January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ? தஞ்சை பெரியகோவில் சிவபெருமான்

மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ? தஞ்சை பெரியகோவில் சிவபெருமான்

22

மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ?
தஞ்சை பெரியகோவில் சிவபெருமான்
பிட்டுக்கு மண் சுமந்த  பெருமானே..
பிறை  நிலா சூடிய நாயகனே…
ஜடா முடி தரித்த வேதியனே…
காவிரி ஆற்றின் கரையினிலே,
கவின்மிகு அழகுடன் வீற்றிருப்பவனே..
காலத்தால் அழியாத கற்றாலியில்,
முழுமுதற் கடவுளாய் இருப்பவனே…
பல்லவனின் கற்காவியதிற்கு போட்டியாய்,
என் தஞ்சைபுரி அமர்ந்த அருட்பெரும்ஜோதியே….
களிமண்ணோ, சுண்ணாம்போ இல்லாமல்
கலையுடனே கணக்காய் அமைந்த
தில்லை சிற்றம்பலத்தனே…
உலகம் அழியும் தருவாயிலும்,
உலகளந்தானின் புகழ் காக்கவே,
உயர்ந்து நிற்கும் ஒப்பற்ற ஓவியமே…
கல் விழுந்த நீர்நிலையாய்
கலங்கிய கனத்த மனதும்,ஓர்
அடிப்பதித்து சிவா  என்றழைத்திட
தெளிந்து விடும் மாயமென்னவோ?
உள்நுழைந்து திருவடி துதித்து
நாதனை நமசிவாய என்றிட
சித்தமே சிவனென்று சிலிர்க்கும்
மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ?

Showing 22 comments

  • Ganesh Anbu
    Reply

    அருமை அருமை அருமை, பாரட்ட வார்த்தைகளை இல்லை. நல்ல கவிதை,மிகவும் அற்புதமாக எழுதியுள்ளிர்கள், ஒரு ஒரு வார்த்தையும் ரசித்தேன் மெய் சிலிர்த்தேன்.தொடர்ந்து எழுதுங்கள்

  • Vadivelan Palaniappan
    Reply

    அருமை அருமை அருமை-உங்கள் திறமையை மேலும் வளர்த்திட வாழ்த்துக்கள்

  • Jaya Lakshmi
    Reply

    உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி கணேஷ்… சென்ற கவிதைக்கு கிடைத்த ஆதரவே என்னை எழுத தூண்டியது. மீண்டும் நன்றி.

  • Musique Lounje
    Reply

    அற்புதமான கவிதை … வாழ்த்துக்கள் ஜெயா லக்ஷ்மி

  • Muthu Kumar
    Reply

    "பல்லவனின் கற்காவியதிற்கு போட்டியாய்,
    என் தஞ்சைபுரி அமர்ந்த அருட்பெரும்ஜோதியே………" "சித்தமே சிவனென்று சிலிர்க்கும்
    மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ?"
    என்ன ஒரு எண்ணம்? சிந்தனை? வாழ்த்துக்கள். மேலும் பல கவிதைகள் எதிர்பார்கிறேன் ………………..

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி… மேலும் மேலும் எழுத வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும். மீண்டும் நன்றி உங்கள் கருத்துக்கு .

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி அக்கா…

  • Anbu Arasu
    Reply

    very nice…good job…keep writing .. Har Har MahaDev _/_

  • Ganesh Ram
    Reply

    பெயரின் முதல் வார்த்தையே "ஜெயம்" என்று உங்களுக்கு இருக்க, என்னால் என்ன சொல்லி பாராட்ட முடியும்.

  • Jaya Lakshmi
    Reply

    Thank you friend… 🙂

  • Jaya Lakshmi
    Reply

    உங்களின் ஆதரவும் கருத்துக்களுமே மேலும் எழுதுவதற்கு ஆதரவாக உள்ளது. நன்றி தோழா.

  • Ganesh Ram
    Reply

    Jaya Lakshmi: உண்மையா சொன்னதுக்கு நன்றி தேவை இல்லை தோழி.

  • Govindarajan Subramaniam
    Reply

    இறை வழிபாட்டின்போது மெய் சிலிர்ப்பது பெரிய செய்தியில்லை. சித்தம் சிலிர்ப்பதுதான் பெரிய செய்தி. மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • Kannan Foruin
    Reply

    அருமை வாழ்த்துக்கள் …..தோழி

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி ஐயா…

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி…. தோழா.

  • Jaya Lakshmi
    Reply

    நன்றி. ஐயா. உங்களுடைய ஆசீர்வாதம் இருக்கும் வரை எழுத்து பணி கட்டாயம் தொடரும்..

  • Kalaimagal Rajaraman
    Reply

    It was awsum jaya…the caption line is out of the world…wish u to write a lot more…:) kudos to you jaya… 🙂

  • Jaya Lakshmi
    Reply

    thanks for sharing ma 🙂

  • Jaya Lakshmi
    Reply

    thanks for sharing ma 🙂

  • arimagi prabhu
    Reply

    arumayana varigal, thangal varigalin unmai emmai andha kalaththirkke kondu selginrana

Contact Us

For Immediate quires Please contact here...