October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சை ராஜராஜேச்சரம் !!!!!!!

தஞ்சை ராஜராஜேச்சரம் !!!!!!!

1
தஞ்சை பெரியகோயில் தமிழரின் பாரம்பரியத்தையும் கலை திறமையையும் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்கிறது. நான் உடையார் நாவலில்  இறுதி கட்டத்தில் ராஜராஜ சோழன் இறந்த பிறகு அவரின் ஆவி கருவூர்  தேவரை சந்திக்க வருவது போலவும்,
ப்பொழுது.,
கருவூர்  தேவர் : எங்கே செல்கிறாய் ?? .
சோழன் : “சொர்கத்திற்கு செல்கிறேன்”
 கருவூர்  தேவர் : சொர்கமா எங்கு இருக்கிறது???
 
சோழன் : “என்னுடைய சொர்க்கம் வேறெங்கு இருக்கிறது ??? என்னுடைய தஞ்சை நகரை தவிர வேறுஎங்கும் எனக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்காது என்னுடைய தஞ்சைதான் எனக்கு சொர்க்கம் நான் இந்த சொர்கத்தை விட்டு வேறெங்கு செல்வேன்!!!!”
என்று சொல்வதாக அந்த காட்சி நகரும். அதற்கு பிறகு இறுதியில் பாலகுமாரன் அவர்கள், நான் மேலே கூறியது பொய் அல்ல உண்மை, தஞ்சை பெரியகோயில் இருக்கும் வரை ராஜராஜனின் புகழ் அழியாது,நாம் அழிவோம் ஆனால் சோழனின் புகழ் அழியாது. பெரியகோவிலின் ஒரு ஒரு கல்லிலும் இன்னும் அவர் உயிர் வாழ்கிறார், தஞ்சையில் பிறக்கும் அனவைரின் உயிரிலும் அவர் இரண்டற கலந்து இருக்கிறார், போற்றுவோம் சோழனின் புகழை என்ற அந்த கதை முடியும். உண்மைதான் ஆயிரம் ஆண்டுகளாய் சோழனின் புகழை பறைசாற்றி கொண்டு தான் இருக்கிறது பெரியகோயில் இன்றும் நம் இதயத்தில் சோழன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அப்படி பட்ட சிறப்பு வாய்ந்த பெரியகோவிலை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொண்டோமா??? என்றால் இல்லை அருகில் இருந்தால் அருமை தெரியாது!!! என்பது போல் நம்மில் பலர் அதை ஒரு கோவிலை மட்டுமே பார்கின்றோம் அதை கலைக்கு ஓர் எடுதுக்காடாகவோ அல்லது தமிழரின் பெருமையாகவோ நினைப்பது இல்லை, நாம் மறந்துபோன படிக்க தவறிய அந்த வராலாற்றை இங்கே காண்போம்.
சென்ற நூற்றாண்டு வரை இத் திருக்கோவில் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டு இருக்கவில்லை.சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்த பொழுதிலும் அதிலுள்ள ராஜராஜேச்சரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்துகொள்ளப்படவில்லை.பெரியகோயில் பற்றி கற்பனை கதைகள் ஏட்டிலும் நாட்டிலும் வழங்கப்பட்டு வந்தன .
கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலச் சோழனால் கட்ட பட்டது என்றும் அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணமும் தஞ்சை புரி மகாத்மியம் என்னும் மராட்டிய மொழி புராணமும் கூறுகின்றன.ஜி யு போப் காடுவெட்டி சோழன் என்பான் கட்டினான் என எழுதுகிறார்.
கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் ராஜராஜேச்சரம்

கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் ராஜராஜேச்சரம்

1886 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹீல்ஷ் என்னும் ஜெர்மன் அறிஞரை கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது.இவர் பெரியகோயில் கல்வெட்டுகளை படி எடுத்து இதனை கட்டியவன் மாமன்னன் ராசராசனே என முதன் முதலாக கூறினார்.என்றாலும் 1892இல் வெங்கையாவால் பதிக்கபெற்ற தென் இந்திய கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில் முதல் கல்வெட்டில் இடம்பெற்று உள்ள
“பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேச்சரம்”
என்ற தொடர்தான் இதை சற்றும் ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்தது
இன்றும் கூட இப்பெருங் கோவிலின் அற்புதமான கட்டிடகலை அமைதி, விமானத்தின் சிறப்பு ,கல்வெட்டுகளால் அறியபெருகின்ற கலை அரசியல் பொருளாதார மாண்புகள்,இறையன்பு ஆகியவற்றை விட நிழல் சாயாத கோபுரம்,வளர்கின்ற நந்தி,சாரபள்ளதிளிருந்து ஏற்ற்றபெற்ற 80 டன் நிறையுள்ள ஒரே பிரமந்திரக்கல் என்பன போன்ற உண்மையற்ற புனைந்துரைகளே பாமரர்களை மிகவும் கவருகின்றன என்றால் மிகையாகாது !!!!!!!!!!!!!!!!!!!

Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273