 1914-1919 வரை நடந்த முதல் உலகப்போரில் தஞ்சையில் இருந்து 61 நபர்கள் பங்குகொண்டார்கள் என்றும் இதில் 4 பேர் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை தாங்கி ஒரு பளிங்குக் கல் உள்ளது. இந்த செய்தியை பற்றி படித்த சிலர் இந்த கட்டிடம் 1919 தில் அமைக்கபெற்றது என்று கூறுவார் ஆனால் அது முழுக்க முழுக்க தவறான செய்தி, இந்த ராணிஸ் டவர் அமைகபெற்றுது 1883, முதலாம் உலகப்போரில் பங்குபெற்றவர்களை பெற்றி நினைவு கூறும் பொருட்டு இந்த கல் பின்னாளில் அமைக்கபெற்றதாகும்.

முதல் உலகப்போரில் தஞ்சையில் இருந்து கலந்துகொண்டோர் பற்றி விளக்கும் கல்  Photo Courtesy : Muthukumar

முதல் உலகப்போரில் தஞ்சையில் இருந்து கலந்துகொண்டோர் பற்றி விளக்கும் கல்
Photo Courtesy : Muthukumar

 

இந்த மனிகூண்டை சுற்றிலும் ஒரு பூங்காவும் அமைகபெற்றது இந்த பூங்காவிற்கு ராணி பூங்கா என்று பெயர். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஒரு வானொலிபெட்டி இருந்தது, பலர் வீட்டில் வானொலி வசதி இல்லாத காலகட்டம் ஆதலால் மாலை நேரங்களில் வானொலி கேட்க்க இந்த ராணி பூங்காவில் மக்கள் கூடுவார்கள். இன்றும் இந்த பூங்காவை அதிகமான மக்கள் பயன்படுத்தி கொண்டு தான் இருகின்றனர், தஞ்சை ராஜ மிராசுதார் மருத்துவமனைக்கு வருவோர்,தஞ்சைக்கு சுற்றுலா வருவோர் என்று இன்றும் இந்த பூங்கா மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி தான் ஆனால் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் களையிழந்து கிடக்கிறது

தஞ்சை மாநகராட்சி இந்த சிறப்பு மிக்க மனிகூண்டை சீரமைத்து  மீண்டும் இயங்காமல் கிடக்கும் அந்த கடிகாரத்தை  இயக்க நிதி ஒதுக்கியதாக அறிகிறேன் விரைவில் இது புத்துயிர் பெரும் என்றும்  நம்புவோம்.

குறிப்புக்கள்
Tanjore District Gazetter by FR Hemingway ,தினத்தந்தி,தி ஹிந்து,நெஞ்சை அல்லும் தஞ்சை

தவறை சுட்டிக்காட்டி நல்ல தகவல்கள் தந்த கோவிந்தராஜன் ஐயாவிற்கு நன்றி

 

நன்றி

கணேஷ் அன்பு

 

Showing 13 comments

  • Baskaran Sellappan
    Reply

    நல்லதொரு தகவல் …

  • Reply

    நன்று

  • Anbu Arasu
    Reply

    தகவலுக்கு நன்றி கணேஷ் !

  • Rajee Arch
    Reply

    good one asusual…. keep going on….:)

  • Lokesh Arun
    Reply

    எனக்கொரு ஆசை. இந்த மணிகூண்ட சுத்தி இருக்க எல்லா கடைகளையும் எடுத்துட்டு.. புல் தரையோட கூடிய ஒரு பூங்காவா மாற்றினால் ஜொலிக்கும் அந்த இடம்

  • Malarvizhi Ramesh
    Reply

    நல்ல தகவல்…:)

  • Ganesh Anbu
    Reply

    nandri

  • Ramachandran Pudhumanappully
    Reply

    இந்த இடங்களை நானும் பார்த்துள்ளேன்… இடிக்கப்பட்ட அலங்கார வாயிலையும் பார்த்திருக்கிறேன் … நல்ல தகவல்

  • Jaya Lakshmi
    Reply

    as usual ur rocking… wat ever rajee said is correct.. thanjavurin encyclopedia 🙂 keep going on… all these information are new to me 🙂

  • Ganesh Anbu
    Reply

    ha ha ha nandri jaya

  • Priya Murugesan
    Reply

    thanks a lot for posting such a nice information

  • Prabhu Sivasamy
    Reply

    thanks for lot information

  • Venkata Subramanian
    Reply

    Thanks for your nice and valueable clarification arised by me and others. i also learnt from your posting

Contact Us

For Immediate quires Please contact here...