உடையாளூரில் இருப்பது ராஜ ராஜ சோழன் சமாதி தானா என்பதை உறுதி செய்து கொள்ளவும், உண்மையை ஆராயவும்,பால் குளத்தம்மன் கல்வெட்டை பார்க்கவும் வடிவேல் பழனியப்பன் ஐயா, நான், கோவிந்தராஜன் ஐயா, திருமதி கோவிந்தராஜன் அம்மா, அன்பு அரசு, சிவா, அன்பு, ஸ்ரீனி ஆகிய 8 நபர்களும் மீண்டும் பள்ளிப்படை நோக்கி பயணம் மேற்கொண்டோம் !!!
மீண்டும் ஒரு முறை பஞ்சவன் மாதேவி கோவில் சென்று அந்த மாதரசியை வணங்கிவிட்டு உடையாளூர் புறப்பட்டோம். அன்று நான், விஜயகரன், லோகேஷ் முதல் முறை செல்லும்பொழுது இருந்த அதே பதட்டமும், ஆவலும், பூரிப்பும், எப்பொழுது உடையாளூர் வரும் என்ற ஆர்வம் இன்று அவர்கள் முகத்தில் பொங்கி வருவதை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். முதலில் பால்குளதம்மன் கோவில் சென்று விட்டு வந்து ராஜராஜ சோழனை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்தோம் .
உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி இருக்கும் இடத்திலிருந்து சிறிது துரத்தில் உள்ளது இந்த பால்குளத்தம்மன் கோவில்.வழியில் விசாரித்துகொண்டே கோவிலை நோக்கிச் சென்றோம். அப்பப்பா !!! என்ன அழகான கிராமம் ? குறுகலாக இருந்தாலும் எவ்வளவு நேர்த்தியாக அமைக்கப்பட்ட தெருக்கள் ? இங்கெல்லாம் நம் மன்னன் வந்து இருப்பாரா?? அவரின் பாதம் இந்த இடத்திலெல்லாம் பட்டிருக்குமோ ?? போன்ற சிந்தனை அலைகள் என்னை ஆட்கொண்டன. இறுதியாக மனது ஒரு முடிவுக்கு வந்தது ,அது இந்த மண்ணில்தான் நமது மாமன்னன் அமைதியாக உறங்குகிறான் அப்படி என்றால் கண்டிப்பாக இது புண்ணிய பூமிதான், என்று ஆழ் மனதில் தோன்றி அந்த தோன்றிய அந்த எண்ண ஓட்டங்களினால் உந்தப்பட்டு ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்திற்கே பயணித்து விட்டேன், காரில் சென்று கொண்டு இருந்ததை மறந்தேன். என் மன்னனுடன் தேரில் பயணிப்பது போல் என் எண்ண ஓட்டம் சென்று கொண்டு இருந்தது. பால் குளதம்மன் கோயில் வந்ததும் என் நண்பன் அன்பு அழைத்ததால் கனவுலகில் இருந்து இருந்து வெளியே வர நேர்ந்தது.
பால்குளத்தம்மன் கோவிலை பார்த்தபொழுது அது சமிபத்தில் கட்ட பட்டிருக்க வேண்டும் என்பது புரிந்தது. கோவிலின் வாயிலில் ராஜ ராஜ சோழன் சமாதி என்று சொல்லப்படும் இடத்தில இருந்த மண்டபம் இடிந்த பிறகு அங்கு இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு தூண்களும் இப்பொழுது பால்குளத்தம்மன் கோவிலின் வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது. பல்குளத்தம்மன் கோவிலில் உள்ள தூணும் அதில் உள்ள கல்வெட்டும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டு.
அந்த கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இது தான் :
1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்
இக் கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தி இரண்டாவது அட்சியாண்டான கி பி 1112 இல், சிவபாத சேகர மங்கலத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளிகை ஒன்று இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இம் மாளிகையின் பெரிய மண்டபத்தின் முன் பகுதி சிதைந்தால், பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் புணரமைத்ததாக கல்வெட்டின் முலம் அறியமுடிகிறது. அவருக்காக அவ்வூர் நாயகம் செய்து நின்ற சாத்தமங்கலமுடையான நம்பிடரான் நடாறிபுகழன் விரதங்கொண்டு செய்தார் என்ற குறிப்பும், ஈசான சிவர் அறங்காட்டிப் பிச்சர் என்பார் துணை நின்றமையும் கூறப்பெற்று உள்ளன.
இக் கல்வெட்டை ஆராய்ந்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தனது குடவாயில் சிறப்பு கட்டுரைகள் நூலில், இதில் உள்ள “எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாத சேகர தேவர் திருமாளிகை” என்ற வாசகத்தை உற்று கவனித்தால் இரு பொருள் தருவதாக அமைத்துள்ளது என்று கூறுகிறார் அவை, ஒன்று மாமன்னன் ராஜ ராஜ சோழனின் திரு உருவச்சிலை நிறுவப் பெற்ற திருமாளிகை என்பது ஒரு பொருளாகும். இரண்டு, ராஜராஜ சோழன் தங்கி வாழ்ந்த திருமாளிகை என்பது மற்றொரு பொருளாகும். எனவே எப்படி நோக்கினும் அங்கிருந்த திருமாளிகை ராஜராஜனின் நினைவு மாளிகை என்பது உறுதி என்றும், ஆகவே தான் அவர் மறைந்து (கி பி 1014) 88 ஆண்டுகள் கழித்து அம்மாளிகையின் முன் மண்டப பகுதி சிதைந்தமையால் அதை குலோத்துங்க சோழன் காலத்தில் (கி பி 1112 இல்) கச்சிராஜன் என்பவருக்காக சிவபாத சேகர மங்கலத்தை (உடையாளூர் ) நிர்வகிக்கும் நடாறிபுகழன் என்பாரும் அவருடன் ஈசான சிவர், அறங்காட்டி பிச்சர் ஆகியோரும் விரதம் மேற்கொண்டு திருப்பணி செய்தனர் என்பதை அறிய முடிகிறது என்று பாலசுப்ரமணியன் ஐயா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், விரதம் மேற்கொண்டு திருப்பணி நிகழ்ந்தது அக்கட்டிடம் (ராஜராஜ தேவர் திருமாளிகை) ஒரு புனித இடமாகவும், வழிபடக்கூடிய இடமாகவும் கருதப் பெற்றது என்பதை குறிப்பதாகும், என்று அவரின் குடவாயில் சிறப்பு கட்டுரைகள் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
தற்பொழுது உடையாளூரில் உள்ள சிவாலயத்தில் காணப்பெறும் கல்வெட்டுகளில், அவ்வூராகிய சிவபாத சேகர மங்கலத்தை ஸ்ரீமாகேஸ்வரதானம் என்றும் மாகேஸ்வர பெரும் தரிசனத்தாரால் நிறுவிக்க பெற்ற ஊர் என்பதும் கூறப்பெற்று உள்ளது. மேலும் அவ்வூரில் அபிமுக்தம் என்ற கோவிலும் இருந்ததாகக் குறிப்பும் காணப் பெறுகின்றது. மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பவர் பாசுபத சைவ மார்க்கத்தை சார்ந்த மாவிரதிகளாவர். இவர்கள் சமாதி கோவில்களான பள்ளிப்படைகளையும், பிறவற்றையும் நிருவகிப்பவர்கள் ஆவர்.அபிமுக்தம் என்பதும் மோட்சம் தரக்கூடிய கோவிலாகும். இது காசி சேத்திரத்தின் பெயரால் எடுக்க பெற்றதாகும். அங்கு வித்யாசிவபண்டிதர் என்ற சிவபாத சேகர மங்கலத்துப் பண்டிதர் ஒருவர் இருந்தார் எனவும் அறிய முடிகிறது. எனவே உடையாளூர் சோழர் காலத்தில் முக்தி அடைய விரும்புவோர் தவ வாழ்க்கை வாழ்ந்த ஊர் என்பது உறுதியாகிறது.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் கி பி 1012 இல் ராஜேந்திர சோழனுக்கு இளவரசு பட்டம் கட்டி தன் பொறுப்புகளை குறைத்துகொண்டு, கிபி 1014 இல் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவியலூரில் (திருவிசலூர்) தன் இறுதிகாலத்தில் சிவப்பேறு அடைய விரும்பிச் செய்யக் கூடிய துலாபாரதானம், ஹேமகர்ப்பதானம் போன்ற சடங்குகளை செய்துவிட்டு, பின்பு திருவலஞ்சுழியில் உள்ள சேத்ரபால தேவரை இருவரும் தங்கத் தாமரை மலர் கொண்டு வழிபட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
அந்திம காலத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றிய மாமன்னன் ராஜராஜ தேவர், தங்கள் ஆதி பூமியாகிய பழையாறையில் ஒரு பகுதியாக விளங்கும் சிவபாத சேகர மங்கலத்தில் (உடையாளூர்) இருந்த ஒரு மாளிகையில் தங்கி இருந்து வானபிஸ்தம் எனக் கூறப்பெறும் அந்திமகால ஆன்மிக வாழ்கையை மேற்கொண்டு அம்மாளிகையிலே அவர் உயிர் துறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் அங்கு உள்ள கல்வெட்டு, சிவபாத சேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாத சேகர தேவர் திருமாளிகை என்று குறிப்பிடுகின்றது. அம்மாளிகையிலே அவருக்கு பள்ளிப்படை எடுத்திருக்ககூடிய சாத்திய கூறுகளும் உள்ளன. அந்த இடமே ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்று குடந்தை என்.சேதுராமன் போன்ற ஆய்வு வல்லுனர்களும் கருதினார்கள் என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய குடவாயில் சிறப்பு கட்டுரைகள் நூலில் குறுப்பிடுகிறார்.
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இன்னமும் இந்த இடம் ராஜ ராஜ சோழனின் சமாதியாக இருக்கக்கூடும் என்று தான் நம்பபடுகிறதே தவிர முறையான அகழ்வாராய்ச்சி இது வரை நடைபெறவில்லை. முறையாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றால் இன்னும் கூடுதல் வரலாற்று உண்மைகள் வெளியே வரலாம்.ஆனால் அகழ்வாராட்சி செய்து உண்மை நிலையை கண்டறியாமல் ஒரு சில ஆய்வாளர்களும், யாரென்றே முகவரி இல்லாதவர்களும், சமூக வலைதளங்களில் போடும் செய்திகள் இருக்கின்றதே .. அப்பப்பா !!! கண்கொடுத்து பார்க்க முடியவில்லை.
ராஜராஜ சோழனின் சமாதி அங்கு இருகின்றதோ இல்லையோ, ஆனால் அங்கு எதோ ஒரு வரலாற்று உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கு ஒரு மண்டபம் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அங்கு எதோ ஒரு புரதான நினைவு சின்னம் உள்ளது என்று தெரிந்தும் அரசு ஏன் அந்த இடத்தை அரசுடைமை ஆக்காமல், அதை ஒரு பாதுகாப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்காமல் இருக்கிறது என்பதே மிகப் பெரிய கேள்வி. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆய்வறிஞர்களோ அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், முயற்சி எடுக்கும் சிலரையும் இது ராஜ ராஜன் சமாதி அல்ல என்று சண்டையிடுகிறார்கள். ராஜ ராஜா ! உன்னை பார்த்தால் படை நடுங்கியது அன்று மட்டும் தானா ??? இன்றும் நீ பலருக்கு சிம்ம சொப்பனம் தான். ராஜராஜ! எங்கே உன் சமாதியை ஆராய்ந்தால் தங்கள் பதவி போய்விடுமோ ? உயிர் போய்விடுமோ ? என்ற பயம்.
தமிழா !!! அங்கே புதைந்து கிடப்பது நம் பெருமை, நம்முடைய வரலாறு. நம் பழம்பெரும் நாகரிகத்தையும், உயரிய காலச்சரதையும், நாமே இந்த உலகிற்கு முன்னெடுத்து செல்லமால், இப்படி சண்டையிட்டால் வேறு யார் செய்வார் கள் ?? முறையாக ஆராயாமல் இப்படி சண்டையிட்டும் பயந்து ஒதுங்கியும் இருப்பதால் யாருக்கு லாபம் ??? இந்த உலகிற்கு நம் பெருமைகளை எப்படி சொல்ல முடியும் ? யார் சொல்ல முடியும் ? ஒன்று படு தமிழா, உன் இனம் காக்க !!! உன் பழம்பெருமைகளையும் புரதானங்களையும் மீட்டுக்க !!!!
இறுதியாக, இந்த இடத்தை ராஜ ராஜன் சமாதி என்று கூறிவரும் என் போன்றவர்களை எள்ளி நகையாடும் கூட்டத்தை பார்த்து ஒன்றே ஒன்று மட்டும் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன், நான் அங்கு செல்லும் பொழுது எனக்குள் அளவில்லாத இன்பமும் சொல்ல முடியாத துன்பமும் என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன். எனக்கு அகழ்வாராய்ச்சியை விட அங்கு செல்லும் பொழுது என் மனசாட்சி என்ன சொல்லியதோ அதையே நம்புகிறேன். அங்கே சென்றதும் என்னையறியாமல் நான் வணக்கம் செய்தேன். காலில் விழுந்தேன். தொட்டு வருடினேன். கட்டி அணைத்தேன். இது ஏன் ??? என்று எனக்கே புரியவில்லை. அங்கே எதோ ஒரு சக்தி என்னை ஆட்கொண்டு அவ்வாறு என்னை செய்ய வைத்திருகின்றது என்று நான் நம்புகிறேன். இந்த இடம் முறையாக அகழ்வாராய்ச்சி செய்து ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று நிருபிக்கட்டும் , அப்பொழுது உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கும் நாங்கள் தாயார்.இந்த இடம் ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று அகழ்வாராட்சியில் நிருபிக்கபடாதவரை உலகமே அதிர உரக்க சொல்வோம் இது எங்கள் மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதி என்று !!
சோழம் !!!! சோழம் !!!! சோழம் !!!!
கல்வெட்டு மற்ற ஆதாரங்களும் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் குடவாயில் சிறப்பு கட்டுரைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாலசுப்ரமணியம் ஐயாவிற்கு எனது நன்றிகள்
எனக்காக ஆதாரங்களை திரட்டி தந்து பல வரலாற்று உண்மைகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட சசிதரன் அவர்களுக்கும், எனக்கு பல செய்திகள் சேகரித்து தந்த கோவிந்தராஜன் ஐயாவிற்கும், என்னை அழைத்து சென்ற வடிவேல் பழனியப்பன் ஐயாவிற்கும், என்னோடு பயணித்த விஜயகரன் , லோகேஷ், அன்பரசு மற்ற அனைவருக்கும், பிரதி பார்த்து திருத்தி கொடுத்த அஷ்வினி மற்றும் செந்திலுக்கும், என்னுடைய அனைத்து பதிவிற்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளை சொல்லி என்னை உற்சாகப்படுத்தும் சுரேஷ் குமார் ,ஜெயலக்ஷ்மி உள்ளிட்ட அனைவர்க்கும் என்னுடைய பணிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
நன்றி
கணேஷ் அன்பு
இந்த இடம் முறையாக அகழ்வாராய்ச்சி செய்து ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று நிருபிக்கட்டும் , அப்பொழுது உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கும் நாங்கள் தாயார்.இந்த இடம் ராஜராஜ சோழன் சமாதி இல்லை என்று அகழ்வாராட்சியில் நிருபிக்கபடாதவரை உலகமே அதிர உரக்க சொல்வோம் இது எங்கள் மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதி என்று !!
சோழம் !!!! சோழம் !!!! சோழம் !!!!
அற்புதம் ….
நன்றி
http://www.youtube.com/watch?v=rrQ5qTFS-6I
எவ்வளவு தகவல்கள்… எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியது மற்றும் அதற்கான உங்களுடைய உழைப்பு அன்னைத்தும் பாரட்டதகுந்தது. “எனக்கு அகழ்வாராய்ச்சியை விட அங்கு செல்லும் பொழுது என் மனசாட்சி என்ன சொல்லியதோ அதையே நம்புகிறேன்”.இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தது. நான் அந்த புண்ணிய பூமிக்கு இன்னும் செல்லவில்லை. ஆனாலும் என்னால் உணர முடிகிறது. அது தான் நம் பொன்னியின் செல்வனின் வாழும் (மறைந்த) இடம் என்று. இவ்வளவு கருத்துக்ககளை நான்கு பகுதிகளாய் உணர்ச்சி பூர்வமாகவும் பள்ளிபடை கோவில்களின் உன்னதத்தை விளக்கும் விதமாகவும் தொகுத்து கொடுத்த கணேஷ் அன்புவிற்கு நன்றி. மேலும் இது போன்ற கட்டுரைகள் எழுத என்னுடைய வாழ்த்துகள்.
கட்டுரையை படிக்கும் போதே மனம் பள்ளிப்படை நோக்கி பயணிக்கிறது.ராஜா ராஜா சோழன் என்றாலே அனைவருக்கும் பயம்.அகழ்வாராய்ச்சி கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும்.உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஜெயா, உன் பாராட்டிற்கு, அவசியம் அங்கே சென்று வா, முடிந்தவரை இந்த மாதம் 22 ஆம் தேதி நம் தோழர்களோடு பட்டீஸ்வரம் செல்ல முயற்சி செய், என்னடைய அனைத்து பதிவிற்கும் உனது தொடர்ந்த ஆதரவிற்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
காணொளி பகிர்தமைக்கு நன்றி
மிக்க நன்றி தோழா
@Ganesh anbu anna: அருைமையான பதிவு… அகழ்வாரய்ச்சி நடத்துறதுக்கு சம்மந்த பட்ட அதிகாரிகளை சந்திச்சு N.O.T சார்பா மனு குடுக்கலாம் அண்ணா…
கணேஷ், மிக அருமையாக அமைந்திருக்கிறது இக்கட்டுரை. உண்மை நிலையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். பல செய்திகளை ஒன்றுபடுத்தி ஒப்பு நோக்கிப் பார்த்தால்.இந்த முடிவுக்கே வரமுடியும். அப்படித்தான் குடவாயில் வருகிறார். இச்செய்திகளை வரிசைப் படுத்திப் பார்ப்போம்.
1. பால்குளத்தம்மன் கோயில் கல்வெட்டு, மாமன்னனின் மறைவுக்குப்பின் எழுதப்பட்டது.
2. கல்வெட்டிருக்கும் தூண் ஒரு மண்டபத்தின் தூண்; அம்மண்டபம் திருமாளிகையின் முன் இருந்திருக்கிறது. அம்மண்டபத்தைப் பார்த்தவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.
3. அந்த மண்டபத்தில் சிலை வைக்கப்படவில்லை. பதிலாக ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது.
4. அந்த லிங்க பாணத்திற்கு ஆவுடையாரில்லை. ஆவுடையாரில்லாத பாணம் பள்ளிப்படை கோயிலில் வைக்கப்படும் மரபு உண்டு என்று பலர் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்கள். ( பஞ்சவன்மாதீஸ்வரத்தில், லிங்கத்திற்கு ஆவுடையார் உள்ளது என்பதும் தெரியும்.)
5.அரசனின் பள்ளிப் படைக் கோயிலும், அரசியின் பள்ளிப்படைக் கோயிலும், அவன் தமக்கையின் கோயிலும் அருகருகே காணப்படுகின்றன.
6.”முக்தம்”, ”மகேஸ்வர தானம்” “ எழுந்தருளி நின்ற” என்ற சொற்கள் யாவையும் இறந்தவர்களோடு சம்மந்தப்படும் சொற்கள்.
7. ஒரு மாளிகை; அதன்முன் ஒரு மண்டபம்; அங்கு ஆவுடையாரில்லாத பாணம். அந்த இடத்தில் அவன் எழுந்தருளி நிற்கிறான். அந்த மண்டபம் 88 ஆண்டுகட்குப்பின் சீரமைக்கப்படும்போது, அமைப்பாளர்கள் விரதமிருந்து அக்காரியத்தைச் செய்கிறார்கள்.
8. அந்த ஊரின் பெயர் “ சிவபதமடைந்த” சேகரனின் மங்கலம்.
சோழபுரமோ, ராஜ ராஜீச்சரமோ இல்லை.
எனவே,
ஆதாரங்களும், அவற்றின் அடிப்படையில் எழுந்த அதீதமில்லாத அனுமானங்களும் சேர்ந்த கலவையே தொல்லியல் முடிவுகள் என்ற கோட்பாட்டின்படி, இன்னொரு கொம்பன் வந்து இம்முடிவு தவறென்று உறுதிப்படுத்தும்வரை இந்த இடமே பள்ளிப் படைக்கோயில்.
இப்படித்தான், நியூட்டன், ஐன்ஸ்டீன், டால்டன், அமார்தியா சென் இவர்களின் கோட்பாடுகளும் அறிவுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. பின்னொரு நாளில் அவை பொய்யாகிப்போகலாம். அந்த அனுமானத்தைக் கொண்டு அவை தவறென்று, எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமலே இன்றைக்கே மறுப்பது அறிவுடைமையாகாது. தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ளுவதே அறிவுடைமை.
ஒன்று இருக்கிறது என்று நாம் நம்புகிறோம்.. சிலர் அது இல்லை என்று மறுக்கிறார்கள்.. இந்தியத் திருநாட்டில் எப்போதும் உள்ள நடைமுறை, 'இல்லை' என்று சொல்வோரே தமது கூற்றை நிரூபிக்க வேண்டும். சட்டப்படியும், எந்த ஒரு குற்றச்சாட்டிற்கு ஆளானவரும் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை அவரையே சாரும். ஆக, இங்கு மறைந்து (மறைக்கப்பட்டு) இருப்பது எம்மன்னன் ராஜராஜனின் சமாதி தான் என்ற நம் நம்பிக்கையை மறுப்பவர்களே அதனை நிரூபிக்கக் கடமையுள்ளவர்கள். அந்த நாள் வரும் வரை……. (வரப்போவதில்லை) எம்மன்னன் துயில்கொள்ளும் இவ்விடம் நமக்கு புனித தலமே..
இவர்கள் ஆராய்ச்சி மேள்கொள்கிறேன் என்ற பெயரில் நாம் நம்பும் எம்மன்னன் துயிலை களங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சமும், அதற்கு பதில் நம் நம்பிக்கை நம்பிக்கையாக இருந்துவிட்டு போகட்டும் அதனை நிரூபிக்க தேவையில்லை என்ற எண்ணமும் மேலிடுகிறது.
கோயிலுக்குச் செல்கிறோம்.. கடவுளை நாம் பார்த்திருக்கிறோமா??? இல்லை அந்த கடவுள் அங்கே அந்த கோயிலில் தான் இருக்கிறான் என்று யாரேனும் அகழ்வாந்து நிரூபித்தார்களா?? இல்லையே…. அக்கோயிலில் கடவுள் இருக்கிறான் என்று நம்பினோம்.. அவ்வளவே.. கடவுள் கோயில்களில் இல்லை என்று சொல்ல ஒரு கூட்டமும் இருக்கு… கடவுளே இல்லை எனச்சொல்லும் கூட்டமும் இருக்கு….
எம்மன்னனும் எங்கோ ஓரிடத்தில் ஓய்வெடுக்கிறான்.. அது இவ்விடமே என நாம் நம்ப நிறைய காரணிகள் நமக்கு இருக்கு. அங்கே கடவுள் இல்லை… நம் 'கடவுள்' ராஜராஜன் இல்லை என யாரேனும் நிரூபிக்கும் அந்த நாளில், நீங்கள் சொன்னது போல அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டுக்கொள்வோம்… அது வரை……
இது எம் மன்னன் இளைப்பாறும் இடம்…
இது எம் மன்னன் ஓய்வெடுக்கும் இடம்…
இது எம் மன்னன் துயில் கொள்ளும் இடம்…
இதுவே மாமன்னன் ராஜராஜனின் சமாதி….. !!!
சோழம்… சோழம்… சோழம்…
(ராமனுக்கு அணில் உதவியது போல்… என்றோ நான் செய்த சிறு திருத்தத்திற்காக என்னை குறிப்பிட்டு, என்னையும் இந்த வரலாற்று சாண்றில் சேர்த்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள் கோடி நண்பா.)
எனக்கு அகழ்வாராய்ச்சியை விட அங்கு செல்லும் பொழுது என் மனசாட்சி என்ன சொல்லியதோ அதையே நம்புகிறேன். சரியான வார்த்தை கணேஷ்…
எப்படியோ இந்த இடம் ராஜராஜனுக்குச் சம்பத்தப்பட்ட இடமாக ஆகிவிட்டது…அது உண்டு இல்லை என்ற விவாதத்தை விட, அவர் சுவாசம் பயணிக்கின்ற இடத்திற்கு மரியாதை செலுத்துவதே உண்மையான சோழனின் கடமை என்றே கருதுகிறேன்.
அகழ்வாராய்ச்சி தன் கடமையை பொறுமையாய் செய்யட்டும்..மனசாட்சி என்ன சொல்கிறதோ அதையே நாம் செய்வோம்..
அது ராஜராஜனின் சமாதி இல்லை என்று நிருபித்தால் கூட யார் காலிலும் விழ அவசியம் இல்லை கணேஷ்.. இது உங்கள் கட்டுரை, உங்கள் அனுபவம், உங்கள் கருத்து, உங்கள் உணர்வு…சரியோ, தவறோ அதை மதிக்க வேண்டுமே தவிர உதாசின படுத்தக் கூடாது..
உங்கள் கருத்தை மனதார நான் மதிக்கிறேன்.. இது போல் பல கட்டுரையை எதிர்பார்கிறேன்…என்றும் ஒரு ரசிகனாய்….
நன்றி Senthil Ashokkumar மன்னனின் துயில் கலையாமல் அகழ்வாராட்சி நடக்க முயற்சிப்போம்,சிறியதோ பெரியதோ அது உதவி தான், உங்களுக்கு அது சிறியதாய் தோன்றியிருக்கலாம், எனக்கு அது பெரியதாய் தெரிந்ததால் உங்களுக்கு நன்றி சொல்வது என்கடமையாக நினைத்தேன்
க்க நன்றி Suresh Kumarமனசாட்சியை நம்புவோம்,அகழ்வாராட்சி விரைவில் நடந்து நம் மனசாட்சி சொல்லியதை அகழ்வாராட்சி உறுதி படுத்தி நம் மன்னன் அந்திம காலத்தில் வாழ்த்த புண்ணிய பூமியில் அவருக்கு ஒரு நினைவிடம் அமையும் என நம்புவோம்
மிக்க நன்றி ஐயா,ஆய்வு செய்யாமலே இல்லை என்று மறுத்து மடத்தனம்,அகழ்வாராட்சி நடக்கும் என நம்புவோம்.அருமையான விளக்கம் ஐயா, நன்றி
நன்றி தம்பி,அவசியம் அதற்கான முயற்சி எடுப்போம்
மிக மிக அருமையான பதிவு கணேஷ் அன்பு…
வெறும் வார்த்தைகளால் வாழ்த்த முடிய வில்லை…
நீங்க கூறிய அனைத்தும் உண்மையே… மறுபதற்கு வழி இல்லை..
தமிழ் வளர்கின்றது…மிக்க மகிழ்ச்சி… தாய் பாலுக்கு நிகரான தமிழ் மொழி மூலமாகவே நீங்களும் பதிந்தீர்கள் உங்களுக்கு வரும் வாழ்த்துகளும் பதிவிடபடுகின்றது ….
பொன்னியின் செல்வன் , உடையார் படித்த அனைவரும் கற்பனையிலேயே வாழ்ந்த இடங்கள் உடையாளூர் பழையாறை… நாம் அந்த கதைகளை படிக்கச் வில்லை… அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு சோழ குடியாக தானே மாறினோம்…
இது சோழன் பிறந்த மண்…வாழ்ந்த மண்… அங்க நாம் எடுத்து வைத்த ஒரு ஒரு அடியும் சிலிர்க்கும்… இது அங்கு வரும் அனைவருக்குமே பொருந்தும்…. வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வணங்க வேண்டிய இடங்கள்…
முறையான அகழ்வாராய்ச்சி தேவை… அங்கு சமாதி இருந்தத இல்லையா என்று விவாதம் செய்ய தேவை இல்லை… அனால் ஒன்று மட்டும் நிச்சயம் … கண்டிப்பாக அங்கு மிக பெரிய உண்மைகள் உறங்கி கொண்டு தான் இருக்கின்றன … வெளி கொணர வேண்டிய பொறுப்பு நம் அனைவர்க்கும்…
கணேஷ் வரிகளில் முதிர்ச்சி தெரிகின்றது…வாழ்த்துக்கள் ….
balakumara udaiyar navlil sonnathai thiruma patithathil sonthozham ungalukku vantha unarvugal mun piravil raja rajanodu thodarbu irrunthu irukkum
உங்களின் தமிழ் உணர்வை பார்க்கும்போது புல்லரிக்கின்றது….
உங்கள் கருத்திற்கு நன்றி, நாம் தமிழர்கள் என்ற உணர்வும் தமிழ் ஆர்வமும் ஒரு ஒரு தமிழனுக்கும் இருக்கவேண்டும்
உங்கள் கருத்திற்கு நன்றி, தமிழ் குடியில் பிறந்த ஒரு ஒரு தமிழனும் முப்பிறவியில் என்ன இப்பிறவியிலும் ராஜ ராஜனோடு தொடர்புடையவர்களே
இந்த ஊரின் வரலாறு சுற்றி உள்ள கோவில்களில் தான் புதையுண்டு கிடக்கிறது.
திருமலை ராஜன் ஆறு ,
முடிகொண்டான் ஆறு ,
அரசலாறு ,
இந்த ஆற்றுக்குள் புதைந்து கிடக்கும் சிலைகள் / கதைகள் / உண்மைகள் பல ….
இந்த ஆற்று கரைகளுக்கு இடையில் தான் இந்த சோழர் வரலாறு தொடங்கப்பெற்றது !
ராஜராஜ சோழன் பிறந்து , வளர்ந்த ஊரில் , அவ்வீரனது சமாதி இருப்பதில் எந்த ஐயமும் இல்லை !
6ம் , 8ம் , 10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கற்கோவில்களை இந்த ஊரில் உங்களால்கான இயலும் !
ஒருவன் பிறந்த ஊரில் தானே அவனுடைய சமாதி இருக்க முடியும் !
இந்த கோணத்தில் பார்த்தாலும் கும்பகோணத்தில் தான் முடியும் இதன் விடை .
அருமையான விளக்கம்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே
அருமையான பதிவு கணேஷ் !! ஆஹா .. அற்புதம்….. உங்கள் பயணத்தில் நாங்கள் பங்கு பெறாவிட்டாலும், உங்களோடு பயணம் செய்த மகத்தான அனுபவம். ஒரு தேர்ந்த எழுத்தாளனை போல நேர்த்தியான வகையில் உணர்ச்சிகளை கொட்டி விவரித்து உள்ள விதம், உங்கள அபாரமான திறமையை காட்டுகிறது.
உங்கள் இந்த பயணக் கட்டுரையின் மூலம் சோழ தேசம் பற்றியும், மாமன்னன் ராஜா ராஜன் பற்றியும் மேலும் பல அரிய தகவல்களை அறிந்தோம். வியந்தோம். மாமன்னன் ராஜ ராஜனின் சமாதி கேட்பாரற்று கிடப்பது வேதனைக்குரிய விடையம்.
உண்டு இல்லை என்று வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்காமல் துரிதமாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து, அவ்விடத்தை பரிசோதித்து, அங்கே ஒளிந்து கொண்டு இருக்கும் உண்மைகளை உலகின் பார்வைக்கு கொணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கணேஷ் , உங்கள் எண்ணங்களுக்கு என் மனமார்ந்த ஆதரவுகள். உங்கள் எழுத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகளுக்கு என் பிரார்த்தனைகள் !!!
பயணம் தொடரட்டும், உறங்கி கொண்டு இருக்கும் மேலும் பல உண்மைகள் தோண்டி எடுக்கப் படட்டும். சோழம் சோழம் சோழம் !!!
மிக்க நன்றி Musique Lounje உங்களின் பாராட்டுகளுக்கும் பிராத்தனைகளுக்கும் , என்னுடைய இந்த நான்கு பாக பயண கட்டுரையும் சிறப்பாக வந்ததிற்கு நீங்களும் ஒரு காரணம்.பிழை பார்த்து திருத்திக் கொடுத்தமைக்கு என்னுடைய நன்றிகள் தோழி
தோழா உங்கள் பயணக் கட்டூரை மிக அருமையாக இருந்ததது முன்பு ஒரு பொழுதில் நீங்கள் சொன்ன ஊர்களிலெல்லாம் என் பணி நிமிர்த்தமாக சுற்றி இருக்கிறேன் அப்போது உணரவில்லை நானும் ஒரு சோழர் குடியில் பிறந்தவன் என்கிற மனநிலையை .
இப்போது உணர்கிறேன் உங்களால் உங்களின் எழுத்துகளின் மூலமாக மிக அருமை…..:)
"அன்பேசிவம்" படத்தில் கமலுக்கும் மாதவனுக்கும் ஒரு விவாதம் : சோவியத் யூனியன் என்கிற நாடே இன்று சுக்குநூறா ஒடஞ்சு போச்சு சோவியத் யூனியன் இல்லனா கம்யூனிஸமே இல்லன்னுதான அர்த்தம் இது மாதவன் பதில்.
அதற்க்கு கமல் சொல்வார் கம்யூனிஸம் ஒரு உணர்வு இப்ப தாஜ்மஹால் இல்லனா காதலே இல்லன்னு ஆய்டுமா என்பார் மிக அருமையான விவாதம் அது .
அதே போல் அன்று அங்கு இருந்த மாளிகை இன்று இல்லாமல் போனாலும் நமக்குள் உணர்வோடு கலந்து போயினான் எங்கள் சோழன் இதுவே உண்மை……
மேலும் உங்கள் எழுத்துப் பணியும்* தொடர வாழ்த்துக்கள்
தோழமையுடன் உங்கள் தோழன்
ப .கண்ணன்
மிக்க நன்றி தோழரே உங்கள் கருத்துக்கு, அவசியம் அந்த பள்ளிப்படை கோவில்களுக்கு சென்று வாருங்கள்
Ganesh Anbu அடுத்தமுறை வரும் பொது கண்டிப்பாக சென்று வருகிறேன் தோழரே …
சென்ற வருடம் என் முக நூலின் முகப்பில் ராஜராஜ சோழனின் சமாதி பற்றிய செய்தி ஒன்றை படித்தேன். என் முக நூல் காலக்கோட்டில் பகிர்ந்தேன். அத்தோடு மறந்தேன். இக்கட்டுரையை படிக்கும்போது உடையாளூருக்குச் சென்று சோழ வாசம் கலந்த காற்றை சுவாசித்து இராச ராசா சோழனை அருளி வணங்கவேண்டுமென்று ஏங்குகிறேன். இதுவரை நான் சோழ வம்சத்தை சேர்ந்தவள் என்று அறிந்தேன். இன்று பெருமிதம் கொள்கிறேன். இராச ராசா சோழனை பற்றி பல வலைப்பதிவுகளை படிக்கிறேன். அவன் கொள்கைகளை எண்ணி மெய் சிலிர்க்கிறேன். இப்போது கேட்பாரற்று கிடக்கிறானே என்று மனம் கலங்குகிறேன்.
தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் பாதுகாத்து வளர்த்த இராச ராசனின் சமாதியை காப்பாற்ற வக்கில்லாத அரசு..!!
அரசியல் வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் மாடமாளிகை போன்ற சமாதிகளும், சிலைகளும், கோயில்களும் கட்டும் சாக்கடை நாம் வாழும் சமூகம்..!!
அகழ்வாராய்ச்சி நடத்தி அது சோழன் சமாதியே என்று நிரூபணம் ஆனாலும் .அதை அரசு மூடி மறைத்தாலும் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. சோழம் பொய்யாகாது. இப்போது நடக்கும் அரசியல் கூத்தில் சிக்கி சீரழியாமல் சோழன் உறங்கட்டும். வாழும் வரை சோழனை போற்றுவோம். அடுத்த சந்ததியினருக்கும் சோழனின் பெருமையை உணர்த்துவோம்.
படிப்போரையும் உடன் பயணிக்க செய்கிறது இந்த கட்டுரை. நல்ல தமிழ் நடை, ரசனை, உணர்ச்சி வெளிபாடு. என் தமிழ் ஆர்வத்தையும், சோழத்தின் மீதான பற்றையும் ஊக்குவித்தமைக்கு கோடி நன்றிகள் சகோதரரே..!! மேலும் பல பதிவுகளையும், அனுபவங்களையும் பகிரவும்..!!
வாழ்த்துக்கள்..!!
உங்கள் வார்த்தைகளிலே சோழன் மீது உங்களுகிருக்கும் பாசமும், அவரின் இன்றைய நிலை கண்டு வரும் கோவமும் நன்றாக புரிகிறது.காத்திருப்போம் என்றேனும் ஒரு நாள் மாற்றம் வராதா என்று…..உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி
தமிழன் பெருமை புதைந்து இருப்பது நன்று …. என் என்றால் அதையும் நாம் கேடு கேட்ட அரசு மற்றும் அரசியல் புள்ளிகள் மென்று தின்று விடுவார்கள்.. ஒரு நாள் வரும்…. சனி அன்று ஒழியும் …. நம் பெருமை உலகம் அறியும் வரை உயிரொடு இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
உன் கருத்தை நம் தமிழ் தோழர்கள்
படித்து உணரவேண்டி உள்ளது தோழி.
மாமன்னன் ராஜராஜன் பள்ளிபடை கோவிலுக்கு எப்படி போவது தோழரே??
கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற ஊரில் உள்ளது,
ராஜராஜன் வாழ்ந்த வரலாற்று தடயங்களையம் அவரின் நினைவுகளையும் நினைக்க வைத்ததற்கே கணேஷ் அன்புக்கு நன்றி ஆயிரம்
Great work. By the way where is panchavanmadevi kovil pls
nandri 🙂
Its in patteswaraam
Ganesh Anbu Thank you very I will try to visit as soon as possible.
மாமன்ன கரிகாலன், ராஜராஜன் நினைவாக 15/03/18 அன்று அதாவது நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்த என் மகனுக்கு “சோழன்” என்றே பெயரிட்டுள்ளேன்…
கணேஷ் அன்பு அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த 26 – 8 – 2018 அன்று உடையாளூர் சென்று, ராஜராஜ சோழன் நினைவிடத்தில் சுமார் நான்கு மணி நேரம் அமர்ந்து தியானம் செய்தேன். வணங்கினேன். அன்றைய தினம் ஆவணி மாதம், பௌர்ணமி, மாமன்னனின் ஜென்ம நட்சத்திரமான சதயம். உங்களுக்குள் கிளர்ந்த… உள்ளத்தில் எழுந்த அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் உண்மையே. என் மனசாட்சியும் அதையே சொல்கிறது. யார் என்ன சொன்னாலும், அங்குதான் தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன் இருக்கிறான். பால்குளத்தி அம்மன் கல்வெட்டு, குடந்தை சேதுராமன் ஐயா அவர்களின் ஆய்வு, குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் ஆய்வு, உங்களின் ஆய்வு அனைத்தும் உண்மை. இதை நான் ராஜராஜன் சமாதியில் அமர்ந்தபோது உணர்ந்தேன். மற்றவர்கள் எதைப்பற்றி சொன்னாலும் அதைப்பற்றிய ஆதாரங்களை தரும் வரை, வெறும் வெற்று சொல்லாடல்களாகவே கொள்வோம். மிக்க நன்றி. ராஜராஜன் நமது தாத்தா. தாத்தாவின் இருப்பிடம் நம்மை போன்ற பேரன்களின் உணர்வுகளுக்கு மட்டுமே தெரியும். மிக்க நன்றி.
கணேஷ் அன்பு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். உங்கள் மனதில் என்ன நினைவுகள், உணர்வுகளுடன் நீங்கள் நமது முப்பாட்டன் நினைவிடம் அமைந்துள்ள உடையாளூருக்கு சென்றீர்களோ, அதே உணர்வுடன் நானும் கடந்த 26 – 8 – 2018 அன்று சென்றேன். ஆனால், அன்று ஒரு சிறப்பான நாள்… அதாவது ஆவணி மாதம், பௌர்ணமி, மாமன்னன் ராஜராஜனின் சதய நட்சத்திரம். அன்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் மாமன்னன் நினைவிடத்தில் அமர்ந்து வணங்கினேன். குடந்தை சேதுராமன், குடவாயல் பாலசுப்ரமணியன், பால்குளத்தி அம்மன் கோவில் கல்வெட்டு, உங்கள் மனசாட்சி படியான ஆய்வு அனைத்தும் நூறு விழுக்காடு உண்மை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும். அந்த இடத்தை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த அரசு மறுப்பது ஏன்? என்பதற்கு நீங்கள் கூறும் காரணமும் சரியானதே.
அன்பார்ந்த சகோதரரே, அற்புதமான பதிவுகள். எம் மாமன்னன் இராஜராஜனை உயிரினும் மேலாக நேசிப்பவன். தங்கள் பாதங்களை வணங்குகிறேன். சீர் கெட்டு, சிறப்பு கெட்டு வாழும் நம் தமிழர்கள், ஜாதி வெறிப் பிடித்து அலைந்து, ஒற்றுமையின்றி வாழ்வதை எண்ணும் போது, கண்கள் மற்றும் இதயத்தில் இரத்தம் வடிகின்றது.