October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / சாதியம்

சாதியம்

12

சாதியம் பேசுமளவு

வளரவில்லை…

உண்மை பேச

வயது தடையா ????

Picture courtesy : Manitham Kondra Saathiyam Book by Yazhan Aathi

Picture courtesy : Manitham Kondra Saathiyam Book by Yazhan Aathi

மதிக்க தெரியா

மதி  கெட்ட

மானிடர்களின்  ஆணவம்தான்

இந்த சாதியம் !!!!!

 

ஆறறிவு படைத்த

மிருகத்தின் சதிதான்

இந்த சாதியம் !!!

 

படித்தும் பகுத்தறிவில்லாத

பைத்தியத்தின் பகுமானம்தான்

இந்த சாதியம் !!!

 

பகற்கொள்ளை அடிக்க

பாதகர்கள் உருவாக்கியதுதான்

இந்த சாதியம் !!!

 

உழைப்போரை சுரண்டும்

ஏகாதிபத்திய பிராண்டுதான்

இந்த சாதியம் !!!!

 

நீதிக்கே விலைப்பேசும்

போலிகளின் பிதற்றல்தான்

இந்த சாதியம் !!!

 

ஆசையால் ஆட்டுவிக்கப்பட்ட

கள்வர்களின் கயமைதான்

இந்த சாதியம் !!!

 

ஒதுக்கப்பட்டவர்களென ஒடுக்க

உருவாக்கப்பட்ட ஆயுதம்தான்

இந்த சாதியம் !!!

 

இயலாதவர்களின் இனம்

புரியாத வலிதான்

இந்த சாதியம் !!!!

 

பிறப்பாலே அடிமையானவர்களின்

மௌன விசும்பல்கள்தான்

இந்த சாதியம் !!!!

 

எதிர்க்க துணிவில்லாத

மண்புழுக்களின் மனக்குமுறல்கள்தான்

இந்த சாதியம் !!!!

 

சாதி வெறியால் மாண்ட உயிர்கள் போதும்  !!!!

வார்த்தைகளால் வாட்டி தீண்டாமையால் 

சுட்டெரித்தது போதும் !!!!  

மானிடா மனிதம் பயிர் செய்

அதில்  அன்பெனும் தானியம் அறுவடை செய் !!!

 

இதமாய் ஒரு புன்னகை

சிலிர்ப்பாய் ஒரு அணைப்பு

மென்மையாய் ஒரு பார்வை

அக்கறையாய் ஒரு வார்த்தை

இவை போதும்

உன் சாதிய வெறி களைய !!!!

 

தீர்ப்புகள் திருத்தப்படும்

என்ற நம்பிக்கையுடன்

ஜெய லெட்சுமி


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273