October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / சங்கத் தமிழ் மூன்றும் தா … !

சங்கத் தமிழ் மூன்றும் தா … !

16

அன்பிற்கினிய தமிழ் மக்களுக்கு, என் வணக்கங்கள். MyThanjavur வலைதளத்தில் என் முதல் பதிவு இது. இன்றைக்கு தான் பிள்ளையார் சுழி இட்டு ஆரம்பிக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் நாடுகிறேன்.

சரி சரி, விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் சில அரிய தகவல்களை அறிய போகிறோம். என்ன எல்லாரும் முழிக்குறீங்க ? தயவு செய்து மேலே படிங்க !


தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள்

பழங்கால மரபிலக்கியப் படி, பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் தோற்றுவித்து தமிழ் மொழியை வளர்த்தார்கள். கூடவே , தமிழ் மொழி புலமையையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் போற்றினார்கள். பண்டைய தமிழர்களின் அக புற ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குவதே சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே !

அச் சங்கங்களை மூன்று வகையாக தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என பிரித்தனர்.

அவற்றை பற்றிய அரிய தகவல்கள், இதோ இங்கே !

சங்கத்தின் பெயர் : தலைச் சங்கம்

நிறுவுனர் : அகத்திய முனிவர்

தலைவர் : விரிசடைக் கடவுள்

அமைவிடம் : தென் மதுரை

தென் மதுரை பற்றிய ஒரு சிறு குறிப்பு : கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்தில் அமையப் பெற்ற இந்த மாநகரம் தென் மதுரையானது, பாண்டிய அரசர்களின் முதல் தலை நகரம் ஆகும்.

தொடக்கம் : கி.மு. 9000 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம் : 4400 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை : 4449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல் : அகத்தியம்

படைக்கக்பெற்ற நூல்கள் : பரிபாடல், முதுநாரை’, முதுகுருகு, களரியாவிரை

ஆண்ட அரசர்கள் : 89 பேர் ; ‘காய்சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ வரை

ஆறு : பஃறுளி ஆறு

மலைத் தொடர் : பன்மலை அடுக்கு

ஆதாரங்கள் :

தலைச்சங்கம் பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் கி.மு. 2387 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளாறினால் அழிந்திருக்கும் என்பதே வருந்தத்தக்க செய்தியாகும்.

 

சங்கத்தின் பெயர் : இடைச் சங்கம்

அமைவிடம் : கபாடபுரம்

கபாடபுரம் பற்றிய ஒரு சிறு குறிப்பு : கபாடபுரம் பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் ஆகும். இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்திலே தான் அமைந்து இருந்தது.

தொடக்கம் : கி.மு. 4600 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம் : 3700 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை : 3700

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள் : அகத்தியம், பூதப்புராணம், இசை நுணுக்கம், மாபுராணம், தொல்காப்பியம்

படைக்கக்பெற்ற நூல்கள் : கலி, குருகு, வெண்டளை, வியாளமலை அகவல்.

ஆண்ட அரசர்கள் : 59 பேர் ; ‘வெண்தேர் செழியன்’ முதல் ‘முட்டதுத் திருமாறன்’ வரை

ஆதாரங்கள் :

இந்த சங்கம் இருந்தமைக்கு ஆதாரங்கள், வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்தசாத்திரம் நூலில் கௌடில்ய மகரிஷியும் இதை பற்றி எழுதி உள்ளார். இச் சங்கம் மூன்றாம் கடற்கோளால் அழிந்தது. தொல்க்காப்பியத்தை தவிர ஏனைய நூல்கள் அனைத்தும் அழிந்தன.


சங்கத்தின் பெயர்
: கடைச் சங்கம்

நிறுவனர் : பாண்டியன் முட்டதுத் திருமாறன்

அமைவிடம் : மதுரை ( வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தற்போதைய மதுரை மாநகர் )

தொடக்கம் : கி.மு. 900 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம் : 1850 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை : 449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள் : அகத்தியம், தொல்காப்பியம்

படைக்கக்பெற்ற நூல்கள் : குறுந்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி பரிபாடல், குத்து, வரி, சிற்றிசை, பேரிசை, திருக்குறள்

ஆண்ட அரசர்கள் : 49 பேர் ; ‘முட்டதுத் திருமாறன்’ முதல் ‘உக்கிர பெருவழுதி’ வரை. முட்டதுத் திருமாறன், கபாடபுரம் விட்டு வெளியேறி மதுரையில் ஆட்சி அமைத்தான்.

ஆதாரங்கள் :

கடைச் சங்கத்தைப் பற்றி பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்ட சின்னமனூர் கல்வெட்டு தான், தொல்லியல் துறைக்கு கிடைத்த முதல் ஆதாரம் ஆகும்.

குமரிக் கண்டம்

குமரிக் கண்டம்

முக்கிய குறிப்பு :

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் விக்கிபீடியாவில் திரட்டியது. சங்கங்கள் இருந்தது உண்மையான விடையம் ஆனாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப் படவில்லை. இன்றும் இவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்கின்றன.

நன்றி : விக்கிபீடியா


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273