May 23, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பஞ்சவன் மாதேவிச்சரம் – பயண கவிதை !!!

பஞ்சவன் மாதேவிச்சரம் – பயண கவிதை !!!

18

 

அலாரம் அடித்தும் அரைமணி நேரம் அசதியாய் தூங்கும் நான்….

அன்று மட்டும் அறுபது நிமிடங்கள் முன்னர் எழுந்தது ஏனோ ???

அரை கிலோமீட்டர் அலுவலகத்திற்கு கிளம்ப அலுத்துக்கொள்ளும் நான்….

அம்பது கிலோமீட்டர் தாண்டி அசராமல் பயணித்தது ஏனோ ??

அரசு பேருந்துகளில் மட்டுமே பயணித்து பழகிய நான்,

அரை நாழிகையும் வீணாக்க விருப்பமில்லாமல்,

விரைவாக செல்ல தனியார் பேருந்தை தேர்வு செய்தது ஏனோ ???

சிந்திக்க பிடிக்காமல் சோம்பியே கிடக்கும் நான்,

அன்று மட்டும் அலைகளை போல்,அயிரம் வினாக்களுக்கு விடை தேடியது ஏனோ ???

தோழியர்யருடன் பொழுதை வீணே கழிக்கும் நான்,

உயிர் தோழியின் பேச்சில் கவனம் செலுத்தாமல் சிலாகித்து நின்றது ஏனோ???

குப்பை கூலம் என்றாலே குமட்டி ஒதுங்கும் நான் ,

வவ்வாலின் எச்சத்தையும் மிச்சம் வைக்காமல் கூட்டியது ஏனோ ?

ஏனோ ஏனோ ???என்ற என் உதடுகளின் கேள்விக்கு,

காரணம் அவள் தானோ !!தானோ !!என்று எண்ணம் முளைத்து,

அவளே தான் !!அவளே தான்!! என்று எந்தன் உள்ளம் உணர்த்தியது.

யாரவள் என்னை கொள்ளைகொண்டவள்,

பெண்களையும் தன் மேல் காதல் பார்வை வீச செய்தவள்.

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகி அவள் ,

என்னுளே வந்து உயிராய் ஆனவள்

வேறு யாரவள் பஞ்சவன் மாதேவிதான் அவள் !!!!

பஞ்சவன் மாதேவி அஸ்தி மேல் வைக்கப்பட்டு உள்ள லிங்கம்

பஞ்சவன் மாதேவி அஸ்தி மேல் வைக்கப்பட்டு உள்ள லிங்கம்

மத வேறுபாடோ, இன வேறுபாடோ இல்லாமல் ஒற்றுமையாய் அனைவரும் இணைந்த்து மனச்சோர்வோ, உடல் சோர்வோ இல்லாமல் பணி செய்தோம் அத்தேவியின் அருளாலே.

மாதேவியுடன் மகிழ்ந்து உரையாடிய உறவாடிய அத்தருணத்தின் இனிமையை உங்களுக்கு விளக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை, வாய்ப்புகளை உருவாக்கியேனும் அத்தேவியை தரிசித்து வாருங்கள்.

 

பஞ்சவன் மாதேவியை பார்த்த மகிழ்வில்

——ஜெயா

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273