October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பெருவுடையார் ஆலயத்தை பார்த்தவுடன் நம் நினைவில் கொள்ள்ளவேண்டியது யார் யாரை ??

பெருவுடையார் ஆலயத்தை பார்த்தவுடன் நம் நினைவில் கொள்ள்ளவேண்டியது யார் யாரை ??

18

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் எழுப்ப பட்ட ராஜராஜேச்சரம் தமிழர்களின் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றும் ஒரு ஒப்பற்ற கலைக்கோயில் என்று சொன்னால் அது மிகையல்ல.இத்தனை பிரமாண்டக் கோயில் எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி சாத்தியாமாயிற்று,மலைகளே இல்லாத தஞ்சையில் பாறைகளை கொண்டு 216 அடி கற்றளியை எப்படி எழுப்ப முடித்து என்று நினைத்துப் பார்த்தாலே வியப்பாக உள்ளது.

1463060_638682636182805_476456330_n

ஆனால் இப்பெருங்கோவிலின் அற்ப்புதமான கட்டடக்கலை அமைதி,விமானத்தின் சிறப்பு,கல்வெட்டில் அறியபடுகிற பண்டையகால வாழ்க்கை முறை, கலாசாரம், அரசியல், கலை, பொருளாதார மாண்புகள் ஆகியவற்றைவிட நிழல் சாயாத கோபுரம்,வளர்கின்ற நந்தி,சாரப்பள்ளத்திலிருந்து ஏற்றப்பட்ட 80 டன் எடை கொண்ட ஒரே பிரமாந்திரக்கல்,ஆட்சியில் இருப்பவர் கோவிலுக்கு சென்றால் பதவியோ உயிரோ போய்விடும் என்பன போன்ற உண்மையற்ற புனைந்துரைகளே, பாமரர்களையும் , படித்தும் பகுத்தறிவு இல்லாதவர்களையும் மிகவும் கவர்க்கின்றன.

1-Big Temple 3

உண்மையில் பெரியக்கோவிலில் நாம் நுழையும் பொழுது நம் நினைவிற்கு வர வேண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போம்

 • . 7 பனைமர உயரத்தில் ஒரு கற்றளியை தஞ்சையில் நிறுவவேண்டும் என்று நினைத்து அதை சாதித்தும் காட்டிய மாமன்னன் ராஜராஜசோழன்
 • வீரசோழன் குஞ்சரமல்லனான இராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமை கட்டிடக்கலைஞன்
 • .மதுராந்தகனான நித்யவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலை கட்டிடக் கலைஞன்)
 • இலத்தி சடையனான கண்ட்ராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலை கட்டிடக் கலைஞன்)
 • .ராஜ ராஜ சோழனின் அக்கையார் குந்தவை பிராட்டியார்
 • . கோவில் சுற்ற்சுவர் அமைத்த சேனாபதி கிருஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன
 • .ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
 • .ஈசான சிவபண்டிதர் எனும் ராஜகுரு
 • .இராஜேந்திர சோழன்
 •  ராஜ குரு சர்வ சிவ பண்டிதர
 • .சைவ ஆச்சாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
 • கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்

மேற்கூறிய அனைவரும் இந்த பிரம்மாண்டமான கலைப்படைப்பை உருவாக்கியதில் முக்கியபங்கு ஆற்றினர் என்று சொன்னால் அது மிகையாகாது.

பெரியகோவில் விமானத்தின் உட்கூடு

பெரியகோவில் விமானத்தின் உட்கூடு

கோவிலை கட்டியதில் யார் யாரின் பங்களிப்பு இருந்துதது என்று பார்த்தோம்.கோவில் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு யார் யார் இதை நிர்வகித்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா வாருங்கள் பார்க்கலாம்.

1. சேனாபதி கிருக்ஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் – படைத் தளபதி, பெருவுடையார் கோயில் சுற்றுச் சுவர் பொறுப்பாளர், ஓலை நாயகம்

2. பரமன் மழபாடியான் மும்முடிச் சோழன் – படைத் தலைவர்களில் ஒருவர்

3. சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன் – படைத் தலைவர்களுள் ஒருவர், நில அளவைத் துறையின் தலைவர் – சோழ அரசு முழுமையையும் அளந்தவர்

4. மதுராந்தகன் கண்டராதித்தன் – இராசராசரின் சிற்றப்பா. கோயில்களின் கண்காணிப்பாளர்

5. ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய முமுடிச் சோழ போசன் – தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சண்டேசுவர தேவர் சிலையை எழுப்பியவர், திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்

6. பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் – தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் பூசைப் பணிகளின் பொறுப்பளர்

7. பாளூர் கிழவன் அரவணையான் மாலாரிகேசவன் – அரசியல் அதிகாரி, பெருவுடையார் கோயில் பூசைப் பணிகள் கண்காணிப்பாளர்

8. இராசகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம் – திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்

9. வேளான் உத்தமசோழனாகிய மதுராந்தக மூவேந்த வேளான் – திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்

10. விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன் – திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்

31556a7c378a33ac9257f029395c01af_large

1966718_832059970153970_543139422_n

மேற்கூறிய இவர்களை தான் நாம் பெரிய கோவிலை பார்த்தவுடன் நினைவில் கொள்ளவேண்டியவர்கள்.ஏன் என்றால் ராஜராஜ சோழனின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் இவர்களே.மாமன்னன் நினதைதை இவர்கள் சாதித்தார்கள்.இது போன்ற ஒரு கலைக்கோவிலை உருவாக்கி,தமிழனின் கலை, பண்பாடு,சிறக்க செய்தவர்கள் இவர்கள். இன்று உலகமே பார்த்து தமிழனின் கலையை வியக்கும் படி ஓர் உன்னதப் படைப்பை உருவாக்கியவர்கள் இவர்கள். இவர்கள் மட்டுமா இன்னும் எத்தனையோ பேர் படைவீர்கள்,ஊர்ச்சபைகள் என்று சோழநாட்டின் ஒரு ஒரு குடிமகனும் அயராது உழைத்து இந்த அற்ப்புதத்தை செய்து உள்ளார்கள்

1780753_687571567960578_345067192_n

இப்படி அனைவரையும் ஒற்றுமையாக உழைக்க வைத்தது எது ??? வேறு எதுவாக இருக்கமுடியும் ராஜ ராஜசோழன் என்னும் மன்னனின் மேல் மக்கள் வைத்து இருந்த அன்பு தான் காரணமாக இருக்கமுடியும். இப்படி அன்புமழை பொழிந்த மக்களுக்கு ராஜராஜன் எப்படி கைமாறு செய்தான் தெரியுமா ??? சந்திர சூரியன் உள்ளவரை நீடுடி நிலைத்து நிற்க்கபோகும் இந்த கற்றளியில் இந்த கோவிலுக்காக பாடுபட்ட ஒருவரின் பெயரையும் விடாமல் அனைவரையும் சரித்திரத்தில் இடம்பெற செய்தான் ராஜ ராஜன். என்ன பெருந்தன்மையான மன்னன்.10 ரூபாய்க்கு செய்துவிட்டு 1000 ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் இக்காலத்தில் பார்க்கமுடியுமா இப்படி ஒரு மனிதனை.ராஜ ராஜ உன்னுடைய இந்த குணத்தால் தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அனைவராலும் மதிக்கப்படும் ஓர் மனிதனாய் இருகின்றாய்.என்ன சொல்வேன் எப்படி சொல்வேன். வார்த்தையின்றி தவிக்கிறேன் மன்னா உன் புகழ் பாட. உன்னை மட்டுமா தமிழர் வரலாறு கூறும் இப்படி ஒரு காலப்பெட்டகத்தை உருவாக்கிய ஒரு ஒருவரையும் எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.இப்படி பட்ட மாமனிதர்கள் பிறந்த தமிழ்க் குடியிலும் இந்த தஞ்சை மண்ணிலும் பிறக்க என்ன தவம் புரிந்தேனோ ????

சோழம் !!! சோழம் !!! சோழம் !!!

மேற்கூறிய தகவல்கள் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் தஞ்சாவூர் நூலில் இருந்தும்,தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஐயாவின் பிற்காலச் சோழர் சரித்திரம் நூலின் இருந்தும் எடுக்கப்பட்டது

நன்றி

கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273