October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சை மாநகராட்சியாக வளர்ந்த கதை !!!!!!!!!!!!!!!

தஞ்சை மாநகராட்சியாக வளர்ந்த கதை !!!!!!!!!!!!!!!

2

405749_353062848053687_227224950637478_1427193_1480847820_n

தஞ்சை நகரம் 1866 ஆம் ஆண்டு நகர வளர்ச்சி சட்டம் 1865 இன் கீழ் முன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போதைய நகர உறுபினர்களின் மொத்த எண்ணிக்கை 12 இது 1879 ஆம் ஆண்டு 18 ஆகவும் ,1883 ஆம் ஆண்டு 23 ஆகவும் உயர்த்தப்பட்டது.1883 ஆம் ஆண்டு நகர உறுபினர்கள் நகர தந்தையை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது.1933 இரண்டாம் நிலை நகராட்சியாகவும் 1943 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தபட்டது.1983 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல் பட்டு வருகிறது. தற்போதைய நகரின் மொத்த பரப்பளவு 36.3 km2 (14.0 sq mi) உறுபினர்களின் மொத்த எண்ணிக்கை 51. நகராட்சி நிர்வாகம் மொத்தம் ஆறு பிரிவிகளாக பிரிக்க பட்டு உள்ளது அவை பொது நிர்வாகம், வருவாய்,கணக்கு,பொது சுகாதாரம்,பொறியியல்,நகரமைப்பு என்பவையாகும். இந்த ஆறு பிரிவுகளும் நகராட்சி ஆணையரின் கீழ் இயங்கும்.மொத்தம் உள்ள 51 உறுபினர்களும் நகர தந்தை/தாய் யின் கீழ் இயங்குவார்கள்.தற்போதைய தஞ்சை நகரின் மொத்தம் உள்ள 51 வார்டுகளின் மக்கள் தொகை 2011 மக்கள் தொகை கணக்கின் படி 222619. தஞ்சை நகரை சுற்றி உள்ள 31 கிராமங்களை இணைத்து தஞ்சையை மானகராட்சியாக்க 2006 இல் நகர் மன்றத்தில் தீர்மானம் அன்றைய நகரதலைவி தேன்மொழி ஜெயபால் அவர்களால் நிறைவேற்றபட்டது பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடபட்டது.1883 இல் இருந்து சுமார் 30 ஆண்டு காலம் சிறப்பு நிலை நகராட்சியாக செயல் பட்ட தஞ்சை நகராட்சிக்கு தற்போது வயது 148(1866-2013). ராஜா ராஜா சோழனால் இந்த உலகத்திற்கே அறியப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது ………..


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273