கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழில் வெளிவந்த ஒப்பற்ற வரலாற்று புதினம் என்று சொன்னால் அது மிகையல்ல. கிட்ட தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாவல் இன்றும் இளமையுடன் இளையதலை முறையை கவர்கிறது என்றால் அதற்கு காரணம் அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழன் மேல் மக்கள் வைத்துள்ள அபரிமிதமான அன்பும், கல்கியின் அருமையான கதை சொல்லும் திறனும் தான் அதற்கு காரணம்.
கல்கி பொன்னியின் செல்வனில் கூறியது என்ன ??
இந்த அற்ப்புதமான வரலாற்று புதினத்தை படைத்த கல்கி இந்த கோவில் பற்றி கூறும் செய்தி என்னவென்றால், அருண்மொழி வர்மனின் தந்தை சுந்தர சோழன் ஒரு தீவில் ஒரு வாய் பேச இயலாத,காது கேட்காத மந்தாகினி என்ற ஒரு பெண்ணை சந்தித்ததாகவும், அந்த பெண்ணை காதலித்து காந்தர்வ மனம் புரிந்தார் என்றும் பிறகு நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அந்த பெண்ணை பிரிந்து ஆட்சி பொறுப்பு ஏற்றார் என்றும், பிரிந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் அந்த பெண் தினமும் கனவில் வந்து பல நாட்கள் தூங்க இரவுகளாக துன்புற்றார் என்றும் கதை நகரும். மேலும் அந்த பெண்ணை ஊமை ராணி என்றும், அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழனை பல முறை ஆபத்தில் இருந்தும் காத்தவள் என்றும் அதற்காக ராஜராஜ சோழன் அந்த ஊமைராணி என்ற மந்தகினிக்கு தஞ்சையில் ஒரு கோவில் எழுப்பியதாகவும் அந்த கோவிலின் பெயர் சிங்கள நாச்சியார் கோவில் என்றும் கல்கி பொன்னியின் செல்வனின் குறிப்பிட்டு இருந்ததை படித்து இந்த கோவிலை நோக்கி பயணித்தேன்.
சில செவிவழி செய்திகள்
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது இந்த சிங்கள நாச்சியார் கோவில். அந்த கோவிலை பற்றிய மேலும் தகவல் அறிய எனது தேடலை தெடங்கினேன் அந்த தேடலின் விழைவாக முதலில் நான் அறிந்தது மிகவும் சுவாரஸ்யமான செவிவழி செய்தி அது என்னவென்றால். தஞ்சையில் ஆட்சி புரிந்த ஒரு சோழ மன்னன் ஒருவன் ஈழத்து அரசன் ஒருவனை பலமுறை அழைத்தும் அவன் வராமல் அவமரியாதை செய்ததாகவும். இறுதியில் அவன் தன குடும்பத்தோடும் சில காவல் வீரர்களோடும் வந்ததாகவும், பேரரசர் மிது உள்ள பயத்தில் மற்றவர்களை தஞ்சைக்கு வெளியே இந்த காட்டில் இருக்கவைத்து விட்டு தான் மட்டும் மன்னனை சந்திக்க தஞ்சை நகருக்குள் சென்றதாகவும், சென்றவன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் காவலாளிகள் துணுக்குற்றனர் , ஈழ அரசனின் மனைவியை அழைத்து கொண்டு தங்கள் நாட்டிற்கு செல்ல முயற்சித்தனர் ஆனால் ஈழ அரசனின் மனைவி வர மறுத்துவிட்டதால் அவர்கள் அவளை தனியே விட்டு சென்றதாகவும், அந்த ஈழ அரசனின் மனைவி அங்கயே இருந்து உயிர்விட்டதாகவும் அந்த தியாகத்தை மதிக்கும் வகையில் சோழ மன்னர்கள் இங்கே ஒரு நினைவாலயம் அமைத்ததாக தஞ்சையில் ஒரு செவி வழி செய்தி உள்ளது. இந்த செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டும், சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒரு நாட்டுப்புற பாடலும் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இன்னும் சிலரிடம் இதை பற்றி கேட்டறிந்த பொழுது ராஜராஜ சோழன் ஈழ தேசம் சென்ற பொழுது ஒரு முறை பெண் ஒருத்தி ராஜராஜ சோழனின் உயிரை காப்பாற்றியதாகவும் அந்த பெண்ணை கௌரவிக்கும் விதமாக ராஜராஜ சோழன் தஞ்சையில் இந்த கோவில் அமைத்ததாகவும் மற்றொரு செவிவழி செய்தி உண்டு. மேற்கூறிய இந்த செய்திக்கு வலு சேர்க்கும்விதமாக உள்ளது கல்கி பொன்னியின் செல்வனில் கூறியுள்ள செய்தி.
இதை பற்றி ஆராய்ந்த இராசு சொல்லும் செய்தி
மேலும் நான் தேடியதில் தஞ்சையை பற்றி ஆராய்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இராசு அவர்கள் எழுதிய நெஞ்சை அல்லும் தஞ்சை நூலில் சில தகவல்கள் கிடைத்தது அது என்னவென்றால், 1815 இல் ஆங்கிலேயர் இலங்கையில் கண்டியை கைப்பற்றினர். கண்டி அரசர் விக்கிரரமராசசிங் அவர் தாயார் நான்கு மனைவியார் ஐம்பது உறவினர் சிப்பந்திகள் ஆகியோரை படகிலேற்றிச் சென்னைக்கு நாடுகடத்தி அனுப்பிவிட்டனர். பின்னர் வேலூரில் சில காலம் தங்கிய அவர்கள் தஞ்சை வந்தனர். தஞ்சை வந்தவர் எண்ணிக்கை 44 பேர் அரசரின் தம்பி கீர்த்திசிம்மராசுவும் அதில் அடங்குவார், அவர்களுக்கு தஞ்சை அரண்மனை அருகே சின்ன மாரியம்மன் கோவில் சாலையில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இடம் கொடுத்தனர் அவர்களுக்கு என்று ஒரு அரண்மனையும் கொடுத்தனர் அந்த அரண்மனை கண்டி ராஜ அரண்மனை இந்த அரண்மனை இப்பொழுது சிதைந்து உள்ளது. அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு கண்டிராஜபாளையம் என்று பெயரிட்டனர் , இந்த கண்டி ராஜபாளையம் என்ற பெயர் மருவி இன்று கொண்டிராஜபாளையம் என்று அழைக்கபடுகிறது.
கண்டி அரசகுடும்பத்தினர் பலர் இறந்தபொழுது அவர்களுக்கு மராட்டிய அரச குடும்பத்தார் கோரி( சமாதி ) அமைத்தனர். இக்குடும்பத்தைச் சேர்ந்த ராசரத்தினத்தின் சிம்மள கழுகளா தேவி என்பவர் தஞ்சையில் 1839 இல் காலமானார் . கீர்த்தி சிம்மராசாவின் வேண்டுகோளுகிணங்க அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பப்பட்டது. அந்த கோவிலே பின்னாளில் சிங்கள நாச்சியார் கோவில் என்று வழங்கப்பட்ட இன்றைய செங்கமல நாச்சியார் கோவில். என்று இந்த கோவிலை பற்றி ஆராய்ந்த கல்வெட்டு ஆராட்சியாளர் இராசு தனது நூலில் குறுப்பிடுகிறார்.
இந்த கோவில் சோழர் காலத்திய கோவில் என்பதற்கு கல்வெட்டுகளோ வேறு பிற சான்றுகளோ இல்லை மேலும் மூன்றாம் ராஜராஜன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களை வீழ்த்தி, தஞ்சை நகரை ஏரியூட்டி அழித்தான், கழுதை கொண்டு உழுது வரகு விதைதான் , இதில் தஞ்சை பெரிய கோவில் தவிர இங்கு ஏதும் மிச்சம் இல்லை என்பதே ஆராய்சியாளர்கள் கருத்து. ஆகவே இது கண்டிப்பாக பழைய கோவில் அல்ல, இதில் உள்ள சிலைகள் உட்பட எதிலும் சோழர் கைவண்ணம் இல்லை. எனவே இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் அல்ல என்பதும் இது மராட்டியர் காலத்தில் எழுப்பப்பட்டது என்பது தெளிவாகிறது.
குறிப்புக்கள்
இராசு எழுதிய நெஞ்சை அல்லும் தஞ்சை
நன்றி
கணேஷ் அன்பு
அருமையான ஆராய்ச்சி பூர்வமான அறிக்கை என கொள்ளலாம் …
அருமையான பதிவு கணேஷ் அன்பு. எங்களுக்காக இவ்வளவு தகவல்களைச் சேகரித்து தொகுத்து வழங்க விழையும் உங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டத் தக்கது. உங்கள் ஒவ்வொரு பதிவும் சுவாரசியமானதாக உள்ளது. வாழ்க உங்கள் எழுத்துப் பணி ! நன்றி 🙂
ஒரு கோவிலின் பின்னனியில் இவ்வளவு கதைகளா? ஆச்சரியமாக உள்ளது.. படிக்கவே சுவாரஸ்யமாக உள்ளது.. தொடறட்டும் உங்கள் தேடல். பிறந்ததில் இருந்து தஞ்சாவூரில் தான் இருகின்றேன் ஆனால் இந்த கோவில் பற்றி கேள்வி பட்டது இல்லை. இதை படிக்கும் போது பிரம்மிப்பாக உள்ளது.. நன்றி அருமையான பதிவு..
மிக்க நன்றி உங்களின் கருத்திற்கும், ஊக்கத்திற்கும்
மிக்க நன்றி உன் கருத்திற்கும் தொடர்ந்த ஆதரவற்கும்
மிக்க நன்றி
Thank you so much for your valuable input.i completely read ponniyin selvan pdf few week before,most amazing book i had never read before.usually story books contain stories of some other characters,places,culture like that but this book every word related to our culture(thanjavur),places like..so interstingly i had taken finished book less than one week. i have so much of doubts on this book please you to clear for me.
my hometown is thiruvaiyaru so the appar kailai katshi incident briefly explained ponniyin selvan some what i heard newly.our thiruvaiyaru temple they saying someother stories of appar kailai katshi.which one is true?
I am also searching for that once I got will share, thanks for your comment and support
நன்றி கணேஷ்!..
செங்கமலதாயார் கோவிலின் பின்னணியை அறியவைத்தமைக்கு.
தகவல்களை திரட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிக்கும், அதற்க்கு உங்களின் நேரத்தை நீங்கள் ஒதுக்கி உழைப்பதும் பாராட்டத்தக்கது.
எழுத்துக்கள் மிளிர்கின்றன. உங்களின் நோக்கம் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
ஒரு கூட்டு முயற்சியாக NOT குழுமத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள்.
நண்பா உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது, நன்றி நீங்கள் கூறும் அந்த சிங்களபெண்ணின் சமாதி குந்தவை கல்லுரி உள்ளே அமைந்துள்ளதாகவும், அங்கு அவருக்கு ஒரு கோவில் இருப்பதாகவும் கேள்வி,தெளிவு படுத்தவும்,
arumaiyana thagaval,
new valuable info..Thx GA !!!
thanks anbu
nandri
அதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை இந்த கோவிலே அந்த பெண்மணியின் சமாதியில் அமைக்கபட்டது தான் அகவே கல்லூரியின் உள்ளே அப்படி ஒன்று இருக்க வாய்ப்பு இல்லை
மிக்க நன்றி உங்களின் கருத்திற்கு இந்த கூட்டு முயற்சி தொடரும்
Ganesh Anbu வாய்ப்பு இல்லை என்று முடித்துவிடுவதைவிட மீண்டும் தேடுவது சிறந்தது…
சரி சிங்கள நாச்சி, செங்கமல நாச்சி எல்லாம் பார்த்தோம் படித்தோம்… இதே பெயரில் ஆபிரகாம் பண்டிதர் வீட்டுக்கு அருகில் மற்றொரு கோவில் உள்ளது யாருக்குத் தெரியும்… ????
குந்தவை நாச்சியார் கல்லூரி அருகில் உள்ளதை காட்டுக் கோவில் என்று கூறுவார்கள்… கொஞ்ச காலத்துக்கு முன் இந்தப் பகுதியில் நடமாடுவதற்கே பயமாக இருக்கும் அந்த அளவு காடும் புதர்களும் மண்டிக் கிடக்கும்…
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் மிகச் சிறப்பாக வழிபாடு நடத்துவார்கள்.
இளங்குமரன் தா தேடுவது நல்லது தான் ஐயா, ஆனால் அந்த கோவில் சிற்பம் தொடங்கி எதிலும் பழமையின் சுவடு இல்லை, கல்கி மட்டுமே இதை பொன்னியில் செல்வனில் சோழர் காலத்திய கோவில் என்று குறுப்பிட்டு உள்ளார் அதுவும் அவர் எந்த கல்வெட்டு வேறு பிற சான்றுகளை ஆராய்ந்ததாக எந்த தகவலும் இல்லை ,இங்கே ஆராய்ந்த பலருக்கும் இங்கே எந்த ஒரு சோழர் கால தடயமும் கிடைக்கவில்லை, இதை பற்றி ஆராய்ந்து முறையாக எழுதியுள்ள ஒரே புத்தகம் கல்வெட்டு அறிஞர் இராசு எழுதிய நெஞ்சை அல்லும் தஞ்சை புத்தகம் மட்டுமே.. உங்களுக்கு வெறும் ஏதும் சான்று கிடைத்ததாக சொல்லும் புத்தகம் கிடைத்தால் சொல்லுகள் அதையும் படித்து தேடலை தொடருவோம்
அந்த கோவிலை நான் பார்த்து இருக்கின்றேன் வரலாறு தெரியாது கட்டாயம் அதை பற்றி தேடி செய்திகளை பகிர்கின்றேன் ஐயா ……………………………………………………………….
ஏனென்றால் இது போன்ற இன்னும் சில விடயங்கள் கல்கி ஒரு கற்பனையிலே கூறி இருப்பார் அதற்கு உதாரணம், ஆதித்த கரிகாலனின் கொலையாளி யார் என்பதை அவர் சரியாக விளக்கி இருக்க மாட்டார் ஆனால் அந்த கொலையாளிகள் யார் அவர்களுக்கு ராசராசன் வழங்கிய தண்டனை அனைத்தும் உடையார்குடி என்று அழைக்கப்பட்ட தற்போதைய காட்டுமன்னார் கோவிலில் உள்ளது இதை படிக்கவும் http://www.mythanjavur.com/2014/03/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%9f-2/
Very interesting, and thank you for writing this up. I always support views which are not based on emotion or romanticism. Real history must be brought out, even if it is less palatable to our expectations. This temple could well be a later construction. It is important to clarify this.
Having said that, there are some factual errors or questions about this article as well. The English captured the Kandyan kingdom in 1815, not in 1798. And the last four Kings of the Kandyan kingdom were in fact Tamil / Telugu, from the Nayak dynasty. A kandian king died without child and his wife was from Nayak dynasty. Her brother got power. After him, his brothers or in-laws, all from Nayak dynasty, got power, and they brought brides from south india. Therefore by the time British captured Kandy, the whole royal family was Tamil/Telugu and Hindu. This also explains why the Nayaks of Tanjore helped them – because they were close relatives. That being the case, why would a queen of that family be called 'Sinhala Nachiar' is a question worth asking.
http://en.wikipedia.org/wiki/Sri_Vikrama_Rajasinha_of_Kandy
Thanks ….
கணேஷ் அவர்களுக்கு நன்றி செங்கமலநாச்சியர் கோவில் வரலாற்றுக்கு.
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் ஏன் முன்னோர்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தியும் நாட்டாண்மை பொறுப்புகளும் வகித்து உள்ளார்கள் , இன்று இந்த கோவிலின் சிறப்பை தெரிவித்தமைக்கு நன்றி,
எனக்கு சொல்லிய செவி வலி செய்தி ஒன்று உள்ளது, அந்த சிலை வண்டிக்கரத்தெருவில் கண்டுடெக்கப்பட்டதாகவும் பின்பு தற்பொழுது உள்ள இடத்தில (காடு) காட்டுகோவிலில் வைக்கப்பட்டதாகவும் எனது முன்னோர்கள் சொல்லியுள்ளனர்…..
தகவலுக்கு நன்றி ………..
Good info
Thanjavur
நல்ல தகவல் ..நன்று
இளங்குமரன் தா – Sir not only Telugu people …. I believe that mostly Tamil peoples are celebrating this god ………
Karuppaiah Shanmugam S இல்லை ஐயா இந்த கோவிலை சொல்ல வில்லை இதே பெயரின் தஞ்சையில் உள்ள மற்றொரு கோவிலை பற்றி சொல்கிறார்