October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / என்றென்றும் பதினாறு…. உந்தன் வரலாறு….

என்றென்றும் பதினாறு…. உந்தன் வரலாறு….

40

எழுத  தொடங்கும்  முன்னரே   ஐயம்!!!

முதலாவதாக  எதை   எழுதுவது ?

ஆயிரத்தில்  ஒருவனை  பற்றியா?

இல்லை  அவன்  எழுப்பிய

ஆயிரம்  ஆண்டு   கடந்து  நிற்கும்

தென்  கயிலாயத்தை  பற்றியா?

அடுத்த  கணமே  வென்றான்  அருள்மொழி..

மாயங்கள்  புரிந்தது  கடவுள்கள்  மட்டும்  இலர்..

நம்  பொன்னியின்  புதல்வனும்  தான்

இப்போது  வேறு  வகை  ஐயம்!!!

இது  தான்  காதலின்  வெளிபாடோ?

காதலின்  வெளிபாடோ?

இல்லை

காலத்தின்  கட்டாயமோ?

எதுவாயினும்  என்  அகராதியில்

திருமுறை  கண்டவனுக்கே  முதல்  இடம்

சுந்தர   புதல்வா…    சோழர்  குடி  திலகா…

உன்  பெயர்  கூற,  தீந்தமிழும்  தித்திக்கும்  தேனோ?

புலி கொடி  கொண்டவா….   தனி பெருமை  பூண்டவா…

உன்  புகழ்  பாட, இனியொரு  பிறவி  எடுப்பேனோ ?

ஆடல்கலை  வளர்த்தவா…   அறத்தொண்டு  புரிந்தவா…

உன்  கலைத்திறனுக்கு,  உவமை  ஒன்று  கூறேனோ?

வான்  புகழ்  சோழா…  ஆலிலை  காதலா…

தமையன்  ஆன்மத்துயர்  தீர்த்த, உன்  அறம்  பாடேனோ?

குடி  காத்த  கோமகனே!!!

உன்னை  ஜாதிக்குள்  வைத்து

இங்கு  நித்தம்  நூறு  யுத்தம்…

காலத்தால்  விளக்க  முடியாத

கலைச்சக்கரவர்த்தியடா  நீ

அதை  இக்கானகத்து  மனிதர்கள்

உணரும்  நாள்  எந்நாளோ?

எந்நாட்டவர்க்கும்  இறைவனை

தென்னாட்டில்  வைத்து

என் நாட்டு  கலையுணர்வை

பன்னாடு  அல்லாமல்

பார்  புகழ  செய்த

உன்  திருவடி   துதிப்பேனோ?

கரு:

காரணம்:

இது முழுவதும் ராஜ ராஜன் மேல் கொண்ட காதலால் எழுத பட்டது … எனக்கு  மட்டும் அல்ல பொன்னியின் செல்வன் படித்த ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் அவன் மேல் அன்பு வரும்.

பொன்னியின் செல்வன்:

நம் ராஜ ராஜனுக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் வர காரணமான அந்த நிகழ்வு படிப்போரை சிலிர்க்க வைக்கும். அதன் முலம் காவிரியின் காதலையும் புரிந்து கொள்ளலாம். இயற்பெயர்  அருள்மொழி, எங்காவது இப்பெயரை படிக்கும் போது ஒரு ஆனந்தம் உடல் எங்கும் பரவும்.

மெய்க்கீர்த்தி:

அவருடைய மெய்கீர்த்திகள் பல. திருமுறை கண்ட சோழன், உலகளந்தான், கேரளாந்தகன், பாண்டிய குலசாணி என்பவை சில. நாட்டியத்தின் மீது இவருக்கு உள்ள காதலால் ஆடல் கலை வளர்த்தவன் என்றும் புகழப்படுகிறார்.

பெரிய கோவில்:

ராஜ ராஜன் என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். காலத்தால் அழிக்க முடியாத கற்றாலி அது. ஆயிரம் வருடங்கள் கடந்தும் அழியாமல் நிற்கும் கல் ஓவியம் அது. கோவிலை பற்றி இன்னும் தெளிவாக நம் நண்பரின் கட்டுரை தொகுப்பை படிக்க விளங்கும். (http://www.mythanjavur.com/2014/02/cholan-payanam/ ). அதனினும் அருமையாக எழுத யான் அறியேன்.

அரண்மனை :

மாறவர்ம பாண்டியன்  மீதான என் கோபத்தை எப்படி விவரிப்பது. நம் பொன்னியின் செல்வன் வாழ்ந்த இடத்தை , அந்த காவிய புதல்வன் சுற்றி வந்த மாட மாளிகைகளையும், கோபுரங்களையும் கண்டு மகிழும் பாக்கியத்தை இழந்த நாம் அனைவரும் துர்பாக்கியவாதிகளே. அரண்மனை பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் http://www.mythanjavur.com/2014/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-2/ .

 

மெய்மறந்த இடங்கள்:

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வங்கி அமைத்தவர், நிலங்களை அளந்து வகை  படுத்தியவர்.  சிட்டிசன் திரைப்படம் அனைவர்க்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறன். அப்படத்தில் வழங்கப்பட்ட தண்டனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் பொன்னியின் செல்வனால் ஆதித்த கரிகாலனை (ராஜ ராஜனின் தமையன்) கொன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலகுமாரனின் உடையார் நாவலில் இத்தகவலை படிக்கும் போது ஒரு கணம் மெய் மறந்து நின்றேன்.அவர்களுக்கு நம் காவிய புதல்வன் வழங்கிய தண்டனைகள் குறித்த விவரம் இப்பகுதியில் உள்ளது ( http://thanjaimainthan.blogspot.in/2013/07/blog-post_6.html ). படித்து பரவசமடயுங்கள்.

மனக்குறை:

நம் கேரளந்தகனின் பள்ளிப்படை நம் ஊரில் இருந்தும் பார்க்க அவன் அருள் கிடைக்கவில்லை . எனினும் நம் தோழர் கணேஷின் இக்கட்டுரையை (http://www.mythanjavur.com/2014/02/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/ ) படித்து சிறிது மனதை தேற்றி கொள்ளலாம்.

என் கருத்து:

இவர் சென்ற இடமெல்லாம் ஜெயம் தான். ராஜ ராஜனை புகழ்ந்து பாட இன்னும் எவளவோ உள்ளது, ஆனால் இன்று அவரையும் ஜாதிக்குள் வைத்து சண்டை போட்டு கொள்கிறோம். ஒரு சாரார்  தேவர் என்றும் மற்றொரு சாரார் உடையார் என்றும் விவாதம் செய்கின்றனர்.  இது போன்ற  தேவையற்ற விவாதங்களை தவிர்த்து அவரின் புகழை கூறும் “பொன்னியின் செல்வன்”, “உடையார்” போன்ற நூற்களை படிக்கலாமே.

“பொன்னியின் செல்வன்”, “உடையார்” நாவல்கள் நம் NOT-E (http://www.mythanjavur.com/e-library/)  நூலகத்தில் உள்ளது. இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம், அல்லது இந்த  ( http://books.tamilcube.com/tamil/ ) இணைய தளத்தில் இருத்தும் தரவிறக்கி கொள்ளலாம். தஞ்சையில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்கள் .

பொன்னியின் செல்வன் நூலை எனக்கு அறிமுகப்படுத்தி இ புத்தகம் கொடுத்த என் ஆருயிர் தோழி கவியரசிக்கு நன்றிகள் பல.

என்னையும் எழுத வைத்த, என் தாத்தாவிற்கும், உடன் பிறவா தமக்கைக்கும் மற்றும் அன்புக்குரிய நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.

நன்றி

–ஜெயா


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273