October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / எங்க ஊரு புத்தாண்டு (நல்லேறு கட்டுதல்)

எங்க ஊரு புத்தாண்டு (நல்லேறு கட்டுதல்)

10

புத்தாண்டு என்று கொண்டாடுவதென்றெ குழப்பத்தில் இருக்கின்றோம். அதை பத்தி இங்கு நாம் விவாதிக்க போவது இல்லை. எங்களுடைய கிராமத்தில் எப்படி கொண்டாடுவாங்க என்று கூறுவதே இப்பதிவு.

இன்று விளை நிலங்க பாதி விலை நிலங்களாகி விட்ட சூழலிளும் எங்கள் ஊரில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தமிழ் புத்தாண்டு. எங்க ஊர்ல புத்தாண்டையும் பொங்கலை போல கொண்டாடுவாங்க. என்ன ஒரு வித்தியாசம் பொங்கல் ஐந்து நாள் கொண்டாடுவாங்க, வருச பிறப்ப ஒரு நாள் தான் கொண்டாடுவாங்க.மத்த படி சூரிய கடவுளையும், வருண பகவானையும் தான் கும்புடுவாங்க.

மொத நாளு:

போகி மாதிரி தாங்க. வேலை பெண்டு நிமிந்துரும்.வீடு வாசல் அனைத்தையும் சுத்தமாக கழுவனும். அத்தோட சேர்த்து உழவுக்கு பயன்படும் கலப்பை, மண்வெட்டி, களை வெட்டி, அரிவாள், கடப்பாரை மற்றும் பல கருவிகளயும் சுத்தம் செய்யனும். விளைந்த தானியங்களை அளக்க உதவுர மொரக்கா(முரக்கால்), படியையும் சுத்தம் செய்யனும்,மற்றும் எரு எடுக்க உதவும் கூடைகளையும் மாட்டு சானத்தால் மொழுவனும்.

ஊர் காரிய காரவங்க, பொது மக்க எல்லாரும் சேந்து பொதுவா ஒரு வயலை ஏறு கட்டுவதற்கு தேர்ந்தெடுப்பாங்க. பஞ்சாங்கம் பார்த்து நல்ல நேரதையும் குறிச்சு வச்சுக்குவாங்க.

புத்தாண்டு :

புத்தாண்டு அன்னைக்கும் சின்னஞ்சிருசுக,இளவட்டம், பெரியவங்க என எல்லாருமே பிஸியாவே இருப்பாங்க. அம்மாக்க முத நாள் சுத்தம் பண்ண எல்லா கருவிகளுக்கும் மஞ்ச குங்குமம் வைப்பாங்க. வீடு, நிலைக்கதவுகளும் மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிகச்சுருவாங்க.அப்பாகளாம் நிலத்தை உழும் காளை மாடுடோ போர் செட்டுக்கு போய்ருவங்க. அங்க அவைகள குளிப்பாட்டி கலர் கலரா பொட்டு வைச்சு பொண்னு மாதுரி கூட்டிடு வருவாங்க. சிறுசுங்கலாம் புது துணி போடுற ஆர்வத்துல சீக்கரம் முளிச்சு குளிச்சு , ஏறு கட்ட ரெடியா இருக்குங்க. புது டிரெஸ் போட்டு கிட்டு அங்கையும் இங்கையும் அலைஞ்சு கிட்டே இருப்பாங்க.

பாகு அரிசி:

வருச பிறப்போட அல்டிமேட் ஸ்பெஸல் இந்த அரிசி தாங்க. பச்சரிசி, வெல்லபாகு, எள், தேங்காய் தூள், பச்சைபயிறு,ஏலக்காய் என எல்லாத்தையும்  சேத்து பாகு அரிசி பண்ணுவாங்க. சாமிக்கு இத தான் படைபாங்க. வீட்டுல அடுத்த ரெண்டு நாளைக்கு ஸ்நாக்ஸ் வாங்க மாட்டங்க.

கொல்லர்களுக்கு மரியாதை செய்யுறது:

ஊர் கோயிலுல, உழவு கருவிகள செஞ்சு தரும் கொல்லர்களுக்கு மரியாதை பண்ணறதுகாக, தற்காலிகம கொல்லுப்பட்டறை ஒன்னு அமைச்சு வழிபாடு நடத்த்துவாங்க. அப்பாக்க, பெரியவங்கம காளை மாடுகல கூட்டிகிட்டு, கலப்பைய தூக்கிகிட்டு கோயிலுக்கு போய்ருவாங்க.

ஊர்கோலம்:

அந்த வழிபாடு முடிஞ்சதும், சிறுசுங்க அப்பறம் இளவட்டம் பாகு அரிசியையும், கொஞ்ச விதையையும் எடுத்துகிட்டு கிளம்பிருவாங்க.(விதைகளில் அனைத்தும் அடங்கும் நெல், சோளம்,கடலை,உளுந்து,பயறு,எள்),பெரியவங்க கலப்பைகல தோல்ல சுமந்து கிட்டு, காளை மாடுகள விரட்டி கிட்டு ஊர்கோலமா அந்த பொதுவான வயலுக்கு போவாங்க. இப்படி ஊர் மக்க எல்லாரும் ஒன்னா போற காச்சி கண்கொள்ளா காச்சியா இருக்கும்.

எரு இரைக்குறது:

இப்படி எல்லோரும் போனதுக்கு அப்பறம்,  வீட்டில இருக்க அம்மாக்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும். அததான் எரு  எடுத்து கிட்டு வயலுக்கு போறது. மாட்டு சானத்தை தான் எருனு சொல்லுவாங்க, முத நாள் மொழுவி, பொட்டு வைச்ச கூடையில எருவை அள்ளி அவங்க அவங்க தான் வயலுக்கு போய் அத இரைச்சுட்டு, சூரியன பாத்து கும்புட்டு வருவாங்க.

ஏறுகட்டுதல்:

ஊர்கோலமா போர கூட்டம் பொது வயல போய், நிலத்த உழுரதுக்கு வரிசயா நிப்பாங்க. ஊர் பெரியவரு நல்ல நேரம் வந்ததும் மணி அடிப்பாரு. எளவட்ட பசங்க நிலத்த உழ, பொண்னுங்க விதைய விதைப்பாங்க. பாட்டு பாடி கிட்டும், விசில் அடிச்சு கிட்டும் எளசுக  நிலத்த உழுர காட்சி பாரதி ராசா படம் பாக்குற மாதுரி ரம்மியமா இருக்கும்.நேருல பாக்குறவங்களுக்கு அந்த ஸீனோட அழகு விளங்கும்.

சூரிய, வருண பகவான் வழிபாடு:

நிலத்தை உழுது விதைச்சு முடிச்சதும், உழுத நிலத்தில சிறு பகுதிய (மைய பகுதி) மண்ண பரப்பி சமதளமாக்கி வாழை இலைய விரிச்சு அதில எல்லாரு  வீட்டு பாகு அரிசியையும் ஒன்னா கொட்டி, தேங்காய் உடைச்சு, ஊதுவர்தி மற்றும் சூடம் கொளுத்தி சூரிய கடவுளையும், வருண பகவானையும் கும்புட ஆரம்பிச்சுடுவாங்க. அங்க இருக்கவக மனசுல பகையோ, வேறுபாடோ இருக்காது. “சாமி பருவ மழை நல்ல பெய்யானும்,அவர்களின், பயிருக செழிப்பாக வளரனும்”. இத தான் அவங்களோட வேண்டுதலையா இருக்கும். அப்பற்ம் ஒன்னா கொட்டி சாமி கும்புட்ட பாகு அரிசிய எல்லாருக்கும் குடுப்பாங்க. பாகு அரிசிய தின்னுகிட்டே வாய்க்க வரப்புல நடந்து வீட்டுக்கு திரும்ப வருவாங்க.

இத்துடன் முடிஞ்சு போறது இல்லங்க எங்க வருச பொறப்பு வீட்டுக்கு வந்ததும் சிறுசுங்க, எளவட்டம் பெரியவக, வயசுல மூத்தவங்க  காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்குவாங்க. ஆசிர்வாத்த்தோட குடுக்குற கொஞ்ச பணம் எல்லயில்லாத சந்தோஸத்த தரும். ஊருல இருக்க எல்லா  பெரியவகளுகிட்ட ஆசிர்வாதம் வாங்குறதுலையே பாதி நாளு முடிஞ்சுரும்

சாதி, மத வேறுபாடு எங்களுக்குள்ள இருக்காது எல்லாரும் ஒன்னு மண்ணா தான் பழகுவாங்க. பாகு அரிசிய பீட்டரு வீட்டுக்கும், பாய் வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவோம்.அதே போல இங்கிலிசு வருச பிறப்புக்கு எங்க வீட்டுக்கு பாகு அரிசி வரும்.

 

இரவுல அம்மன் வீதி உலா வருவா. அழகுகோட அம்மா பவனி வர காட்சி அப்புடியே மனச நிறச்சுரும். மாவிளக்கு போட்டு,தாய வணங்கி வருச பிறப்பு முடியும்.

ஆயிரம் வசதிகள் இருந்தும், இவற்றை இழந்து விட்டு நகரத்தில் வாழும் வாழ்கை நரக வாழ்கைக்கு இணையானதே. இப்பதிவு பல காரணங்களால் பிறந்த இடத்தை விட்டு நகரங்களிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் பாரம்பரியத்தை நினைவூட்டவே எழுத பட்டது.

நன்றி

ஜெய லெட்சுமி

.

 

 

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273