May 23, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / நம்ப ஊரு ஸ்பெஷல் – Asoka Halwa

நம்ப ஊரு ஸ்பெஷல் – Asoka Halwa

10

திருவையாறு அசோகா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு : 200 கிராம்
பயத்தம் பருப்பு : 50 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
நெய் : 100 கிராம்
முந்திரிபருப்பு : 5
ஏலக்காய் : 3
ஃபுட் கலர் : தேவையான அளவு

செய்முறை:
முதலில் பயத்தம்பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்து தனியே வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் கோதுமை மாவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கோதுமை நன்கு வெந்ததும், வேகவைத்த பயத்தம் பருப்பு, நெய் கலந்து, இந்த கலவை நன்கு சுருண்டு வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்கவும். இதன்மேல் சர்க்கரையை கலக்கவும். ஒரு சிறிய கரண்டி பாலில் ஃபுட் கலர் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அசோகா கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன் இந்த ஃபுட் கலர் கலந்த பாலை ஊற்றி நன்கு கிளறவும். வறுத்து வைத்த முந்திரி பருப்பு, பொடித்து வைத்த ஏலக்காய் மேலே தூவி பரிமாறவும்.

இந்த அசோகா தஞ்சை மாவட்டத்தில் மிகப் பிரபலமான இனிப்பு வகை. அசோகாவின் பூர்வீகம் திருவையாறு. திருவையாற்று காவேரி தண்ணீரில் செய்யும்போது இதன் ருசியே அலாதியாக இருக்கும். திருவையாறு தியாகராஜ ஆராதனைக்குச் சென்று பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை செவிக்கு உணவாகவும், அசோகாவை வயிற்றுக்கு உணவாகவும் பெற்று வரலாம். உள்ளம் அமைதிபெற ஐய்யாரப்பரை தரிசித்து வரலாம்.

காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், வீட்டு விசேஷங்களிலும் கல்யாணங்களிலும் சாப்பாட்டு மெனுவில் கட்டாயம் இந்த அசோகா இடம்பெறும். பொதுவாக அல்வா என்றால் கோந்து பதத்தில் கொஞ்சம் மென்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும். அசோகாவை சாப்பிடும்போது அதன் ருசியில் மனம் கரையும்போதே, நாவில் கரைந்து தொண்டைக்குள் சென்றுவிடும்.

 Asoka Halwa is famous in Tanjore district.This is also famously called as “Thiruvaiyar Halwa” . I bet, definitely you would come across this Halwa in every wedding that happen in Tanjore side.This Halwa has protein from Moong dhal and fibre content from wheat flour.

Ingredients:

1.Moon Dhal – 1 Cup
2.Wheat Flour – 1 Cup
3.Sugar – 1 1/2 Cups (More or less depending on your taste)
4.Ghee – 1 Cup
5.Cahsew – 1/4 Cup
6.Cardamom – 5
7.Kesari powder – 1/2 tsp

Procedure:

1.First of all,cook moong dhal with enough water till it is soft.Mash the dhal and keep aside.
2.In a pan,add little ghee and roast cardomom and cashew.Keep aside.
3.In the same pan,add wheat flour and roast it for some time.
4.Now,add water to the wheat flour and make it to a paste without lumps.
5.Stir well and cook the paste under medium flame for 5-10 minutes.
6.Add the mashed moong dhal to the cooked wheat paste.Keep stirring.
7.Add sugar and kesari powder.Mix the contents well.
8.Add half-a-cup of ghee,so that the halwa will not stick to sides.Keep stirring.
9.When the cooking is almost done add the roasted cardamom and cashew. (When you take the halwa with your thumb and index finger,it should not stick to your fingers)
10.Now,add the remaining ghee and mix well.
11.Take out the Halwa from the stove and serve hot.


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273