October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் அளித்த தண்டனை !!!!!!!

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் அளித்த தண்டனை !!!!!!!

13

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது இது தற்போதைய காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது.. அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்

“ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம் பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர”

1660752_646122532089900_1915400082_n

Photo courtesy : Sasi Dharan

1480672_807053609321273_1296405503_n

Photo courtesy : Sasi Dharan

ராஜராஜ சோழன் பதிவியேற்ற இரண்டாவது ஆண்டில்  ,உடையாற்குடிக்கு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார்.இதன் கருத்து “வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேறவேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு.

இந்த கல்வெட்டின் மூலம் யார் யார் கொலையாளிகள் அவர்களுக்கு என்ன தண்டனை என்பது மட்டுமே அறியமுடிகிறது .  ஆனால் இதற்கு எப்படி திட்டமிட்டார்கள், எப்படி செய்தார்கள் இதனால் யாருக்கு நன்மை ??? காட்டுக்குள் பதுங்கி நிராயுதபாணியை நின்ற வீரபாண்டியனின் தலையை வெட்டி அரண்மனை வாசலில் அழுகும்வரை வைத்தால்  நடந்ததா அல்லது சுந்தர சோழனுக்கு பிறகு அரச உரிமைக்கு உத்தமசோழன் என்னும் மதுராந்தகனுக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று நிகழ்ந்ததா ?? இல்லை  வேறு பிற காரணங்களா என்று தெளிவான விடை இல்லை . கொலைக்கான காரணம் என்ன என்பதை அறிஞர்கள் ஒரு யுகத்தின் அடிப்படையிலே சொல்கிறார்களே தவிர கொலைக்கான காரணம் என்ன என்பதற்கு எந்த சான்றும் இல்லை ஆனால் இந்த கல்வெட்டின் மூலம் நாம் ஒன்று அறியலாம் ஆதித்தகரிகாலன் போரில் மரணமடையவில்லை அவனை நயவஞ்சகமான சூழ்ச்சியால் நேருக்கு நேர் நின்று சண்டையிடாமால் கோழைத்தனமாக இந்த உடையார் குடி அந்தணர்கள் கொன்று இருகின்றனர் என்று மட்டும் சொல்லலாம். கொலைக்கான காரணம் மற்றும் திட்டமிடல் பற்றி ஆயிரம் வருடமாக அவிழாத முடிச்சி இனிவரும் வரும் காலங்களிலாவது சான்றுடன் நிருபிக்க படுகிறதா பாப்போம்

 

“தஞ்சை மைந்தன்” கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273