January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / Temples

Temples

0

 வெள்ளை பிள்ளையார் கோயில்

அரசன் விஜயராகவா நாயகர் வைணவான காரணத்தால் சைவ உருவாகிய பிள்ளையே வழிபாட்டுக்கு தடைவிதிப்பார் எனக்கருதி, அதற்குப் பதிலாக, ஒரு வெல்ல அச்சினை வைத்து வணங்கி தன பணியினை மேற்கொண்டாராம் இதனை அறிந்த அரசன் அதனை அகற்ற முயன்றபோது அவ்வுரு இப்போது இருக்கும் உருவாக மாறியதாகவும் அதனால் அதற்கு “வெல்ல பிள்ளையார் ” என்று பெயரிடதாகவும், அது “வெள்ளை பிள்ளையார் ” என்று ஆனது என ஒரு கர்ண பரம்பரை செய்தி இருக்கிறது.இந்நகரில் எல்லையில் அமைக்கப்பட்டதால்
இதற்கு “எல்லை பிள்ளையார்” என்று பெயரிட்டு, அது கால வழக்கில் வெள்ளை பிள்ளையாராக மாறியதாகவும் கூறுவர்.

“வல்லப்பை” என்ற அம்பிகையோடு காட்சியளிபதாள் இவருக்கு “வல்லபைப் பிள்ளையார்” என்று பெயருண்டாயிற்று. அது கால போக்கில் “வெள்ளை பிள்ளையார்” பிள்ளையார் மட்டும் கருவறைக் கடவுளாக காட்சி அளிக்கிறார். வல்லபைக்குக் கருவறை உருவம் இல்லை. இதை நுலாசிரியார்

“வனக்கிளியே தஞ்சைவெள்ளை வாரனத்தார் நாளை
வலிமையிலே அசுரர்பெண்ணை மணம்புணர் வா ரம்மே “

புன்னைநல்லூர் .
பழையபெயர் : புன்னைவனம்

வரலாறு :

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு:
குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் “தஞ்சபுரீஸ்வரர்’ எனப்பட்டார்.

ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.

இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு “தஞ்சவூர்’ என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் “தஞ்சாவூர்’ ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

மூலை அனுமார் கோயில்

தஞ்சாவூரில் மேல ராஜவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் வாயுவின் மைந்தனுக்கு வாஸ்துப்படி தஞ்சை மன்னனால் கட்டப்பட்டது ஸ்ரீபிரதாப வீர அனுமார் திருக்கோயில். இக்காரணத்தினாலேயே பக்தர்கள் பலகாலமாக “மூலை அனுமார் கோயில்’ என்று இவ்வாலயத்தை அழைத்து வருகின்றனர். தற்போது அப்பெயரே நிலைத்துவிட்டது.

தொப்புள் புள்ளையார் கோயில்
நாணயக்கார செட்டித்தேருவின் கிழக்கே உயர்ந்த இடத்தில இருக்கிறது . தொப்ப்பைக்கு ஆரம் கேட்ட பிள்ளையார், தொப்பாரன்கட்டிப் புள்ளையார் என்ற வார்த்தை மருவி தொப்புள் புள்ளையார் கோயில் என்று ஆகி விட்டது

அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்

தல வரலாறு:
பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், “”எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் “தஞ்சமாபுரி’ எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

Contact Us

For Immediate quires Please contact here...