July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பாரம்பரிய நடை பயணம் “நம் பாரம்பரியம் நம் பெருமை”

பாரம்பரிய நடை பயணம் “நம் பாரம்பரியம் நம் பெருமை”

5

பாரம்பரிய நடை பயணம்  “நம் பாரம்பரியம் நம் பெருமை”  :

இன்று காலை 8 மணி அளவில் எங்கள் நடை பயணம் தொடங்கியது. எங்கள்  துணை வேந்தர் திரு. ராம சந்திரன் அவர்கள் இந்த நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடை பயணம் ஒரு விதமான சிறப்பை பெற்று இருந்ததை உணர முடிந்தது. ஏன் இந்த நடைபயணம், இந்த நடைப்பயணத்தால்  எதை நாம் அடைய போகிறோம் என்பதனை தெரிந்து கொள்ள ஆவலுடன் எங்களது பயணத்தை தொடங்கினோம்..

எங்களது கல்லூரி மாணவர்களுடன்  நடைபயணத்தை மேற் கொண்டோம்.  சிவகங்கை பூங்காவில் திரு.முத்துகுமரன், திரு. ராஜேந்தரன் ஆகியோருடைய வழிகாட்டுதலின் படி புறப்பட்டது எங்களது பயணம். விழிப்புணர்வு நடை பயணத்தில் அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகுத்த சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும்  அமைந்தது.   நீர் நிலைகளின் தோற்றம் , எவ்வாறு வடிவைமகப்படது, அதன் பயன்கள், தஞ்சை ஆண்ட மன்னர்கள் கையாண்ட விதம் அனைத்தும் தெளிவாக எடுத்து சொல்லபட்டது. அத்துடன் இப்போதைய மோசமான நிலையும் எடுத்து கூறப்பட்டது. சிவகங்கை பூங்காவில் தொடங்கிய எங்களின் பயணம் மேற்கு வடக்கு கிழக்கு மாட வீதிகளின் வழியாக தொடர்ந்தது. இந்த 5KM தூர பயணம் பொது மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

முதல் முறையாக திரு. முத்துகுமரன் ஐயா  அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவாகவும்,  எளிதில் புரியும் வண்ணமாக இருந்தது. திரு.ராஜேந்திரன் ஐயா அவர்களின் பேச்சை பல முறை கேட்டிருக்கிறோம் எங்கள் கல்லூரியில். அவர்கள் கூறிய ஒரு ஒரு விஷயமும் அருமையாக இருந்தது.   சுட்டெரிக்கும் வெயில் கூட சுகமாக தான் இருந்தது நம் தஞ்சையின் பெருமைகளை கேட்டறிந்த பொழுது. நாம் வந்த நோக்கம் மக்களிடம் மட்டும் அல்ல எங்களிடமும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.   சுவாரசியமாகவும் இருந்தது எங்களின் நடை பயணத்தின் ஒரு பகுதி, விழிப்புணர்வு பிரசார கையேடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் தேர்தல்காக பிரசாரம் செய்கிறோம் என்று நினைத்து கொண்டு அவர்களின் கஷடங்களை தெரிவித்தனர். குடி நீர் சரியாக வருவதில்லை போன்ற குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு தெரிய வில்லை நாம் தான் சரியாக நமது பாரம்பரியமிக்க நீர் நிலைகளை  பராமரிக்காமல் விட்டு விட்டோம்.   அரசாங்கத்தை குறை கூறாமல் நமது நீர் நிலைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். நீர் நிலைகள் நாம் பார்த்து கொண்டால் அது நம் எதிர் கால சந்ததிகளை வளமான பாதைக்கு அழைத்து செல்லும். நாட்டில் பசி பஞ்சம் அண்டாது.   எங்களால் முடிந்த வரை மக்களுக்கு புரியும் வண்ணம் நமது நோக்கமான நீர் நிலை காப்பதன் அவசியத்தை உணர்த்தினோம்.

ஒரு  கட்டிடஎழிற் கலை துறை மாணவியாக மிகுந்த ஆவலுடன் நமது நீர் நீர்நிலை கட்டுமானங்கள், அதன் சிறப்பு அறிந்து கொள்ள முடிந்தது ,  மேலும் பொது மக்களின் இடையே எந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வாய்ப்பாக  அமைந்தது இந்த நடை பயணம்.

இன்னுமொரு சுவாரசியமான தகவல் தெரிந்து கொண்டோம். நம் தஞ்சை தான் நீர் நிலைகளால்(அகழி) சூழ பட்ட ஒரே நகரம் என்று அறிந்து கொண்ட பொழுது அந்த காலத்தில் நீருக்கு எந்த அளவு முக்கிய துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டது என்று அறிந்து  வியப்படைந்தோம்.   நடைபயணம் மேற்கொண்ட வழி முழுவதும் நம் முன்னோர்கள் எந்த மாதரியான ஒரு வாழ்கையை வாழ்ந்துள்ளனர் என்று உரையாடி கொண்டே சென்றோம்.   நடைபயணத்தில் இறுதி பகுதிக்கு வந்தோம். சாமந்தான் குளம். திரு.கோவிந்தராஜன் சுப்ரமணியன் ஐயா அவர்கள் நீர் நிலைகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார். நீர் நிலைகள் தான் ஒரு உயிர் ஆதாரம் மற்றும் மக்களுக்கும் , மக்களின் வாழ்க்கை முறையில் நீர் எந்த அளவு முக்கிய பங்காற்றியது என்று எடுத்து கூறினார்.

இத்தகைய பெருமை மிக்க நமது நீர் நிலைகள் அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்தோம்.  அதற்கான வழிகளை அறிந்து நீர் நிலைகளை மீட்டெடுபோம். இது நம் கடமை.  ஒன்றிணைவோம்.!! நமது பாரம்பரியத்தை காப்போம்..Untitled-1

 

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273