July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / இனிதே முடிந்தது பாரம்பரிய நடைபயணம்

இனிதே முடிந்தது பாரம்பரிய நடைபயணம்

7

உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று நமது , INTACH,Clean Thanjavur Movement,Natives of Thanjavur public Welfare Trust மற்றும் சொர்க்கபூமி தஞ்சாவூர்(FB page) இணைந்து நமது புராதானமான நீர்நிலைகளை அழிவில் இருந்து காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்தது.இந்த நடைபயணம் தஞ்சை சின்னக்கோட்டை என்று அழைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவில் தொடங்கி பெரியக்கோட்டை அகழி வழியாக சென்று சமாந்தான் குளத்தில் நிறைவுபெற தீர்மானிக்கபட்டது.

10154458_10202371043051524_6330436113151997165_n

இந்த நடைபயணத்தில் நோக்கம் புராதானமான தஞ்சை நகரில் சோழ,பாண்டிய,நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏரி,குளம்,அகழி,மற்றும் இதற்கு நீர்கொண்டு செல்லும் நீர்வழிப் பாதையை மீட்கவும் மீண்டும் இந்த நீர்நிலைகளில் தண்ணீர் விட்டு முறையாக பராமரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தவும் இது பற்றி தஞ்சை நகர மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை நீர்நிலைகளின் வரலாற்றையும் அழிவில் விழும்பில் இருக்கும் இன்றைய நிலை பற்றி அறிய இந்த லிங்கை சொடுக்கவும்

http://www.mythanjavur.com/2014/04/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/

இந்த நிகழ்ச்சியை காலை 8.00 மணி அளவில் சிவகங்கை பூங்காவில் பெரியார் மணியம்மை பல்கலைகழக துணைவேந்தரும்,கவின்மிகு தஞ்சை இயகத்தின் தலைவருமாகிய முனைவர் ராமச்சதிரன் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் வடிவேல் பழனியப்பன் INTACH Natural Heritage Division Head,Natives of Thanjavur Public welfare trust இன் கெளரவ தலைவர் பொறியாளர் கோவிந்தராஜன் மற்றும் முத்துக்குமார்(Hon. Secretary, INTACH ) முன்னிலை வகித்தனர்.

Dr.Ramachandran,Govidarajan,Palaniyappan

முனைவர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பொழுது உடன்,கோவிந்தராஜன் ஐயா ,பழனியப்பன் ஐயா

10287158_768936479785302_17708923_n

முனைவர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பொழுது உடன்,கோவிந்தராஜன் ஐயா ,பழனியப்பன் ஐயா மற்றும் முத்துக்குமார் அவர்கள்

சிறப்பான இந்த நிகழ்ச்சியில் INTACH,Clean Thanjavur Movement,Natives of Thanjavur ,Cholamandal Numismatic Society மற்றும் சொர்க்கபூமி தஞ்சாவூர்(FB page) சார்ந்த உறுப்பினர்களும் ,தஞ்சையில்  உள்ள கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்களும் பங்குபெற்றனர்.விழாவை சிறப்பித்தனர்.இதில் பங்கு கொண்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இதோ

Dr. N. Ramachandran President, Clean Thanjavur Movement & VC, PMU
Er. S. Rajendran INTACH Architecture Division Head
Dr. S. Thamilarasan INTACH Heritage Education Division Head
Mr. V. Palaniappan INTACH Natural Heritage Division Head
Dr. R. Rama Kausalya INTACH Living Heritage Division Head
Mr. S. Govindarajan Honorary President,Natives Of Thanjavur Public Welfare Trust 
Mr. Thennam Meimman Temple Architect, Tamil University
Er. R. Saravanaraja Designer
Mr. P. Rajeswaran Corporation Councillor
Dr. P. Perumal Conservator
Mr. K. Padmanabhan Vice-President, Clean Thanajvur Movement
Mr. M. Dorai Rasu Founder President, Cholamandal Numismatic Society
Ar. Manonmani Heritage Society I/c, PMU
Dr. S. Shanmuga Priya Heritage Society I/c, AAMEC
Mr. K. Swaminathan Heritage Clubs Coordinator

கிட்ட தட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சையில் புரதானத்தை காக்கவேண்டி இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டனர்.பூங்காவில் தொடங்கிய இந்த நடைபயணம் பெரிய அகழியைச் சுற்றி அலங்கங்களின் வழியே தொடர்ந்து, சாமந்தநாராயணன் குளத்தில் முடிவுற்றது.இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடம் நடைபயணம் மேற்கொண்டார்கள் மேலும் தஞ்சை நீர்நிலைகளை காக்கவேண்டியத்தின் அவசியத்தை பற்றியும் நோட்டீஸ்கள் வழங்கினார்கள்.

10253165_768936459785304_2013053376_n

இனிதே தொடங்கியது

10287197_768936593118624_634505787_n
10276325_768936466451970_627198991_n

இப்படை தோற்கின் எப்படி வெல்லும்
10268108_768936483118635_1948983022_n

இப்படை தோற்கின் எப்படி வெல்லும்

967652_768936636451953_196536524_n

வரலாற்றை ஆர்வமுடன் அறிந்துகொள்ளும் மாணவர்கள்

10150991_768936639785286_886903690_n

வரலாற்றை ஆர்வமுடன் அறிந்துகொள்ளும் மாணவர்கள்

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்

மேலும் அங்காங்கே முத்துக்குமார் அவர்கள் கூட்டத்தை நிறுத்தி அந்த அகழி பற்றியும் வரலாறு பற்றியும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.பொறியாளர் கோவிந்தராஜன் ஐயா மாணவர்களுக்கு சாமந்தான் குளம் பற்றியும்,தஞ்சை கோட்டையின் வரலாறு பற்றியும்,நாயக்கர்கள் நிர்மாணித்த அகழி ,ஏரி,குளம் போன்ற நீர்நிலைகளை அமைத்த திட்டமான ஜலசூத்ரா பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார்.

அகழியை பற்றி விளக்கிய பொழுது

அகழியை பற்றி விளக்கிய பொழுது

10276371_768936473118636_1606379074_n10276287_768936616451955_1113398212_n

10178187_768936659785284_546506999_n

கோவிந்தராஜன் ஐயா மாணவர்களுக்கு சமாந்தன் குளம் பற்றி விளக்கிய பொழுது

தஞ்சை மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரனுடன் முத்துக்குமார் அவர்கள்

தஞ்சை மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரனுடன் முத்துக்குமார் அவர்கள்

நிகழ்ச்சி பற்றி முத்துக்குமார் அவர்கள் தொலைகாட்சிக்கு விளக்கிய பொழுது

நிகழ்ச்சி பற்றி முத்துக்குமார் அவர்கள் தொலைகாட்சிக்கு விளக்கிய பொழுது

இந்த பயண அனுபவத்தில் மாணவர்கள் தஞ்சையை பற்றிய பல அரிய தகவல்களை தெரிந்துகொண்டதாகவும் ,இது போன்ற பாரம்பரியம் காக்கப்பட வேண்டும், நமது தஞ்சையின் புரதானங்களை மீட்கவேண்டும்  என்றும் இந்த நடைபயணம், ஒரு வித்யாசனாமான,அறிவுபூர்வமான,மனநிறைவு தரும் விதமாக அமைந்தது என்றும் கருத்து தெரிவித்தனர். 
சாமந்தன் குளத்தில் நிறைவுபெற்ற பொழுது

சாமந்தன் குளத்தில் நிறைவுபெற்ற பொழுது

10255009_768936706451946_1720461986_n

10255301_768936649785285_113772972_n

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி இவ்வளவு அழகாகவும்,நல்ல திட்டமிடலோடு வெற்றிகரமாக நிறைவேற அயராது பாடுபட்டு தனி ஒரு ஆழகா நின்று இதை முடிதிக்காட்டிய பெருமை நமது அமைப்பை சார்ந்த முத்துகுமார்(Hon. Secretary, INTACH) அவர்களையே சாரும்.அவரில்லாமல் இந்த நிகழ்வு இத்தனை வெற்றிகரமாக நிறைவேறி இருக்காது.மேலும் இந்த நிகழ்வை ஒருகிணைத்த செயலாளர் முனைவர் தையல்நாயகி அவர்களுக்கும்,Natives of Thanjavur Public Welfare Trust தலைவர் விஜயகரன் அவர்களுக்கும்,சொர்க்கபூமி தஞ்சாவூர் (FB page) நிர்வாகி ஆறுமுகம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இந்த நிகழ்வு இத்துடன் முடியக் கூடாது, கோயம்பத்தூரில் வெற்றிகரமாக செயல்படும் சிறுதுளி போல்,திருச்சியின் சேவ் உயக்கொண்டான் திட்டம் போல்,நமது தஞ்சை நகரை நீர்நிலைகளை காப்பாற்ற நாமும் ஒரு திட்டம் உருவாக்கி நமத பழமையையும் பெருமையையும் மீட்டெடுக்கவேண்டும், அதற்க்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்

நம் தஞ்சை !!! நம் பெருமை !!! பெருமையை காப்போம் வாருங்கள் !!!!!

நிகழ்ச்சியில் பங்குகொண்டு அனைத்து தகவல்களையும் எனக்கு சொன்ன சகோதரி ராஜி அவர்களுக்கும் ,அருமையான இந்த நிகழ்வை படம் எடுத்து அனுப்பிய பாஸ்கரன் அவர்களுக்கும்  பாராட்டுகளும் நன்றிகளும்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியல் பங்குகொள்ள முடியாவிட்டாலும் இதை பற்றிய செய்தியை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

நன்றி

கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273