October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சை மராட்டிய மன்னர்கள் உல்லாசமாக இருந்த “உப்பரிகை”

தஞ்சை மராட்டிய மன்னர்கள் உல்லாசமாக இருந்த “உப்பரிகை”

15

தஞ்சாவூர் பல நூற்றாண்டு காலமாக பல்வேறு ஆட்சியாளர்களையும்,பல இன அரசுகளையும் பார்த்து உள்ளது.தஞ்சைய முத்தரையன் தொடங்கி,சோழ ஆட்சியை ஸ்தாபித்த விஜயாலயன்,உலகமே வியக்கும் ஒப்பற்ற ஆட்சி புரிந்த ராஜ ராஜ சோழன்.ஏரியுட்டி தஞ்சை நகரை அழித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்,மீண்டும் நகரை உருவாக்கிய பாண்டியன் ஸ்ரீவல்லபன், தஞ்சையை மீண்டும் மிளிர செய்த விஜயராகவா நாயக்கர் என்று பலரை கண்ட நகரம்.இதில் ஆங்கிலேயர்கள் தஞ்சையை பிடிபதற்கு முன் வந்தவர்கள் தான் இந்த மராட்டியர்கள்.விஜயராகவ நாயகரை எதிர்பாரத நேரத்தில் தாக்கி கொன்று ஆட்சியை கைப்பற்றினார்கள் மராட்டியர்கள்.மராட்டிய ஆட்சி காலத்தில் தஞ்சையில் நிறைய மகால்களும்,கேளிக்கை கூடங்களும் கட்டப்பட்டது.இவர்கள் உல்லாசமாக இருக்க ஊட்டி நீலகிரி போன்று தஞ்சையில் ஓர் நீலகிரியை உருவாக்கினர்.

தற்போதைய தஞ்சை மருதுவக்கலூரி அருகே உள்ளது இந்த நீலகிரி.நீலகிரி என்று அங்கு ஏன் பெயர் வந்தது என்ற பெயர்காரணம் புரியாமல் நம்மில் பலர் குழம்பியிருப்போம்.தஞ்சையில் உள்ள ஒரு இடத்திற்கு நீலகிரி என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ???.தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன்ர்கள் நீலகிரியின் இருந்து மரக்கன்றுகள் கொண்டு வந்து இங்கு நட்டனர்.சிறிது காலத்தில் அந்த பகுதி நீலகிரி மரங்கள் சூழ்த்து ஒரு சோலைவனமாக மாறியது.அந்த பகுதியில் ஒரு அடர்ந்த வனம் உருவாகியது,கோடைக்காலத்தில் நீலகிரி போல குளுகுளுவென இன்பம் தந்ததால் இந்த பகுதி நீலகிரி என்றே அழைக்கப்பட்டது.

மராட்டிய மன்னர்கள்,அரண்மனை அலுவலர்கள்,இளவரசர்கள்,அரசிகள் முதலியோர் வேட்டையாடவும்,பொழுதை போக்கவும் உல்லாசமாக காற்று வாங்கவும்,இந்த நீலகிரியை பயன்படுத்தினர்.இப்படிப்பட்ட நீலகிரியின் ஒரு பகுதிக்கு மானோஜிப்பட்டி என்று பெயர்.மராட்டிய படைத்தளபதி மானோஜி ராவ் அவர்களின் பெயரால் இந்த இடம்  மானோஜிப்பட்டி அழைக்கபெற்றது  .தஞ்சையில் மானோஜியப்பா வீதி என்றும் ஒரு இடத்திற்கு பெயர் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.இந்த மானோஜிபட்டியில் கலையழகுடன் ஒரு உப்பரிகை மண்டபம் உள்ளது.இதனை மக்கள் உப்பலிய மண்டபம் என்று விளிப்பர்.இந்த உப்பரிகை  மண்டபமும் மனோஜி ராவ் அவர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

10153478_762348320444118_1955083992_n

Pic courtesy : Baskaran sellapan

பாரமரிப்பின்றி புதர் மண்டி காட்சி தரும் மானோஜிபட்டியில் உள்ள உப்பரிகை மண்டபம்

பாரமரிப்பின்றி புதர் மண்டி காட்சி தரும் மானோஜிபட்டியில் உள்ள உப்பரிகை மண்டபம்

உப்பரிகை என்றால் மேல்மாடி,மேல்மாடம் என்று பொருள்.18 கருங்கல் படிகளுடன் ஒரு கல்தேர் போல கம்பீரமாக அமைக்கப்பட்ட ஒரு மண்டபமாகும்.இந்த மண்டபத்தில் மொத்தம் 11 ஜன்னல்கள் உள்ளன.பிரமாண்டமான வட்ட வடிவிலான தூண்களுடன் ஒரு மண்டபமும் உள்ளது.அதை சுற்றி வர வழியும் உள்ளது.ராமரின் பட்டாபிஷேக கட்சிகள் அழகிய கதைசிற்பமாக இங்கு இடம் பெற்று உள்ளது.

10151665_762346247110992_2057470811_n

Pic courtesy : Baskaran sellapan

மண்டபத்தின் மேல்பகுதி தாமரைபூ தன இதழ்களை விரித்த நிலையில் இருபது காணப்படுகிறது.மண்டபத்தின் உள் பகுதியில் ஒரு ஒரு பகுதியும் நுண்ணிய கலை வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டது.

10151956_762384773773806_1616019026_n

இந்த மண்டபத்தை சுற்றி லட்சக்கணக்கான மரங்களுடன் மிக பெரிய வனம் இருந்ததாகவும்,அதனாலே மராட்டிய அரச குடும்பத்தினர் உல்லாசமாக இருக்க இங்கு வருகை புரிந்தமைக்கு காரணம்.லட்சம் மரகளுடன் இருந்ததாலே இங்கே ஒரு பகுதிக்கு லட்சத்தோப்பு என்று பெயர்வந்தது.

10153359_762346240444326_1698256300_n

Pic courtesy : Baskaran sellapan

இப்படி ஆழகிய கலைவேலைபாட்டுடன் உள்ள இந்த உப்பரிகை மண்டபோமோ இன்று எந்த பரமாரிப்பும் இல்லமால்,அழிவை நோக்கி சென்று கொண்டு இருகின்றது.இந்திய தொல்லியல் துறை,மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி ,தமிழக அரசு அனைவரும் உடனே தலையிட்டு இந்த உப்பரிகைக்கு மீண்டு உயிர் கொடுக்கவேண்டும் செய்வார்களா????

மேற்கூறிய தகவல்கள்,தினத்தந்தி, இ. ராசு அவர்களின் நெஞ்சை அள்ளும் தஞ்சை ,மற்றும் கோவிந்தராஜன் ஐயாவின் பிளாக்கில் இருந்து செய்திகள் எடுக்கபட்டது

நன்றி

கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273