January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சாவூர் அரண்மனை !!!!!

தஞ்சாவூர் அரண்மனை !!!!!

2

தஞ்சையில் இருந்த சோழர்கால அரண்மனையை பற்றிய சரியான செய்திகளோ கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை ஆனால் தஞ்சையை பற்றி பாடபெற்ற சில பாடல்களில் அரண்மனையை பற்றி குறிப்பிட்டு உள்ளனர் அவை

“இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை ” என்று கருவூறார் பாடலிலும்

“பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்” என்ற அருணகிரியார் பாடல்களின் வாயிலாகவும் மாட மாளிகை தஞ்சையில் இருந்தமை நமக்கு தெளிவாகிறது.

சோழர்கால அரண்மனை எங்கு இருந்தது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன, செக்கடிமேடு,சீனிவாசபுரம்,அப்பாசாமி வாண்டையார் காலனியை அடுத்துள்ள பகுதியாக இருக்ககூடும் என்றும் கூறுகின்றனர். இப்போதையை அரண்மனை பகுதியாகவும் இருக்கலாம் முறையான அகழ்வாராட்சி நடத்தினால் உண்மை புலப்படும்.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு மோசமான சம்பவம் நமது தஞ்சையில் நிகழ்ந்தது அது என்னவென்றால் 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சீனிவாசபுறதிற்கு அருகில் உள்ள ராசராசன் நகரில் ஒரு தனியார்க்கு சொந்தமான இடத்தில வீடுகட்ட ஒப்பந்தகாரர் ஒருவர் கடைகால் தோண்டினார் அப்பொழுது 10 அடி ஆழத்திற்கு மிக நீண்ட கற்றூண் ஒன்று கல்வெட்டுகளுடன் புதைந்து இருந்தது. கல்வெட்டுகளின் முக்கியத்துவம் உணராத அந்த ஒப்பந்தகாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து, கட்டுமானத்திற்கு பயன்படுத்த தயாராகிவிட்டார் அப்பொழுது இந்த தூணின் அருமை அறிந்த சிலர் அகழ்வாராய்ச்சியாளர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இந்து பத்திரிகையின் நிருபர் திரு வி .கணபதி அவர்களுக்கும் தகவல் அளித்தனர். இவர்கள் இருவரும் உடனே சென்று பார்த்து அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மச்சேந்திரநாதன் அவர்களின் உதவியுடன் உடைந்த கல் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு முனைவர் இரா. நாகசாமி இத்துண்டுகளை படித்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தை அறிவித்தார். தமிழக மற்றும் இந்திய தொல்லியியல் துறையினர் இக்கல்வெட்டின் துண்டுகளை படியெடுத்து பதிவுசெய்தனர், இப்பொழுது அந்த கல்தூண் தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் உள்ள ராசராசன் அருகாட்சியகத்தில் உள்ளது.

922833_659478224078813_1334688545_n

இதற்கு முன் கிடைத்த அனைத்து கல்வெட்டுகளும் திருகோவில்களுக்கும் மற்ற அரசு நடவடிக்கைக்கு உரிய சாசனங்கலே, ஆனால் தஞ்சையில் கிடைத்துள்ள இக்கல்வெட்டுப் பாடல்களோ ராசராசனின் புகழை மட்டுமே பாடுபவையாக உள்ளன.மேலும் அவரது பிற பட்டபெயர்களை கூறாது மும்மூடிசோழன் என்றே புகழ்கிறது.இக்கல்வெட்டு இடம்பெற்ற இந்த கல்தூண் அவனது அரண்மனையில் தான் இருந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம்.

இப்போதைய அரண்மனையின் பெரும் பகுதி செவ்வப்ப நாயக்கர்களால் கட்ட தொடங்கி இரகுநாத நாயக்கர்,விசயராகவா நாயக்கர் ஆகியோரார் முடிக்கப்பட்டது.விசய இரகுநாதர் காலத்தில் “விஜய விசாலம் என்றும் இரகுநாத விலாசம் என்றும் , விசயராகவன்” காலத்தில் “விசயராகவா விலாசம்” என்றும் அரண்மனை அழைக்கப்பட்டு உள்ளது.

thanjavur_palace_3

ஆயுதமகாலும் 7 மாடி 34.8 மீட்டர் உயரமுடைய மணிமண்டபமும்

 


சாகித்ய ரத்நகரம், ரகுநாத நாயக்கப் யூத யமு, மன்னாருதாச விலாசம், போன்ற நூல்களில் அரண்மனைபற்றிக் கூறப்பட்டு உள்ளன.ஆயுதமகாலும் 7 மாடி 34.8 மீட்டர் உயரமுடைய மணிமண்டபமும் வெளியில் இருந்து பார்த்தல் தெரியும் வண்ணம் உயரமாக அமைக்கபெற்றது .

சார்ஜா மாடி,கீழவீதி

சார்ஜா மாடி,கீழவீதி

கீழவீதியில் 100 அடியும் 7 மாடியும் கொண்ட சார்ஜா மாடியும்,பூசா மகாலும்,பில்லி மகாலும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடகத்திலும் மராட்டியர் காட்டியவை,தர்பார் ஹால் நாயக்கர் காலத்தில் கட்டி மராட்டியர் காலத்தில் புதுப்பித்ததாகும்.

 

கல்யாணமகால், திருவையாறு

கல்யாணமகால், திருவையாறு

மங்கள விலாசம், தெற்கு வீதி

மங்கள விலாசம், தெற்கு வீதி

இரண்டாம் சரபோசியின் மனைவிமார் தங்க திருவையாற்றில் கல்யாணமகாலும், சிவாஜியின் மனைவிமார்(42 பேர்) தங்க தஞ்சை தெற்கு வீதியில் மங்கள விலாசமும் சிறந்த அரண்மனைகலாக திகழ்ந்தன

மேற்கூறிய செய்திகள் “நெஞ்சை அல்லும் தஞ்சை” என்ற புத்தகத்தில் இருந்தும்,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “தஞ்சாவூர்” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது

நன்றி
கணேஷ் அன்பு

Showing 2 comments

Contact Us

For Immediate quires Please contact here...