January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பஞ்சவன் மாதேவியாகிய நான்….. !!!!!!

பஞ்சவன் மாதேவியாகிய நான்….. !!!!!!

35

 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்… உலகின் பெரும் நில பரப்பிற்கு சோழ தேசத்தின் முத்திரையை பதித்த வீரத் திருமகன், பொன்னியின் செல்வன், அருள்மொழித் தேவரின் நிழலாக இருந்து சோழ மக்களுடன் இரண்டரக் கலந்தவள் தான் பஞ்சன்வன் மாதேவியாகிய நான் …!!!!
சோழமும் சோழதேசத்து மக்களும் தன் மார் தட்டி பெருமை கொள்ள தகுதியானவர்கள் ஆனார்கள் .. ஆம் நம் அருள்மொழி தேவன் சிவனுக்காக எழுப்பிய கற்றளியே அதற்க்கு காரணம்.அந்த கற்றளி கட்டுமானத்தின் பொழுது ராஜராஜ தேவருக்கு எல்லாமுமாக இருந்து உதவியவள் தான் பஞ்சன்வன் மாதேவியாகிய நான் …!!!!

ராஜராஜ சோழன் எழுப்பிய கற்றளி

ராஜராஜ சோழன் எழுப்பிய கற்றளி

நாட்டிய மங்கையாக வாழ்க்கையை ஆரம்பித்து வெறும் வட்டமாக தன் வாழ்வை முடிக்காமல் … நம் மன்னர் உடையார் வழியாக இறைவனை நோக்கிய நேர் கோட்டில் பயணப்பட்டவள் தான் பஞ்சவன்மாதேவியாகிய நான் … !!!

1000 புகழ் இருந்தாலும் அது அனைத்தும் இறைவனால் அரங்கேற்றி வைக்கப்பட்டது என்பதை அறிந்தவள் நான்… மன்னனின் மனைவியாக இருந்தாலும் கால சக்கரத்தின் வழி சுழன்று தானே ஆக வேண்டும் என்பதை நன்றாக உணர்தவள் நான்.. உடையார் தேவரின் மறைவிற்கு பிறகு நானும் இறைவனடியை சேரும் நாள் வந்தது. என் இழப்பை தாங்கி கொள்ள முடியாது ஆறாத்துயர் கொண்டு என் நினைவாக அழகிய சிற்பங்களுடன், என் நடனம், போர் திறன் ஆகிய அனைத்தையும் பறை சாற்றும் விதமாக என் மகன் ராஜேந்திர சோழன் எனக்காக ஒரு நினைவாலயம் அமைத்தான். என் மகன் எனக்காக அமைத்த நினைவாலயத்தில் இருந்து நித்தம் சோழ தேசத்தையும் சோழ மக்களையும் காத்தவள் தான் பஞ்சவன் மாதேவியாகிய நான் .. !!!!

பஞ்சவன்மாதேவி ஆஸ்திக்கு மேல் பழுவூர் மன்னர்கள் பாணியில்  உள்ள லிங்கம்

பஞ்சவன்மாதேவி ஆஸ்திக்கு மேல் பழுவூர் மன்னர்கள் பாணியில் உள்ள லிங்கம்

பழுவூர் மன்னர்கள் பாணியில் அமைக்கப்பட்ட நந்தி

பழுவூர் மன்னர்கள் பாணியில் அமைக்கப்பட்ட நந்தி

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

பஞ்சவன்மாதேவியின் போர் மற்றும் இதர திறைமைகளை வெளிபடுத்தும் சிற்பங்கள்

10008366_756303634381920_200225714_n

1543939_756303624381921_538909795_n

காலங்கள் கடந்தது சோழ தேசமும் அதன் அதிகாரங்களை இழந்தது, மன்னர்கள் மாறினர், காட்சிகளும் மாறின, மக்களும் மறந்தனர். ஆம் !! என்னை போல் ஒருவர் இருந்ததற்கான அடையாளங்கள் மறைய தொடங்கி நான் யாரென்றே அனைவராலும் மறக்கப்பட்டவள் தான் பஞ்சவன் மாதேவியாகிய நான் … !!!!

மக்களின் அறியாமை மட்டுமா வளர்ந்தது செடிகளும் கொடிகளும் கருவேலமும் தான் வேர் விட்டு எழுந்து என் இருப்பிடத்தை மறைத்தன… இருள் கவ்வும் நிலையில் அழிவின் விளிம்பை நோக்கிய பயணத்தில் இருந்த, என் வழியில் ஒருவர் வருவார் வழி மறிப்பார், மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது இந்த நிலை மாறும் இதுவே நிரந்தரம் இல்லை என்பதை அறிந்தவள் நான்… அஸ்தமித்த சூரியன் மறுமுறை உதித்து தானே ஆக வேண்டும்.மக்களின் அறியாமையால் மறைந்த என் அடையாளங்களும் வெளி கொணர ஒருவர் வருவார் என்னை உலகறிய செய்வார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தவள் தான் பஞ்சவன் மாதேவியாகிய நான் … !!!!

புதர்மண்டி கிடந்த கோவில்

புதர்மண்டி கிடந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

உடையாரை நோக்கிய ஒருவரின் பயணம் என் மேல், மறுபடியும் சூரியனின் ஒளி கதிர்களை வருட வழி வகை செய்தது .அன்று தைரியம் கொடுத்தது எம் மன்னன் எம்மை மறைய விட மாட்டார் என்ற நம்பிக்கை பெருக்கெடுத்தது. உடையாரின் புகழோடு என்னை பற்றியும் ,7 பணை உயர கற்றளி எழுப்ப தன் வாழ்வை அர்பணித்த மாதேவி. தங்கமும் , வைரமும் , நவ இரத்தின கற்களையும் இறைவன் திருப்பணிக்காக அளவில்லாமல் அளித்தவள் செல்வ செழிப்புடன் இருந்தவள் என்று அவர் உடையார் நாவலில் பாலகுமாரன் குறிப்பிட்டதால் உலக மக்களால் அறியப்பட்டவள் தான் பஞ்சன்மாதேவியாகிய நான் …!!!!

நிகழ் காலத்திற்கு பயணிப்போம்…

தினம் தினம் வவ்வால்களின் சத்தத்திலும் , அதன் எச்சத்தின் மணம் நாசியை துளைக்க ,இருள் கவ்வி யாரும் கவனிப்பாரற்று இருந்த என் மேல், என் அன்பு மக்களின் பார்வை திரும்பியது.என்னை நோக்கி வர ஆரம்பித்தனர் எனது அன்பு சோழ குடிக் கொழுந்துகள். எழுத்து சித்தர் பாலகுமாரனின் முயற்சியால் என்னை சூழ்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டது .தினம் ஒரு கால பூஜைக்கு நிதியும் ஒதுக்கபட்டது.புதிய விடியலும் பிறந்தது.

தினம் சிலர் வர ஆரம்பித்தனர்.அவர்களுக்கு ஆசிகள் வழங்கி மகிழ்தேன் .அவர் அவர் இயன்றதை என் நினைவாலயத்திற்கு வழங்கினர். என்னை பற்றிய பதிவுகள் தகவல் தொழில் நுட்பம் வாயிலாக கடல் கடந்தும் பயணிக்க தொடங்கியது.

இதோ பங்குனி மாதம் 8 ஆம் நாள் வந்தது.தஞ்சை முதல் குடந்தை மாநகர் வரையிலான சோழ குடிகள், ஒரு குழுவாக வந்தது.வழக்கமான ஆசிர்வாதங்களை அளிக்க முற்பட்ட என்னை, அவர்களை கவனிக்க வைக்கும் விதமாக அமைந்தது அதற்கடுத்து நடந்த காட்சிகள்.யாரப்பா நீங்கள்? என்ன பணி செய்ய இங்கு வந்தீர்கள் என்று கேட்க எத்தனித்த என்னை அமைதியாக்கினர். அவர்களின் பெயரை அறிந்து கொண்டேன் அவர்களின் உரையாடல்களின் வாயிலாக..

மகத்தான பணியை மனமுவந்து செய்த சோழர்கள்

மகத்தான பணியை மனமுவந்து செய்த சோழர்கள்

இறைவனை வணங்கி பணிகளை ஆரம்பித்தனர்.. முதலில் சக்கரவர்த்தி , சிறுவன் அரவிந்தனோடு இணைந்து இருள் சூழ்ந்த எனது ஆலயத்தில் மின் விளக்குகளை பொருத்தி ஒளி வீச செய்தனர்.ஆரம்பமே என் முகம் பிரகாசம் அடைந்தது, உதடுகள் பொன் முறுவலிட்டன…

மின்சார விளக்குகள் பொருத்தி விடியலை  கொண்டு வந்த சக்கரவர்த்தி மற்றும் அரவிந்தன்

மின்சார விளக்குகள் பொருத்தி விடியலை கொண்டு வந்த சக்கரவர்த்தி மற்றும் அரவிந்தன்

1000 வருடங்களுக்கு முன் ராஜா ராஜேஸ்வரம் எழுப்பும் வேளையில் என்னை ஈடு படுத்தி கொண்டேன். இன்று என்னை ஓய்வெடுக்க வைத்து என் பள்ளிபடையை பராமரிக்கும், என் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கிறேன்…

ஜெயலக்ஷிமியும், சுஜாதாவும் கோவில் முழுதும் ஒட்டடை அடிக்க ஆரம்பித்தனர்.. கீழ் இருந்த வவ்வால் எச்சங்களை கூட்டி கழுவி சுத்தம் செய்து,துர்நாற்றத்தில் இருந்து என்னை விடுவித்தனர்

வவ்வால்களின் எச்சங்களை மிச்சம் வைக்காமல் சுத்தம் செய்த ஜெயலக்ஷ்மி மற்றும் சுஜாதா

வவ்வால்களின் எச்சங்களை மிச்சம் வைக்காமல் சுத்தம் செய்த ஜெயலக்ஷ்மி மற்றும் சுஜாதா

வெளியில் சென்று பார்த்தேன் வாசல் கதவுகளில் துடைத்து வர்ணம் பூசும் வேளையில் பாஸ்கரன் ஈடுபட்டிருந்தார்… உம்ம் வேலைகள் விரைவாக தான் நடந்தேறி கொண்டிருகிறது, என மனம் நினைத்தது, உடையாரே இது தான் உமது விருப்பமோ…!!!

வர்ணம் பூசும் பாஸ்கரன்

வர்ணம் பூசும் பாஸ்கரன்

அட இது என்ன…ஷான் அஸ்லாம் கான் , கார்த்தி முருகானந்தம், இந்து மனோ, விவேக், ஸ்ரீனி ஆகியோர் கோவிலை சுற்றி மூடி இருந்த அடர்ந்த புதர், முட்செடிகளை அகற்றி கொண்டிருக்கிறார்கள் வாட்டி வதைத்த கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், எனக்காக அவர்கள் செய்யும் பணியை எண்ணி பெருமிதம் கொண்டேன்,.

ஷான் அஸ்லாம் கான் , கார்த்தி முருகானந்தம், இந்து மனோ, விவேக், ஸ்ரீனி  ஆகியோர் கோவிலை சுற்றி இருந்த புதர்களை நீக்கிய பொழுது

ஷான் அஸ்லாம் கான் , கார்த்தி முருகானந்தம், இந்து மனோ, விவேக், ஸ்ரீனி ஆகியோர் கோவிலை சுற்றி இருந்த புதர்களை நீக்கிய பொழுது

அட உயரத்தில் என்ன செய்கிறீர்கள்… ஓஓ கோபுரத்தில் முளைத்த செடிகளை அகற்றி கொண்டு இருக்கிறிர்களா ???.கவனம் தேவை என் குழந்தைகளே என்று மனதில் எண்ணிக்கொண்டேன்.

1969112_10201992537280408_1615919315_n

புதர்களை நீக்கி,வர்ணம் பூசிய பின்

புதர்களை நீக்கி,வர்ணம் பூசிய பின்

இதோ வெளிபுறம் முழுதும் சுத்தம் செய்தாகி விட்டது. கோபுரத்தில் இருந்த புதர்கள் நீக்கப்பட்டு விட்டது.இனி என்ன செய்ய போகிறார்கள் எனும் ஆவலோடு அவர்களை பார்த்து கொண்டிருந்தேன். மதிய வேளையில் கடும் மூச்சி திணறல் இருந்தும் அதனை பொருட் படுத்தாமல் அனைவரையும் உற்சாக படுத்த வந்திருந்தார் வடிவேலன் பழனியப்பன் …

உடல் நிலை சரியில்லாத பொழுதும் உணர்வோடு வந்து அனைவரையும் உற்சாக படுத்திய வடிவேல் பழனியப்பன் ஐயா

உடல் நிலை சரியில்லாத பொழுதும் உணர்வோடு வந்து அனைவரையும் உற்சாக படுத்திய வடிவேல் பழனியப்பன் ஐயா

கார்த்திக் முருகானதம், இந்து மனோ இருவரும் கணேஷ் அன்பு தயாரித்த பஞ்சவன் மாதேவிச்சரத்தினை பள்ளிப்படைக்கு வரும் அனைவரும் வாசிக்கும் படி சுவரில் பதித்து கொண்டிருந்தனர்…

அறக்கட்டளை சார்பாக கோவிலின் வரலாற்றை விவரித்து வைக்கப்பட்டு உள்ள பலகை

அறக்கட்டளை சார்பாக கோவிலின் வரலாற்றை விவரித்து வைக்கப்பட்டு உள்ள பலகை

தஞ்சை மூர்த்தியும் , விக்னேஷ் மற்றும் சக்கரவர்த்தி அஸ்லாம் கான் ஆகியோர் கோவில் வெளி புறத்தில் சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தனர்.

அடடா ஒரு நாள் பொழுதில் கோவிலுக்கு மின் விளக்கு அமைக்க பட்டது,
பள்ளிப்படை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கழுவி விடப்பட்டு விட்டது,
பள்ளிப்படை பற்றிய வரலாற்று குறிப்பு அச்சிடப்பட்டு உள்ளே பார்வைக்கு வைக்கபட்டது,
வளாகத்தை சுற்றி மண்டி கிடந்த புதர் சுத்தம் செய்யப்பட்டது,
கோவில் வாசல் கதவுகள் வர்ணம் பூச பட்டது,
சிற்பங்கள் மேல் இருந்த எண்ணெய் கரைகள் சுத்தம் செய்யப்பட்டது, முக்கியமாக கோபுரத்திருக்கு பேராபத்தாய் வளர்ந்து கொண்டிருந்த செடிகள் அப்புற படுத்த பட்டன,

ஒரு குறை மட்டும் என்னை உறுத்தி கொண்டிருகையில் அதுக்கும் வழி பிறந்தது அம்மா செல்வமணி கூடையுடன் வந்தார். என்ன இது என்று யோசிக்கும் முன்பே தெரிந்து விட்டது.. பசியையும் மறந்து அயராது பராமரிப்பு பணியில் இடைவிடாது ஓடியாடி கொண்டிருந்தவர்களுக்கு ஓய்வாக உணவு பரிமாறப்பட்டது. நிறைந்தது அவர்கள் வயிறு மட்டும் அல்ல என் உள்ளமும் தான்.

உற்சாகமாக உழவாரபணி செய்துவிட்டு உணவருந்திய பொழுது

உற்சாகமாக உழவாரபணி செய்துவிட்டு உணவருந்திய பொழுது

அனைவர்க்கும் அன்போடு உணவு செய்து கொண்டு வந்து ஆசையாய் பரிமாறிய அம்மா செல்வமணி

அனைவர்க்கும் அன்போடு உணவு செய்து கொண்டு வந்து ஆசையாய் பரிமாறிய அம்மா செல்வமணி

இறுதியாக அவர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் விடுத்தேன், மாதம் ஒருமுறையேனும் என்னை வந்து பாருங்கள் குழந்தைகளே அது போதும் எனக்கு  என்று !!!

வாழ்க உடையாரின் புகழ்..
வாழ்க சோழம்..
வளர்க சோழன் குடி..

சோழர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த மாதேவி இன்று சிறு அகல் விளக்கு ஏற்ற கூட வழி இல்லாமல் இருளில் தன் காலத்தை கடத்துகிறார்..பல நாட்களில் விளக்குயேற்ற கூட வழி இல்லாமல் வெறும் மின் விளக்கு மட்டுமே எரிய விடப்படுகிறது..இது நமக்கு அடையாளமா இல்லை அவமானமா இதற்கான பதில் உங்களிடமே…

கம்போஜம் வரை தன் ஆட்சியை ஒரு குடை கீழ் கொண்டு வந்த மன்னன் ராஜ ராஜ சோழன் இன்றும் மழைக்கு கூட தாங்காத ஓலை குடிசையில் தான் உறங்கி கொண்டிருக்கிறார் என்று அறியப்படுகிறது…
மண்ணோடு மண்ணாக நாமும் இல்லாமல் நல்ல மனதோடு கூடிய மனிதானாக இருப்போம்..

ஒன்று மட்டும் நிச்சயம் “வெறும் விவாதங்கள் என்றுமே விடையாகது

தஞ்சை குழுமத்தின் இந்த முதல் பணி சிறப்பாக நடை பெற உழைத்த அய்யா கோவிந்தராஜன், வடிவேலன் பழனியப்பன், காளிதாஸ் முருகையா, விஜயகரன், சுரேஷ் குமார், செந்தில்,கணேஷ் அன்பு, கண்ணன், அன்பு அரசு அனைவருக்கு நன்றிகள்…

நன்றி
லோகேஷ்

Showing 35 comments

  • Ganesh Anbu
    Reply

    மிகவும் அருமையான கட்டுரை லோகேஷ், செல்வ செழிப்போடு தான் உயர்ந்து நின்ற மகிழ்ச்சியையும்,யாரும் கண்டுகொள்ளாமல் புதர் மண்டி இருந்த அவல நிலையின் கண்ணீரையும் பஞ்சவன் மாதேவியே விவரிப்பது போலும், நமது குழு திறம்பபட கோவிலை சுத்தம் செய்வதை எண்ணி பெருமிதம் கொண்டு பஞ்சவன் மாதேவி வாழ்த்துவது போலவும் எழுதி இருப்பது அருமையான கற்பனை.நமது நண்பர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் லோகேஷ் தொடர்து எழுது…………………………………………….

  • Bhuvaneshwaran Raj
    Reply

    great job….

  • Govindarajan Subramaniam
    Reply

    மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. வாழ்த்துகள்.

  • Senthil Ashokkumar
    Reply

    ம்ிக் அழ்க்ாக்ஒர்ு ப்ய்ண்க்க்ட்ட்ுர்ைய்ை (ப்ய்ன்(ப்ய்ன் க்ட்ட்ுர்ைய்ை) ம்ிக் அழ்க்ாக் அத்த்ெேஅந்த் த்ெேவ்ிய்ின்வ் வ்ார்த்த்ைக்ள்ாக்வ்ெே வ்ிர்ிவ்த்த்வ்ித்ம் ம்ிக் ம்ிக் அர்ய்ர்ும்ை ல்ொோக்ெேச்ஷ்.. அத்ெே ப்ொோல் உன்ங்க்ள் ப்ப்ிண்ிய்ும் ம்ிக் ம்ிக் அழ்க்ு. வ்ாழ்த்த்ய்த்ுக்ள் ந்ண்ப்ர்க்ள்ெே.

  • Muthukumar Satyamurthy
    Reply

    Congrats

  • Veena Devi
    Reply

    Hearty wishes…

  • Ganesh Anbu
    Reply

    Senthil Ashokkumar unga comment suthama ennanu theriyala

  • Malarvizhi Ramesh
    Reply

    அருமை லோகேஷ்…இவ்வளவு அழகா , தெளிவா , புது கண்ணோட்டத்தில் ….இவ்வளவு நாட்களா இந்த திறமையை எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க….நல்ல பதிவு….உங்கள் அனைவரின் பணியும் நெகிழ வச்சிருச்சு….வாழ்த்துக்கள் …:)

  • Senthil Ashokkumar
    Reply

    Ganesh Anbu editted… 🙂

  • Kannan Foruin
    Reply

    லோகேஷ் அருமையான பணி மற்றும் பதிவு ! இன்றைய இளைஞர்கள் வெறும் பேசமட்டும் தான் செய்வார்கள் என்று முதியவர்கள் சொல்லியும் முதியவர்கள் ஏதோ உளறி கொண்டிருப்பார்கள் என்று இளைஞர்கள் சொல்கிற கூற்றை உடைத்தெரிந்துவிட்டார்கள் நம் குழுவினர் . இங்கே முதுமையும் இளமையும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை உணரமுடிகிறது அருமையான முதல் முயற்சி வாழ்த்துக்கள் ….

  • Lokesh Arun
    Reply

    nandri Ganesh anbu

  • Lokesh Arun
    Reply

    Nandrigal Malarvizhi Ramesh…. 🙂

  • Lokesh Arun
    Reply

    Nandri ayya…

  • Lokesh Arun
    Reply

    Thank you Sir

  • Lokesh Arun
    Reply

    Thank you sir

  • Lokesh Arun
    Reply

    Thank you madam

  • Sudhakar Nataraj
    Reply

    சொல்லுக்கும் செயலுக்கும் வாழ்த்துகள் நண்பா 🙂

  • துரை செல்வராஜு
    Reply

    தங்களுடைய திருப்பணிக்கு தலை வணங்குகின்றேன்.. வாழ்க நலம்!..

  • Jaya Lakshmi
    Reply

    மிகவும் அருமையான பதிவு லோகேஷ். கற்பனை வளம் நேர்த்தியாகவும், உணரும் வகையிலும் உள்ளது. இந்த திரு பணியில் உங்களோடு சேர்ந்து பணி புரிந்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. அங்கு வந்து மாதேவிக்காக பணி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். அனைவருகுக்கும் உணவு அளித்த செல்வமணி அம்மாவுக்கு நன்றி. சோழன் வரலாற்றை அழகு தமிழில் எழுதி அக்கோவிலுக்கு வரும் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள உதவிய தோழர் கணெஷ்க்கு நன்றி. பணி சிறப்பாக நடைபெற உழைத்த அய்யா கோவிந்தராஜன், வடிவேலன் பழனியப்பன், காளிதாஸ் முருகையா, விஜயகரன், சுரேஷ் குமார், செந்தில்,கணேஷ் அன்பு, கண்ணன், அன்பு அரசு அனைவருக்கு நன்றிகள்.

  • Smsenthil Kumar
    Reply

    super sir

  • Lokesh Arun
    Reply

    Smsenthil Kumar thank you sir

  • Mohan Raj
    Reply

    Ponniyin selvan kattum unmaiyin urai kal meendum puthunarvu peruvathu namaku mahilchi. meendum oru murai nanun varuven

  • Anbu Arasu
    Reply

    Excellent write-up Loke… virtually u taken me there…Thanks to all Participants & Organizers ….

  • Muthu Kumar
    Reply

    WELL DONE. GREAT JOB (BOTH ARTICLE AND ACTION ). KEEP IT UP BROTHER. ALL THE BEST.

  • Viji Loganaths
    Reply

    லோகேஷ் அருமையான பணி மற்றும் பதிவு …… வாழ்த்துக்கள் …..

  • Lokesh Arun
    Reply

    Nandri Viji Loganath

  • Lokesh Arun
    Reply

    Nandri Raj

  • Musique Lounje
    Reply

    வாழ்த்துக்கள் லோகேஷ்… தங்களுக்குள் இப்படி ஒரு திறமையா ? முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் எழுதி எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டர்கள்.

    பஞ்சவன் மாதேவி தாயின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அருமை.

    << இறுதியாக அவர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் விடுத்தேன், மாதம் ஒருமுறையேனும் என்னை வந்து பாருங்கள் குழந்தைகளே அது போதும் எனக்கு என்று !!! >> மனதை தொடும் வரிகள்.

    உங்கள் கட்டுரையின் தாக்கம், நானும் மாதேவியின் பள்ளிப் படைக்கு ஒரு முறை செல்ல வேண்டும் என்ற தீரா ஆவலை ஏற்படுத்தி விட்டது. அதற்கு அவள் தான் அருள் புரிய வேண்டும்.

    உங்கள் எழுத்தப் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். எதிர்பார்க்கிறோம் 🙂

  • Lokesh Arun
    Reply

    நன்றி musique

  • Sharadha Subramanian
    Reply

    makesan sevai mahathaanathu itharkellaam kodupinai irunthaalthaan kidaikkum seithavarkal punniyasaalikal vaazha vallamudan

  • Suresh Kumar
    Reply

    எளிமையான தமிழ் லோகேஷ்…நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அழகு..யாரேனும் படித்து புரிந்து கொள்வதில் கடினம் இல்லை…உண்மை சம்பவத்தில் உங்கள் கற்பனை திறன் பாராட்டுக்குறியது…தொடந்து எழுதுங்கள்…

  • Lokesh Arun
    Reply

    Nandri Suresh Kumar 🙂

  • Lokesh Arun
    Reply

    Mikka magilchi…Nandrigal….

  • Vel Murugan
    Reply

    ha ha ha

  • arimagi prabhu
    Reply

    ungal seyal vaarththaigalaal vivarikkak kuudiyadhu alla

Contact Us

For Immediate quires Please contact here...