சென்ற ஆண்டு “உடையார்” நாவலை படித்து முடித்தவுடன் எனக்குள் தோன்றிய எண்ணங்கள் இரண்டு. அது, உடையார் நாவலில் ‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் ஐயா, “நீங்கள் பெரியகோவில் செல்லும் பொழுது இது ராஜராஜன் நடந்த இடம் அதில் நாமும் நடக்கிறோம் என்று பெருமிதம் கொள்ளுங்கள். சந்திர சூரியன் உள்ளவரை நிலைத்து நிற்கப்போகும் இந்த கோவிலில், ராஜ ராஜ சோழன் இந்த கோவில் கட்ட உதவி புரிந்த அனைவரின் பெயரையும் கல்வெட்டில் பதிய உத்தரவிட்டார்” என்றும் அக்கல்வெட்டில் ராஜராஜரின் பெயரை பார்த்து தடவி உளம் மகிழ்ந்தார் என்றும், “நீங்கள் தஞ்சை கோவிலுக்கு செல்லும் பொழுது அவசியம் அவர் தடவி மகிழ்ந்த அவரின் பெயரை நீங்கள் தடவி பாருங்கள். அது நமது மாமன்னனின் கைகள் பதிந்த இடம் அவர் தொட்ட இடத்தை நாமும் தொட்டு மகிழ்வோம், அவரின் அருள் பெறுவோம்” என்றும் கூறியிருந்தார்
மேலும், தளிச்சேரி பெண்ணாக பிறந்து ராஜராஜ சோழனின் மனைவிகளுள் முக்கியமானவராக கருதபடுபவரும் ராஜேந்திர சோழனை வளர்த்த தாயும் பெண் தெய்வமாக போற்றப்பட்ட பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோவிலை தரிசித்து அங்கு ஒரு விளக்குபோட்டு வாருங்கள் என்றும் சொல்லி இருந்தார்.
உடையார் நாவலை முடித்தவுடன் நான் பெரிய கோவிலுக்கு சென்று உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜ தேவர் என்று அவர் பெயர் குறுப்பிட்டு உள்ள கல்வெட்டை தொட்டு அகம் மகிழ்தேன்..
ராஜ ராஜ சோழனின் பெயரை தொட்டு பரவசமடைந்த பொழுது எழுதிய கட்டுரை இந்த லிங்கை சொடுக்கி பார்க்கவும்http://thanjaimainthan.blogspot.in/2012/03/blog-post.html . பின்னர் மறுநாள் பட்டிஸ்வரம் சென்று பஞ்சவன்மாதேவியின் கோவிலை தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே விசாரித்தும் யாருக்கும் தெரியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பினேன்.
அடுத்த சில தினங்களில் சவுதி சென்றுவிட்டேன். நான் சவுதி சென்ற பிறகு இந்த 9 மாதங்களில் இருமுறை உடையார் நாவலை படித்துவிட்டேன். எத்தனை முறைப் படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு அந்த நாவல். திரும்ப திரும்ப படித்து படித்து பஞ்சாவன்மாதேவி என்னுள் புகுந்து எதோ செய்துகொண்டே இருந்தாள். மீண்டும் ஊருக்கு வரும்போது பஞ்சவன்மாதேவியை பார்க்காமல் வரக் கூடாது என்று வைராக்கியம் வைத்துக்கொண்டேன். நான் எண்ணியது போல், பிப்ரவரி 10ஆம் தேதியில் இருந்து 10 நாட்கள், என் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக விடுமுறை கிடைத்தது. இச்சமயம் சவுதியில் கிளம்பும் பொழுதே எப்படியேனும் பஞ்சவன்மாதேவியை பார்த்துவிட்டுத்தான் வருவது என்று தீர்மானித்தேன்.
அதேபோல் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது இதை நான் தெரிவிக்க, ஞாயிறு காலை சரியாக 6 மணிக்கு தஞ்சையில் இருந்து கிளம்புவது என்று தீர்மானித்தோம். அப்பொழுது நேரம் சனிக்கிழமை சரியாக இரவு 11 மணி. காலை சரியாக 6.30 மணிக்கு நண்பர் லோகேஷ் தன் காரில் என் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து இருவரும் நண்பர் விஜயகரன் வீட்டுக்கு சென்று அவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் மூவரின் பயணம் இனிதே தொடங்கியது.
இம்முறை எப்படியாது பஞ்சவன்மாதேவியை தரிசித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் உள்ளே ஓடிகொண்டே இருந்தது. நண்பர் சசிதரன் அவர்களை தொலைபேசியில் அழைத்தேன் அவர் அழைப்பை எடுக்கவில்லை. வார விடுமுறை நாள் ஆகவே தூங்கிகொண்டு இருக்கலாம் என எண்ணி மீண்டும் ஒரு 15 நிமிடம் கழித்து தொடர்புகொண்டேன். அவர் அழைப்பில் வந்தார் நான் மன்னிக்கவும் சசி வார விடுமுறை நாளில் உங்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டேனா ??? என்றேன். மறுமுனையில் அவர் தந்த பதில் எனக்கு வியப்பை தந்தது. அவர் சொன்னார், “இல்லை நான் பாலகுமாரன் ஐயாவுடன் கங்கைகொண்ட சோழபுரம் சென்றுகொண்டு இருக்கின்றேன். தற்பொழுது நெய்வேலியில் இருக்கின்றோம்” என்றார். பிறகு சசிதரனிடம் நண்பர்களுடன் நான் பட்டீஸ்வரம் சென்று கொண்டு இருப்பதைத் தெரிவித்து, பஞ்சவன்மாதேவி கோவிலுக்கு எப்படி செல்வது என்று கேட்டேன். அவர் வழி கூறினார். பிறகு அய்யப்பன் என்பவரது தொலைபேசி எண்ணைத் தந்து, “இவரை முன்னரே தொலைபேசியில் அழைத்து உங்கள் வருகையை தெரியப்படுத்துங்கள். அவர் கோவிலை திறந்துவைத்து உங்களுடன் வந்து பூசை செய்வார்” என்றார்.
பிறகு திரு.அய்யப்பனைத் தொடர்புகொண்டு எங்கள் வருகையை தெரியப்படுத்தினோம். சிறிது நேரத்தில், பட்டீஸ்வரம் எங்களை அந்த காலைவேளையில் சில்லென்ற காற்றுடன் வரவேற்றது ..
குளுமையான அந்த பனிகாற்றுடன் பட்டீஸ்வரத்தில் நுழைந்தோம் பூ, எண்ணை முதலிய பூசை சாமான்களை வாங்கினோம் பிறகு சசி தரன் கூறியபடி எம் ஜி ஆர் சிலையை தேடினோம் அந்த சிலையை ஒட்டி ஒரு சாலை சென்றது பிறகு அந்த சாலைதான் என்று உறுதிபடுத்திகொள்ள ஒரு தேநீர் கடை காரரிடம் கேட்டோம் அவருக்கு பஞ்சவன்மாதேவியை பற்றி ஒன்றும் தெரியவில்லை. பிறகு ராமசாமி கோவில் அருகில் மசூதிக்கு பின்புறம் உள்ள சிவன் கோவில் என்றோம் அவருக்கு ராமசாமி கோவில் தெரிந்தது அவர் இன்னொரு வயதானரிடம் கேட்டார் அவர் இது தான் அந்த சாலை ராமசாமி கோயில் முதலில் வரும் பிறகு அதன் அருகில் ஒரு சாலை இடதுபக்கமாக திரும்பும் அந்த சாலை முகப்பிலே பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோவில் என்று ஒரு சாலை வழிகாட்டி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
விவரத்தை கேட்டறிந்தவுடன் மீண்டும் எங்களின் பயணத்தை தொடங்கினோம், ஒரு வழியாக நாங்கள் பலநாள் பார்க்க துடித்த இம்மண்ணில் வாழ்ந்த அந்த பெண்தெய்வம் பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை ஆலயத்தை அடைந்தோம். நாங்க அங்கு சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சசிதரன் கூறிய அந்த ஐயப்பன் என்ற அந்த நபர் கோவிலை நோக்கி வந்தார். வந்தவரிடம் பூக்களை கொடுத்தேன் பஞ்சவன்மாதேவியின் சிலைக்கு சூட்ட சொல்லி ஆனால் அவர் அங்கு உள்ள எதோ ஒரு சிவன் சிலைக்கு மாலையை அனுவிக்க முற்பட்டவரை நான் தடுத்து, ஐயா இதை நாங்கள் பஞ்சவன்மாதேவிக்காக வாங்கி வந்தோம் அந்த மங்கையர்கரசிக்கு சூட்டவும் என்றேன். அவர் பொறுமையாக ஒரு விவரம் சொன்னார் நான் பஞ்சவன்மாதேவிக்கு தான் சூட்டுகிறேன் என்றார்.” பள்ளிப்படை கோவில் என்பது இறந்தவரின் அஸ்தியை வைத்து அதற்குமேல் லிங்கத்தை வைத்து கட்டப்படும் கோவில் தான் பள்ளிப்படை கோவில்” என்றார். அப்பொழுது தான் எனக்கே தெரிந்தது பள்ளிப்படை கோவில் என்றால் என்ன எப்படி அமைப்பார்கள் என்ற விவரம் பின்னர் மலர் சூடினார் கற்பூரம் காட்டினார்.
பிறகு ராஜேந்திரனின் கல்வெட்டை தேடினோம் ஒரு இடத்தில கங்கைகொண்ட சோழபுரத்து பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை என்ற சில வார்த்தைகளையும் உடையார் ஸ்ரீ ராஜேந்திர தெவர் என்ற நமது வீர மன்னனின் பெயரையும் கண்டறிந்தோம்,
பிறகு அங்கு உள்ள ஒரு இடத்தில் “இது குந்தவை நாச்சியாரின் சமாதி உள்ள இடம்” என்று எழுதப்பட்டு இருந்தது அதை பற்றி அந்த அய்யபனிடம் விசாரித்த பொழுது சில வருடங்களுக்கு முன் அங்கு ஒரு மண்டபம் இருந்ததாகவும் மிகவும் சிதிலடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் அதை இடித்துவிட்டார்கள் என்றும் சொன்னார்.
இந்த குந்தவை நாச்சியார் சமாதி பற்றி சசிதரன் மற்றும் பாலகுமாரன் ஐயாவிடம் விசாரித்தபொழுது அந்த சமாதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் கிடைத்தது. உண்மையோ பொய்யோ இருப்பதாக சொல்லபடுகிறது ஆகவே குந்தவையின் சமாதி என்று எழுதி இருக்கும் இடத்திலும் ஒரு விளக்கு ஏற்றினோம்.
பிறகு அந்த அய்யபனிடம் ஏன் கோவில் இவ்வளவு புதர் மண்டி கிடக்கிறது இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் தானே உள்ளது???? அரசு இந்த கோவிலுக்கு ஏதும் நிதி ஒதிகவில்லையா???? என்று கேட்டோம். அந்த அய்யப்பன் கூறியது, நான் இந்த கோவிலை கடந்த 30 வருடமாக பராமரித்து வருகிறேன் அரசிடம் இருந்து எந்த உதவியும் இல்லை சமிபத்தில் அரசு இந்த கோவிலை அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு சரி எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் இந்த கோவிலுக்கு என்று ஒரு அர்ச்சகரை நியமித்து உள்ளது ஆனால் அந்த அர்ச்சகர் ஒரு நாளைக்கு ஒரு முறை வருவதே அரிது என்றும் கூறினார்,
ஆடல்,பாடல், போர் என அனைத்திலும் சிறந்து விளங்கியவள் ராஜேந்திர சோழனின் வளர்ப்புத்தாய், மூலிகை உண்டு தனக்கு பிள்ளை பாக்கியமே வேண்டாம் என்று ராஜேந்திர சோழனையே தன் மகனாக பாவித்தவர், பெரிய கோவில் எழுப்பியதில் ராஜ ராஜ சோழனுக்கு உறுதுணையாக நின்றவள்,
இப்படி பட்ட சிறப்புவாய்ந்த இந்த பெண்தெய்வம் இப்படி கேட்பாடற்று கிடப்பதை எண்ணி மனம் உறுத்துகிறது ஆகவே தான் கடந்த 30 ஆண்டுகளாக இந்த கோவிலை நான் பராமரித்து வருகிறேன் என்னிடம் காசு இருக்கும் பொழுது எண்ணெய் வாங்கி வந்து விளக்கேற்றுவேன், இல்லை என்றால் வெறும் மின்விளக்கை மட்டும் போட்டுவிட்டு சென்று விடுவேன் என்று கூறினார். நாங்கள் பணம் தர முற்பட்டபொழுது எனக்கு பணம் வேண்டாம் பொருளாய் கொடுங்கள் குறிப்பாக எண்ணெய் வாங்கி தாருங்கள். ஒரு 5 லிட்டர் வாங்கித் தந்தால் ஒரு மாத காலம் நான் நிம்மதியாக விளக்கேற்றுவேன் என்றார்.
பிறகு நாங்கள் அவரையே அழைத்துக்கொண்டு போய் எண்ணெய் வாங்கி கொடுத்து அவரை மீண்டும் வீட்டில் விட்டோம். அப்பொழுது திடீரென்று ஒரு சிந்தனை. நாம் ஏன் ராஜ ராஜ சோழன் சமாதியும் செல்ல கூடாது என்று. உடனே அவரிடம் உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி எங்கு உள்ளது என்று கேட்டோம். அவர் இங்கு இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு தான் என்றார். உடனே ராஜ ராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினோம் அந்த அனுபவம் அடுத்த பதிவில் …….
இந்த மண்ணில் வாழ்ந்த அந்த பெண் தெய்வத்தை ஒரு ஒரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டும் செல்லும் வழி பட்டீஸ்வரம் கடைதெருவில் உள்ள எம் ஜி ஆர் சிலை அருகில் செல்லும் சாலையில் நேராக சென்றால் ஒரு ராமர் கோவில் வரும் அதை கடந்து சென்றால் சிறிது தூரத்தில் இடது பக்கம் ஒரு சாலை செல்லும் அங்கே இது பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோவில் செல்லும் வழி என்று ஒரு பதாகை இருக்கும். அது வழியே சென்றால் சிறிது துரத்தில் உள்ளது. அதை நீங்கள் ராமலிங்க சாமி கோவில் என்றோ அல்லது மசூதி பாகத்தில் உள்ள சிவன் கோயில் என்றோ கேட்டால் வழி சொல்வார்கள்.
-கணேஷ் அன்பு
-
[…] நம் தோழர் கணேஷின் இக்கட்டுரையை (http://www.mythanjavur.com/2014/02/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E… ) படித்து சிறிது மனதை தேற்றி […]
Leave a Reply to இளங்குமரன் தா Cancel reply
பள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் !!!!!
@Ganesh Anbu அருமையான பதிவு. நாங்களே கோயில் நோக்கி சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள். ராஜராஜ தேவர் பள்ளிப்படை கோயில் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. சீக்கிரம் பதியுங்கள்.
Anbu Arasuவிடம் மேலும் சில படங்கள் உள்ளதை பார்த்தேன். அவற்றையும் இங்கே இணைக்குமாறு வேண்டுகிறேன்.
Musique Lounje- sure…soon i upload all pics…thx
Panchavanmadevi padangal inaithu viten anbu share pana padanga neraiya udaaiyalur raja Rajan Samanthi padangal athai patri pogirum poluthu antha padangalai inaikiren
சிறந்த தேடல் நண்பா. வாழ்த்துக்கள்.
பள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் !!!!!
Musique Lounje உங்கள் வாழ்த்துகளுக்கும் உற்சாகமூட்டும் வரிகளுக்கும் நன்றி
உங்கள் பயண கட்டூரை மிகவும் அருமை நண்பரே ! நமக்கு பிடித்துப்போன பச்சிளம் குழந்தை நம் சுண்டுவிரல் பிடித்து அழைத்து கொண்டோடி யானையின் அழகை வர்னித்ததொரு சுகம் உங்கள் எழுத்துகளில் உணரமுடிந்தது …அருமை. பயணம் தொடர வாழ்த்துக்கள் ….!
சிறப்புவாய்ந்த இந்த பெண்தெய்வம் இப்படி கேட்பாடற்று கிடப்பதை எண்ணி மனம் உறுத்துகிறது….என்னை பாதித்த வரிகள்..
உற்சாகம் தரும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே
'Good effort. Congrats' Great to remember the historical facts of the descendents of Vijayaalaya cholan.Hope the "Vanathi" character in 'Ponniyin Selvan' is 'Panchavan Maathevi'…Is it correct?Thank you.
அனைத்து படங்களிலும் உயிர் உள்ளது தோழரே…. நேரில் சென்று பார்த்து வந்தது போல் தோன்றுகின்றது….. மிகவும் அருமையான பதிவு…. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது.. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருகின்றேன்.. ஒரு அன்பு வேண்டுகோள் …அடுத்த பதிவை விரைவில் பதிவு செய்யவும்…
வெகுவிரைவில் அடுத்தபகுதி வரும் இந்த பயணக்கட்டுரை கொஞ்சம் மக்களிடம் சேரட்டும் அடுத்த கட்டுரையை இன்னும் சில தினங்களின் பகிர்கின்றேன்
கணேஷ் 'அன்பு'க்கே அன்பு வேண்டுகோள்…. :)))
Senthil Ashokkumar என்ன வேண்டுகோள்
நல்ல பதிவு. உடையார் நாவல் இன்னும் வாசிக்கவில்லை. உடனே வாசிக்கணும் போல இருக்கு.
நல்ல பதிவு. உடையார் நாவல் இன்னும் வாசிக்கவில்லை. உடனே வாசிக்கணும் போல இருக்கு.
நல்ல பதிவு. உடையார் நாவல் இன்னும் வாசிக்கவில்லை. உடனே வாசிக்கணும் போல இருக்கு.
mudinthal ennaium alaithu sellungal…. call me on this number 9789999299….
அருமையா இருந்துது டா. அங்க அங்க புகைப்படங்கள் போட்ருந்தது நானே போய் நேர்ல பாத்த மாதிரி இருந்துது. தமிழ் வரலாறுகள தேடி தேடி போற ல? சந்தோசமா இருக்கு.. இத தொடர்ந்து பண்ணிடே இரு. இன்னும் நெறைய பதிவுகள் எழுது.. வருங்காலத்துல எல்லாம் கோர்த்து புத்தகமா போடு நல்லா இருக்கும். நீ அப்பா வோட வாரிசுன்னு நிருபிக்ர… பாக்கவே சந்தோசமா இருக்கு… இதை விட மனசுக்கும் ஆத்மாவுக்கும் திருப்தி தர கூடிய விஷயம் எதுவும் இல்ல… நானும் இந்த மாதிரி தமிழ் தேடல்கள் ல ஆர்வம் உள்ளவ தான். ஆனா என்னால இப்படி நெனச்ச இடத்துக்கு நெனச்ச நேரத்துக்கு போக முடியாது. நீ போறது மனசுக்கு சந்தோசமா இருக்கு…உனக்கு கெடச்ச நண்பர்களும் அதே மாதிரி இருக்கறது இன்னும் சந்தோஷம்.. அவங்களோட சேந்து இன்னும் நெறைய இந்த மாதிரி தமிழ் வரலாற்று தளங்களுக்கு நெறைய போ. கண்டிப்பா எனக்கும் போன அனுபவத்த சொல்லு நானும் சந்தோச படுவேன். எனக்கு நாம 3 பெரும் நெறைய கோவில்களுக்கு போனதும் சிற்ப கலை பத்தி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணதும் ஞாபகம் வந்துருச்சு… ஒரு ஒரு தடவ நீ ஊருக்கு வரும் போதும் இந்த மாதிரி தேடல்கள தொடர்ந்து பண்ணிடே இரு. உன்னால முடிஞ்சா சிற்ப கலை பத்தியும் அந்த கலைங்கர்கள் பத்தியும் நெறைய தகவல்கள் சேகரி அவங்களுக்கு உன்னால ஆன உதவிய செய். என்னால எதாவது செய்ய முடிஞ்சா என் கிட்ட சொல்லு நானும் கண்டிப்பா உதவுவேன்.
மிக்க நன்றி ரம்யா உன் வார்த்தைகள் மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது நன்றி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்
Ganesh Anbu சார் நாங்க தர்மபுரி மாவட்டம் இங்கிருந்து வருவதற்கு வழி கூறினீர்கள் என்றால் நல்லது.
சார் நாங்க தர்மபுரி மாவட்டம் இங்கிருந்து வருவதற்கு வழி கூறினீர்கள் என்றால் நல்லது. ராஜா ராஜன் சமாதி பார்க்க வேண்டும் என்பது என்னுடைய அவா
ராஜா ராஜன் சமாதி பார்க்க வேண்டும் என்பது என்னுடைய அவா
பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை ஆலயம் செல்ல நீங்கள் தர்மபுரியில் இருந்து தஞ்சாவூர் வந்து தஞ்சையில் இருந்து பட்டீஸ்வரம் செல்ல வேண்டும், படீஸ்வரத்தில் இருந்து எப்படி செல்ல வேண்டும் என்றும் அந்த பதிவிலே குறிபிட்டு உள்ளேன்
இது ராஜ ராஜ சோழன் சமாதிக்கு சென்று வந்த பயணக்
கட்டுரையை படித்து உங்கள் கருத்தை பதியவும்
http://www.mythanjavur.com/2014/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
இது ராஜ ராஜ சோழன் சமாதிக்கு சென்று வந்த பயணக்
கட்டுரையை படித்து உங்கள் கருத்தை பதியவும் http://www.mythanjavur.com/2014/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
Ganesh Anbu thank you sir i am a teacher worked in dharmapuri district (ssa)
(Y)
அருமையான பதிவு ….நேரில் சென்று வந்ததோர் உணர்வை ஏற்படுத்திட்டீங்க, கணேஷ்….இடை இடையே வரும் படங்கள் கட்டுரைக்கு மேலும் அழகூட்டுகிறது.தொடரட்டும் உங்கள் தேடல் மற்றும் எழுத்து பணி…வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு, ஊக்கம் தரும் உங்கள் வரிகளுக்கும் மிக்க நன்றி
தேர்வு நேரமாக இருந்தாலும் படித்து முடித்துவிட்டேன்… கருத்தினைத் தாமதமாக எழுதுகின்றேன்…
நன்றி ஐயா, இது பகுதி 2 இதையும் படிக்கவும் இது ராஜ ராஜ சோழன் சமாதிக்கு சென்று வந்த பயணக்
கட்டுரையை http://www.mythanjavur.com/2014/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
arumaiyana katturai nantri
nandri …..paguthi 2 um padikavum http://www.mythanjavur.com/2014/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அவசியம் படிக்க வேண்டிய நாவல் உடையார். என்னுடைய பயணத்தின் 2 வது பகுதியையும் படியுங்கள் http://www.mythanjavur.com/2014/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
கண்டிப்பாக அடுத்தமுறை செல்லும் பொழுது உங்களையும் அழைத்து செல்கிறோம்………… என்னுடைய பயணத்தின் 2 வது பகுதியையும் படியுங்கள்
http://www.mythanjavur.com/2014/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
Ganesh Anbu நன்றி. அவசியம் உடையார் நாவல் படிக்கிறேன்…
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என்னுடைய பயணத்தின் 2 வது பகுதியையும் படியுங்கள் http://www.mythanjavur.com/2014/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
7871767772 அழையுங்கள் வழி சொல்கிறோம்
Ganesh Anbu இது தான் எனது உயிரும் தேடலும். எங்கு உடையார் என்ற நுரல்கிடைக்கும். மிகவும் அழகாக எழுத்து பாராட்டுக்கள்
எதாா்த்தமாக உங்கள் பதிவை காண நோ்ந்தது சகாேதரரே. மகிழ்ச்சி அடைந்தேன். நான், என் கனவர் மற்றும் என்னுடைய தாயார் என நாங்கள் மூவரும் உடையார் புதினத்தை படித்து முடித்தோம். படித்து முடித்தப்பின் எஙகள் மனநிலை உங்களின் மனநிலையோடு ஒத்துப்போய் இருந்தது. ஆச்சர்யம்தான். ஐயன் பாலகுமாரன் அவர்கள் எழுத்தின் மாயையை என்னவென்று சொல்ல. தாங்கள் கண்டுவந்து விட்டீர்கள். எங்களுக்கு சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை. தங்கள் பதிவிற்கு நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.
Thanks
Thanks
நானும் துபையிலிருந்து வருட விடுமுறைக்கு திருச்சி வந்தபோது பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை தரிசிக்க வேண்டி பட்டீஸ்வரம் மொத்தமும் சுத்தி வந்தேன். யாருக்கும் விவரம் சரியாக தெரியவில்லை. என் மனைவி போதும் திரும்பி போகலாம் என்று சொல்ல நானோ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை தரிசிக்காமல் பட்டீஸ்வரம் விட்டு போகப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தேன். பாலகுமாரனின் உடையார் நாவலின் தாக்கம் தான் பஞ்சவன் மாதேவி…இறுதியில் ஒரு முஸ்லீம் அன்பரின் வழிகாட்டுதலில் பஞ்சவன் மாதவியின் பள்ளிப்படையை தரிசித்தோம். நன்றி …
Thanks for the comment
காண்டாக்ட் நம்பர்கள் இங்கு தரலாமே… நானும் சரியான இடம் அறிந்து போய்வர ஏதுவாக இருக்கும்.
நான் இந்த முறை (சென்ற வாரம்) பட்டீஸ்வரம் சென்று அங்கிருந்து பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக்குச் செல்லலாம் என்று பார்த்தால், ஓட்டுநர் என்னை கீழ்ப்பழையாறை சிவன் கோவிலுக்குக் கூட்டிச் சென்றுவிட்டார். அங்கிருந்தவர், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பட்டீஸ்வரத்தின் அருகில்தான் மசூதி தெருவில் இருக்கிறது என்று சொன்னார், ஆனால் திரும்பவும் போக முடியவில்லை.
ஐயப்பன் போன்றோரது எண்கள் இங்கு கொடுக்கலாமே… நான்காம் தமிழ்ச்சங்கம் எண் வேலை செய்யவில்லை.