January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பட்டிக்காட்டு அப்பன்

பட்டிக்காட்டு அப்பன்

18

இந்த பதிவு முக்கியமாக, இதில் கூறப்பட்டுள்ளது போல நிலங்களை விற்று படிக்க வைத்த அப்பாக்களுகும், அவர்களுடைய மகன்களுகும்

ஆழ்துள கிணத்துல,

        கடுகு தண்ணி இல்ல

கூடமாட உதவி

       செய்ய மனுச இல்ல

தலைமுறையா உழச்சி,

       என்ன பயன கண்டேன்

பாவிமகன் உனக்கு,

        பாதி கஞ்சி ஊத்தல

வில இருக்கும்,

      வயல பயிற் இருக்காது

பயிற் சிரிக்க,

      பாதி வில குறஞ்சிரும்

பங்குனி வெயிலு,

       பாதத்த பதம் பாக்கும்

ஆடி காத்து,

       ஆளை அடியோடு சாய்க்கும்

அரை காசு பாக்கையில,

     அழுது வந்து நிப்பா உன் அக்கா…

உசிரு ஓரமா தவிக்கும்,

     உடம்பு நெருப்பா தகிக்கும்

அரையில அரை போய்ரும்,

          ஒன் அக்கா புகுந்தவீட்டுக்கு ,

ஒன் காலுல சூ வாங்கி

        மாட்ட நான் பரிதவிக்க

ஆத்தாகாரி நோயில படுப்பா

இருக்க பாதியில,

     பாதி வைத்தியகாரனோட

     மறுபாதி வாணியகாரனோட

என்ன மிஞ்சும்,

      என் செல்ல மகனுக்கு

காடு கரைய வித்தேனும்

       ஒன்ன கரை சேக்கேன்

இஞ்சினியர் படிச்சு, ஏசி அறையில

       நீ இருக்க, இந்த பாவி மகன்

உசிரு பரலோகம் போகும்,மகன

      பட்டணத்துல பாத்த சந்தோஸத்துல

நன்றி

ஜெய லெட்சுமி

Showing 18 comments

 • Ganesh Anbu
  Reply

  ஜெயா பின்னிட்டபோ என்ன சொல்றதுனே தெரியல,ஒரு ஏழை விவசாயி அப்பனின் கஷ்டத்தை ஒரு விவசாயி சொல்வது போலவும் அதே நேரிதில் கவிதை நடை மாறாமால் மிக அருமையாக எழுதி இருக்க,ஒரு தேர்ந்த எழுத்தாளர் போலவே உள்ளது உன்னுடைய வார்த்தைகளும், கவிதையின் நடையும். அருமை அருமை அருமை தொடர்ந்து எழுத்து வாழ்த்துக்கள்

 • Anbu Arasu
  Reply

  எதார்த்தமான பதிவு, வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதவும், நன்றி !

 • Senthil Ashokkumar
  Reply

  பேச்சு நடையில் நல்லா இருக்கு… படிக்கும் போது நாட்டுப்பாடல் feel கிடைக்குது.. இன்னும் இன்னும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்…

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி.. என்னுடைய அனைத்து பதிவிலும் உங்களுடைய ஆதரவை கருத்து வடிவில் அளிப்பதற்க்கு மிகவும் நன்றி… இது போன்ற கருத்துக்கள் தான் மேலும் மேலும் எழுத தூண்டுகின்றன்.. நன்றி

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி.. தங்களின் மேலான கருத்துகள் தான் எழுதும் ஆர்வத்தை ஊட்டுகின்றன.. தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எதிர்பார்கின்றேன்

 • Jaya Lakshmi
  Reply

  இந்த பதிவு எழுத முக்கியமான காரணமே நம்ம நாட்-இ தான். அதில் படித்த கள்ளி காட்டு இதிகாசம் தான் இன்று என்னுடையா வார்த்தைகளில். பதிவில் பாதி உரிமை உங்களுக்கும் நாட்-இ க்கும் உண்டு

 • Senthil Ashokkumar
  Reply

  'NOTe' ந்நு சரியா சொல்லும்மா…. படிக்கும் போது யாராவது naughty ன்னு படிச்சிட போறாங்க… 😛

 • Jaya Lakshmi
  Reply

  Senthil Ashokkumar மாத்திடேன் 😛

 • Baskaran Sellappan
  Reply

  என்ன சொல்ல, வார்த்தை தேடுகிறேன் அருமைக்கு முன் எத்தனை மிக போடுவது, வார்த்தை இல்லை."சந்தோசத்தை தேடி துயரத்தில் பயணம். .

 • Suresh Kumar
  Reply

  ஜெயா சூப்பர்… அடுத்த புத்தக கண்காட்சில உங்க கவிதை புத்தகத்த போடா வேண்டிய தான…

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி சுரேஸ்
  .

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி ஐயா… இன்று கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு அப்பாவி்ன் பயணமும் இப்படி தான் உள்ளது.

 • Ganesh Ram
  Reply

  "என்ன அருமையான் வரிகள்…கொள்றீங்க போங்க"…என்னகு இதுக்கு என்ன சொல்றதுனு தெரியல..

  நீங்க என் பட்டிமன்றம் போய் பேச கூடாது…நீங்க நினைச்சா ஒன்னு கவிதை புத்கம் போடலாம், இல்ல பட்டிமன்றம் போய் பெரிய பேச்சாளர் ஆகலாம், இல்ல கொஞ்சம் கூடுதல் முயற்சி சென்சா திரைப்படங்களில் பாடல் எழுதலாம்….என்..இந்த மாறி கோர்வை பேசி பல பேர் M.P..M.L.A உருவாகி இருக்காராகள்….இதில்..எந்த துறை போக உங்களுக்கு ஆசை..

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி கணேஷ் …… இதில் எந்த துறையிலும் தற்போது விருப்பம் இல்லை.. காலம் செல்லட்டும் யோசித்து முடிவு எடுப்போம். மீண்டும் உங்களுடைய கருத்துக்கு நன்றி.

 • Musique Lounje
  Reply

  அருமையான கவிதை. ஏழை விவசாயி அப்பன்களின் உள்ளக் குமுறல்களை படம் பிடித்து கட்டிய விதம் நேர்த்தி. வாழ்த்துக்கள்

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி அக்கா

 • Muthu Kumar
  Reply

  அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

 • Jaya Lakshmi
  Reply

  நன்றி சார்..

Contact Us

For Immediate quires Please contact here...